சொந்தம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
சொந்தம் (உ)
- தனக்குரியது
- நெருங்கிய உறவு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- one's own peculiar right, exclusive property, that which belongs to oneself; possession
- near relationship, kin (Colloq.)
விளக்கம்
பயன்பாடு
- உழுபவனுக்கே நிலம் சொந்தம்.
- அவர் எனக்குச் சொந்தம்; தாய்மாமா முறை.
- சொந்தக்காரர் - relative
- தூரத்துச் சொந்தம் - distant relative
- தாய்வழிச் சொந்தம்
- தாய்வழிச் சொந்தம் ஆயிரம் இருந்தும் (திரைப்பாடல்')
- சொந்தப் பணத்தில் ஏழைகளுக்கு வீடு கட்டிக் கொடுத்தார்.
- அடுத்த வீட்டுக்காரன் சேவல் நம் வீட்டுச் சுவரில் முட்டையிட்டால் யாருக்குச் சொந்தம்? (கோழி முட்டை)
- பணம் படைத்த வீட்டினிலே வந்ததெல்லாம் சொந்தம்
- பணமில்லாத மனிதருக்கு சொந்தம் எல்லாம் துன்பம்
- புத்தியுள்ள மனிதனெல்லாம் வெற்றி காண்பதில்லை (திரைப்பாடல்')
- கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா கண்களுக்குச் சொந்தம் இல்லை (திரைப்பாடல்')
(இலக்கியப் பயன்பாடு)
- சொந்தமா யாண்ட நீ (தாயு. சுகவாரி. 11)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சொந்தம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:உறவு - பந்தம் - சொந்தபந்தம் - நட்பு - #