ஒலிப்பு

சுபாவம் (பெ)

  1. இயல்பு; குணவிசேடம்
  2. கலப்பற்றது
  3. கபடின்மை
  4. மூடத்தன்மை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. nature, personal trait; natural state, inherent quality or disposition, instinct
  2. genuineness, reality, unaffectedness
  3. sincerity, honesty (Colloq.)
  4. simple-mindedness
விளக்கம்
பயன்பாடு
  • முரட்டு சுபாவம் உடைய அவரிடம் பேசப் பயந்தேன்.
  • இனிய சுபாவம்
  • அமைதியான சுபாவம்
  • பயந்த சுபாவம்
  • நான் பயந்த சுபாவம் உள்ளவன். உங்களைப் போல் துணையோடு பயணம் செய்தால் எனக்கும் நல்லது (பாண்டிமாதேவி, தீபம் நா. பார்த்தசாரதி)
  • எல்லாரும் சந்தோஷமாயிருக்கும் இடத்தில் நான் மட்டும் முகத்தைத் தூக்கிக் கொண்டிருக்க முடியவில்லை. என்னுடைய இளம் பிராயத்துக் குதூகல சுபாவம் மறுபடியும் மேலோங்கியது. எல்லோருடனும் சகஜமாகப் பேசிப் பழகவும், சிரிக்கவும் தொடங்கினேன். அதோடு இல்லை; [[பாடு|பாடவும்] தொடங்கினேன். (பிரபல நட்சத்திரம், கல்கி)

(இலக்கியப் பயன்பாடு)

  • சுபாவமாக வளர்வனத்தை (விநாயகபு. 77, 109)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---சுபாவம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :இயல்பு - தன்மை - பழக்கம் - குணம் - மனோபாவம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=சுபாவம்&oldid=1059180" இலிருந்து மீள்விக்கப்பட்டது