அமுக்கன்
பொருள்
அமுக்கன்(பெ)
- ஒளிவு மறைவுடன்(இரகசியமாகச்) செயல்படுபவன்
- கபடமுள்ளவன், கபடன்
- தூக்கத்தில்(நித்திரை)யில் அமுக்கும் பிசாசு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- பலர் தூங்கும் பொழுது திடீரென்று 'பயந்து' விடுவது வழக்கமாக நடக்கும் ஒன்றுதான். இது, தூங்குபவர், தனது கனவில், ஒரு பாம்பு துரத்திவந்து கடிப்பதைப் போலவோ, ஆழ் கிணற்றில் தள்ளிவிடப்படுவதைப் போலவோ, அல்லது 'பிசாசு' போன்ற கொடிய பயமேற்படுத்தும் ஒன்று தன் முன்னாள் தோன்றுவதைப்போலவோ ஒரு காட்சியைக் கண்டால் திடீரென்று ஏற்படும் ஒரு பய உணர்வாகும். இந்த உணர்வு ஏற்பட்டவுடன் சிலர் விழித்துக்கொள்வர்; சிலர் தொடர்ந்து தூங்குவர்.
பயன்பாடு
- நீங்கள் மௌனமாக இருப்பதால், உங்கள் மனசில் என்ன நினைக்கிறீர்கள் என்று கண்டுபிடிக்க முடியவில்லை... மற்றவர்கள் உங்கள் காதுபடவே 'அமுக்கன்’ என்று பேசுகிறார்கள். (ஹாய் மதன் கேள்வி-பதில், ஆனந்தவிகடன், 16-மார்ச் -2011)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---அமுக்கன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +