ஆகூழ்
தமிழ்
தொகுபொருள்
தொகு- ஆகூழ், பெயர்ச்சொல்.
- நற்பேறு; ஏதோ நல்வாய்ப்பாலோ 'முன்வினை' எனக்கருதும் பயனாலோ வர நேரும் நல்ல விளைவு. கொடுப்பினை.
- ஆக்கத்திற்குக் காரணமான வினை
- ஆகூழாற் றோன்று மசைவின்மை (திருக்குறள் - 371)
- ஆகு- + ஊழ் → ஆகூழ் (இயைவு)
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
- destiny that causes prosperity
- luck
பயன்பாடு
- நானென்ன தமிழ் படித்துக் கிழித்தேன்? நான் கற்றது, நாலு காசு பெறாது. ஆயினும், நாலு காசு பெறாத தமிழை வைத்துக்கொண்டு நான் சம்பாதிக்கும் காசுக்கு நாற்பத்தைந்தாண்டுக்கும் மேலாக, வருமான வரி கட்டி வருகிறேன். கல்லாடமும், காரிகையும் கற்றோர் எல்லாம் மல்லாடிக் கொண்டிருக்கின்றனர் வாய்க்கும் கைக்கும் எட்டாமல்! என் மேல் மட்டும் என்னணம் இந்தப் புகழ் வெளிச்சம் பூத்தது? அதுதான் ஆகூழ்! ஆழாக்குக் கூழ் அற்றவனையும் ஆகூழ் ஆக்கும் - ஆயிரம் வேலிக்கு அதிபதியாக! (நினைவு நாடாக்கள், வாலி, ஆனந்தவிகடன், 07-செப்டம்பர்-2011)
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஆகூழ்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி