காந்தி கணக்கு
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
காந்தி கணக்கு(பெ)
- திரும்ப வராத பணம்; வராக் கடன்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- loan that will not be paid back
விளக்கம்
- காந்தி கணக்கு என்றாலே கிட்டதட்ட நாமம் என்கிற அர்த்தத்தைதான் உருவாக்கி வைத்திருக்கிறோம் நாமெல்லாம். ஆனால் காந்தி கணக்கு என்றால் என்ன என்பதற்கான உண்மையான அர்த்தம் என்னவென்று விசாரித்தபோது...மகாத்மா காந்தி உப்பு சத்தியாகிரகம் மேற்கொண்டிருந்த போது அவருக்கு வியாபாரிகள் அத்தனை பேரும் மானசீகமாக ஆதரவு அளித்தார்களாம். நேரடியாக எங்களால் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள முடியாது. ஆனால் எப்படியாவது உங்கள் போராட்டத்திற்கு நாங்கள் ஆதரவு அளிப்போம். இதில் கலந்து கொள்ள வரும் தொண்டர்களை எங்கள் கடைகளில் எது வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ள சொல்லுங்கள். பணம் தர வேண்டாம். அடையாளம் தெரியாமல் பணம் கேட்க நேரும்போது காந்தி கணக்கு என்று எங்களுக்கு புரியும்படி சொன்னால் போதும். நாங்கள் அவர்களிடம் பணம் கேட்க மாட்டோம் என்றார்களாம் அந்த வியாபாரிகள். அப்படி வந்ததுதான் காந்தி கணக்கு. ([1])
பயன்பாடு
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---காந்தி கணக்கு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி