கம்மனாட்டி
பொருள்
கம்மனாட்டி(பெ)
- கைம்பெண்டாட்டி என்பதன் கொச்சைவழக்கு
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
விளக்கம்
- திட்டுவதற்குக்கூட இந்தச் சொல்லை பலர் பயன்படுத்துகின்றனர்.
பயன்பாடு
- விதவைக்குத் தமிழ்ச் சொல் கைம்பெண். இச்சொல்லை நீட்டி கைம்பெண்டாட்டி ஆக்கி, இது மருவி கம்மனாட்டி என்று பேச்சு வழக்கில் உள்ளது. திட்டுகிறபோது, "போடா கம்மனாட்டி" என்றோ, "கம்மனாட்டிப் பயலே" என்றோ வழங்குதலும் காண்கிறோம். ஆகவே கைம்பெண் (விதவை) எனும் சொல்லுக்கு ஆண்பால் - கைம்(பெண்)பயல் என்பதே ஆகும். (பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!, தினமணிக்கதிர், 25 செப் 2011)
- கைம்பெண்டாட்டி பெண்பெண்டாட்டி என்பன, முறையே, கம்மனாட்டி, பொம்மனாட்டி எனக் கொச்சை வழக்கில் மருவி வழங்குகின்றன. (இலக்கணக் கட்டுரைகள், பக்கம் 44)
- நீ உலகம் அறிஞ்ச பொம்மனாட்டி
- நான் ஒண்ணுமே தெரியா கம்மனாட்டி (திரைப்பாடல்)
- கைம்பெண் - விதவை - கைம்மை - அமங்கலி - சுமங்கலி - கைம்பெண்டாட்டி - பொம்மனாட்டி
( மொழிகள் ) |
சான்றுகள் ---கம்மனாட்டி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி