ஊசலாட்டம்
பொருள்
ஊசலாட்டம் ,
- ஊஞ்சலாடுகை; ஊஞ்சலாட்டம்
- முன்பின் போக்குவரத்து; ஏற்ற இறக்கம்; தடுமாற்றம்; உறுதிப்பாடின்மை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- swinging
- going backward and forward; fluctuation; vacillation; unsteadiness
விளக்கம்
- ஊசலாட்டம் = ஊசல் + ஆட்டம்
பயன்பாடு
- ஊசல் என்னும் ஊசலாட்டம் இன்று ஊஞ்சல் எனப்படுகின்றது. மரக்கிளைகளில் அல்லது வீடுகளில் உயர்விட்டங்களில் கயிறுகளால், கொடிகளின் தண்டுகளால் ஊஞ்சல் கட்டி அதில் அமர்ந்து ஆடி மகிழ்தல் ஆகும். இதில் பெரும்பாலும் பெண்களே பங்கேற்பர். ([1])
- செம்மொழித் தமிழ் மாநாடு பற்றிய தங்களது கருத்துக்கள் - தங்களின் ஈரெட்டான நிலையை வெளிப்படுத்தியுள்ளன. தங்களின் உறுதிப்பாடற்ற, ஊசலாட்டம் எங்களைத் தடுமாற்றங்களுக்கு கூட்டிச் செல்கிறது. (செம்மொழித் தமிழ் மாநாடு - இன்னுமொரு டிஜிட்டல் விளம்பரம், சூரியதீபன், கீற்று)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---ஊசலாட்டம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +