சிகாரி
பொருள்
சிகாரி(பெ)
- வேட்டை
- வேடன், வேட்டைக்காரன்
- வேட்டைத் துணையாள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- அதிகாரிகளை வன வேட்டைக்கு அழைத்துப் போய் வருவதற்காக சிகாரி எனப்படும் வழிகாட்டிகள் இருந்தார்கள். இவர்கள் காட்டை, உள்ளங்கை ரேகை போல அறிந்தவர்கள். அவர்களின் துணை இல்லாமல் எந்த ஒரு வெள்ளைக்காரனும் வேட்டைக்குப் போய்விட முடியாது. சிகாரி செய்யும் உதவிக்கு பணமும், குடிப்பதற்கு மதுவும் கூலியாகத் தரப்பட்டது. இந்திய சிகாரிகளைப் போல காட்டு வாழ்வின் நுட்பங்களை அறிந்தவர்கள் உலகில் ஒருவரும் இல்லை என்று, வெள்ளைக்காரர்கள் பாராட்டி இருக்கின்றனர். ஆனால், விலங்குகளைக் கொல்வதை சிகாரிகள் விரும்புவது இல்லை. கொல்லப்பட்ட விலங்குகளின் முன்பு, "தனது பாவத்தை மன்னிக்கும்படி சிகாரிகள் பிரார்த்தனை செய்கிறார்கள்" என்று, ஆண்டர்சன் என்ற வேட்டையாடி எழுதி இருக்கிறார். (நரி வேட்டை!, எஸ். ராமகிருஷ்ணன், ஆனந்தவிகடன், 04-ஜனவரி-2012)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சிகாரி--- DDSA பதிப்பு + வின்சுலோ +
வேட்டைக்காரன் - வேடன் - வேட்டுவன் - சிகாரியாள் - ஷிகாரி - வனம் - வனவாசி