கணிச்சி
பொருள்
கணிச்சி (பெ)
- மழு
- மாற்றருங் கணிச்சி மணிமிடற்றோன் (புறநா. 56, 2).
- குந்தாலி
- கணிச்சிகளிற் கயம்பட நன்கிடித்து (சீவக. 592).
- யானைத் தோட்டி
- உளி
- கோடாலி
- இலைமூக்கரி கத்தி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- battle-axe
- kind of pick-axe for breaking stone
- goad for urging the elephant
- chisel
- axe, hatchet
- knife for cutting the stalk of the betel
விளக்கம்
பயன்பாடு
- .
(இலக்கியப் பயன்பாடு)
- மருந்தில் கணிச்சி வருந்த வட்டித்து (புறநா. 42)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கணிச்சி--- DDSA பதிப்பு + வின்சுலோ +
நவியம், கோடரி, குந்தாளி, குந்தாலம், குந்தாலி, கொந்தாலி, பரசாயுதம், பரசு