கலியாணம் கார்த்தி

தமிழ்

தொகு
(கோப்பு)

பொருள்

தொகு
  • கலியாணம் கார்த்தி, பெயர்ச்சொல்.
  1. சுப காரியங்களும், சொந்தங்கள் ஒன்று சேர்தலும்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. auspicious occasions and meetings

விளக்கம்

தொகு
  • இஃதொரு பேச்சு வழக்கு...கலியாணம்,கார்த்தி ஆகிய இரு சொற்களுக்கும் தனித்தனியே அர்த்தங்கள் உள்ளபோதிலும், இரண்டையும் சேர்த்து ஒரு சந்தர்ப்பத்தில், பேச்சில் சொல்லும்போது தொக்கி நிற்கும் பொருள் வேறுபடுகிறது...கலியாணம் என்பது ஒரு வீட்டில் நடக்கும் திருமணம் போன்ற நிகழ்வுகளையும், கார்த்தி என்பது உறவினர் அனைவருக்கும் பொதுவான பண்டிகைகளையும் குறிப்பிடும்...ஆக ஓர் இல்லத்தில் நடைபெறும் சுப காரியங்களையும், கொண்டாடப்படும் பண்டிகைகளையும் குறிக்கும் ஒரு சொற்றொடர்தான் கலியாணம் கார்த்தி என்பது...இதேப் பொருளைத் தரும் மற்றொருச் சொற்றொடர் .'நாள் கிழமை'...

பயன்பாடு

தொகு
  • இப்போதெல்லாம் உறவினர், சொந்த பந்தங்களுக்கிடையே தொடர்புகள் மிகவும் குறைந்துவிட்டன...கலியாணம் கார்த்தி என்று குடும்பங்களுக்கிடையே போக்குவரத்து இருந்தால்தானே உறவு முறைகள் தெரிந்து பந்தபாசங்கள் நீடித்து, உறவு விட்டுப்போகாமலிருக்கும்?
"https://ta.wiktionary.org/w/index.php?title=கலியாணம்_கார்த்தி&oldid=1470228" இலிருந்து மீள்விக்கப்பட்டது