உற்பனம்
பொருள்
உற்பனம்(பெ)
- விரைவில் அறிகை
- உற்பனமாகக் கிரகிக்கிறது
- உத்தமம்
- அவரிடத்தில் உற்பனமான காரியங்களுண்டு.
- தோன்றியது, உற்பத்தி செய்தது
- உற்பன வேதத் திருப்பொருளை (இரகு. அரசி. 4).
- உற்பன்னம், பிறப்பு
- ஞானம்
- உற்பனத்தை யெண்ணி யுருச்செபித்தேன் (விறலிவிடு. 596).
- விற்பன்னம், கல்வி
- நிமித்தம்.
- இவ்வகை யுற்பனங் காட்ட (விநாயகபு. 75, 125).
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- quick apprehension
- excellence, exquisiteness
- that which is born, produced
- birth, production, origin
- knowledge
- learning
- omen
விளக்கம்
பயன்பாடு
- உன் வியாதிக்கு இந்த மருந்து உற்பனம் - this is the proper medicine for your disease
- உற்பன்னமான மருந்து - medicine of extraordinary qualities.
(இலக்கியப் பயன்பாடு)
- உற்பன ஞானப் பொருளேகுற் றாலத் துறைபவனே(குற்றாலக் குறவஞ்சி)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---உற்பனம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +