ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

குறடு(பெ)

  1. கம்மியரது பற்றுக் குறடு
  2. சுவடி தூக்குங் கயிற்றுக் குறடு
  3. நண்டு
  4. பாதக்குறடு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. pincers,tongs, forceps
  2. satchel-pin, hook for hanging up school boy's ola books
  3. crab
  4. sandals
பயன்பாடு
  • பற்களையும் பிடுங்கும் அவசரத்தில் குறடு ஒன்று இயங்கிக்கொண்டிருக்கிறது ([1])

(இலக்கியப் பயன்பாடு)

  • கொட்டியுண்பாருங் குறடுபோற் கைவிடுவர் (நாலடி. 208)

(இலக்கணப் பயன்பாடு)


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

குறடு(பெ)

  1. திண்ணையொட்டு
  2. திண்ணை
  3. சுவர் முதலியவற்றிலுள்ள எழுதகம்; புடைப்பு
  4. பறை வகை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. edge of a verandah, extension of a verandah (Colloq.)
  2. raised floor or verandah, pial; pedestal
  3. cornice on a wall or column
  4. a kind of drum
  • குறள் என்பதிலிருந்து?
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • கும்பிகைதிமிலை செண்டை குறடு (கம்பரா. பிரமாத். 5)

(இலக்கணப் பயன்பாடு)


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

குறடு(பெ)

  1. மரத்துண்டு
  2. பலகை
  3. இறைச்சி
  4. தேர் முதலியவற்றின் அச்சுக்கோக்கும் இடம்
  5. சந்தனக்கல்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. small block or clump of wood
  2. plank, board
  3. block for cutting meat
  4. axle-box of a cart
  5. grinding-stone for preparing sandal perfume
  • குறை என்பதிலிருந்து?
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • சந்தன மென்குறடு (வாக்குண். 28)
  • கொத்தும் பட்டடைமரம். ஊனமர் குறடுபோல (சீவக. 2281)
  • நோன்குறட்டாரஞ் சூழ்ந்த . . . நேமி (சிறுபாண். 252)
  • செழுமலைக் குறடுரிஞ்சிச் செய்ய சந்தனத்தின்(சேதுபு. திருநாட். 26)

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

 :திண்ணை - பாதக்குறடு - இடுக்கி - துருத்தி - உலைக்களம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=குறடு&oldid=1242504" இலிருந்து மீள்விக்கப்பட்டது