ஐந்நூறு
ஐந்நூறு (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- ஐந்து + நூறு = ஐந்நூறு
- படித்தவர்களும் ஐந்நூறு என்னும் சொல்லை ஐநூறு என்றெழுதுகிறார்கள். இதழ்களில் வருகின்ற கவிதைகளில் கதைகளில் இச்சொல்லைப் பலமுறை பார்க்க நேர்கிறது. ஐந்து + நூறு= ஐந்நூறு ஆதல் இலக்கண நெறி. "ஐ! நூறு' என்று வியத்தல் பொருளில் ஐநூறு விளங்குகிறது. ஐ - நூற்றை விட்டு இனி, ஐந்நூற்றைப் பிடிப்போம். (மொழிப் பயிற்சி - 21: பிழையின்றித் தமிழ் பேசுவோம் - எழுதுவோம்!, கவிக்கோ ஞானச்செல்வன், தினமணிக்கதிர், 2 சன 2011)
- மூன்று + நூறு= முந்நூறு. (முன்னூறு - பிழை) மூன்று எனும் நிலைமொழியில் இறுதி "று" வும் இடையில் "ன்"னும் கெட்டு, "மூ" எனும் நெடில் "மு'"எனக் குறுகி, திரிந்து, மு+நூறு - முந்நூறு (ந் - தோன்றல் விதி) என்றாயிற்று. இச்சொல்லில் கெடல், திரிதல், தோன்றல் மூன்று இடம் பெற்றுள்ளன. ஐந்து + நூறு - ஐந்நூறு என எழுதிட வேண்டும். இறுதி (து) கெட்டு "ந்" - உம் கெட்டு, நூறு சேரும்போது மீண்டும் "ந்" தோன்றி ஐந்நூறு ஆகிற்று. ஐநூறு எனில் பிழை. (பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!, தினமணிக்கதிர், 16 அக் 2011)
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---ஐந்நூறு--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:பத்து - நூறு - ஆயிரம் - பத்தாயிரம் - இலட்சம்