கவிகை
பொருள்
கவிகை(பெ)
- வளைவு
- குடை
- வேந்தன் கவிகைக்கீழ்த் தங்கு முலகு (குறள், 389)
- நன்மைதீமை
- நொதுமலர் கவிகை(ஞானா. 29, 4).
- வள்ளல்தன்மை; ஈகை; கொடை
- காரினை வென்றகவிகையான் (பு. வெ. 9, 29).
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- bending, being concave
- umbrella
- good and evil
- literally inverted palm of the hand, transf., liberality, munificence, bounty
விளக்கம்
- "கவிஞர்" என்பதுகூடத் தமிழல்ல என்பாரும் உண்டு. நல்ல தமிழ்ச்சொல் இது என்பதனைக் ""கவிகைக் கீழ்த்தங்கும் உலகு" என வள்ளுவர் கூறியவற்றால் உணரலாம். கவிகை என்பது "கை"விகுதி பெற்ற தொழிற்பெயர். கவிதல் என்பது பொருள். தொழிற் பெயரின் விகுதியாகிய "கை"என்பதனை நீக்கினால், எஞ்சி நிற்பது "கவி" என்னும் முதனிலையாகும். "கவிகை" என்பது கவிந்து நிற்பது என்னும் கருத்தில் தொழிலாகு பெயராகக் "குடை"யை உணர்த்திற்று. உலகை நாட்டைக் கவிந்து நிற்பது "கவி" என்பதும் வெள்ளிடைமலையாக விளங்குகின்றது. (வேருக்கு நீர் வார்த்தவர்கள் - 19: இனிமைத் தமிழ்மொழி எமது, தமிழ்மணி, 18 Dec 2011)
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கவிகை--- DDSA பதிப்பு + வின்சுலோ +