கன்னிகாதானம்

தமிழ் தொகு

 
கன்னிகாதானம்:
மணமகன் மணப்பெண்ணை தானம் பெறுகிறார்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • கன்னிகாதானம், பெயர்ச்சொல்.
    • புறமொழிச்சொல்--சமசுகிருதம்-- कन्यकादान--க1ந்யகா1தா3ந--மூலச்சொல்
    • (கன்னிகா+தானம்)
  1. கன்னியை ஆடவனுக்கு மணம்புரிந்து கொடுக்கும் அறம் (பிங். )
  2. முப்பத்திஇரண்டு அறங்களில் ஒன்று..
  • திருமணச் சடங்குகளில் ஒரு முக்கிய நிகழ்வு கன்னிகாதனம்...இது மணப்பெண்ணின் தந்தை தன் மகளின் வலக்கையை மணமகனின் வலதுக்கையின் மேல் வைத்து, அவ்வேளையில் ஓதப்படும் மந்திரங்கள், அக்கினி சாட்சியாக, அவளை தானமாக மணமகனிடம் ஒப்படைப்பதாகும்...இதன்படி அந்தப்பெண்ணிற்கு திருமணத்திற்குப் பின்னும்,ஒரு மகளுக்காக தான் ஆற்றவேண்டிய ஒரு சில கடமைகளைத் தவிர,அவள் மேலுள்ள உரிமைகளை இழக்கிறார்... அந்தப்பெண்ணிற்கு செய்யவேண்டிய பொறுப்புகள், கடமைகள் மற்றும் உரிமை முதலியன அவள் தந்தையிடமிருந்து அந்தப்பெண்ணின் கணவனான மணமகனுக்கு மாறுகிறது...இந்துச்சமயத்தில் திருமணத்தை மணப்பெண் தரப்பிலிருந்து கன்னிகாதானம்/கன்னியாதானம் என்றும், மணமகன் தரப்பிலிருந்து பாணிகிரகணம் என்றே குறிப்பிடுவர்...


மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. giving away a virgin in marriage one of muppattiraṇṭaṟam..முப்பத்திரண்டறம் ( ← இதைப் பார்க்கவும்)



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கன்னிகாதானம்&oldid=1279787" இலிருந்து மீள்விக்கப்பட்டது