தானியலட்சுமி

தமிழ்

தொகு
 
தானியலட்சுமி:
உணவுத் தானியங்கள் என்றென்றும் கிடைக்கத் திருமகளின் பூசனைக்குரியத் தோற்றம்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--धान्यलक्ष्मी--தா4ந்யலக்ஷ்மீ--மூலச்சொல்
  • தானியம் + லட்சுமி

பொருள்

தொகு
  • தானியலட்சுமி, பெயர்ச்சொல்.
  1. திருமகளின் ஒரு தோற்றம்
  2. கூலத் திருமகள்
  3. தானியமாகிய செல்வத்துக்குரிய திருமகள்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Dhanyalakshmi..an image of goddess lakshmi, wife of lord vishnu,one of her eight appearances--hindu religion

விளக்கம்

தொகு
  • திருமாலின் பத்தினியாகிய திருமகள் மக்களுக்கு நல்கும் வரங்களின் தன்மைக்கேற்றவாறு, எட்டு தோற்றங்களில் காட்சியளிக்கிறாள்...ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக, அவளருள் வேண்டி பூசிக்கும் பக்தர்கள் மனதை ஒருமுகப்படுத்தி கண்களைமூடிப் பிரார்த்திக்க, இத்தகைய தனித்தனித் தோற்றங்கள் அவசியமாகின்றன...உணவுத் தானியங்கள் எல்லாக்காலங்களிலும் தங்குத் தடையின்றி உணவுக்காக தாராளமாகக் கிடைத்து பசிப்பிணி நீங்க, பூசனைக்குரிய திருமகளின் உருவத்தோற்றம் தானியலட்சுமி ஆகும்...தானியம் எனும் வடசொல்லின் தமிழ்ச்சொல் கூலம்


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தானியலட்சுமி&oldid=1450461" இலிருந்து மீள்விக்கப்பட்டது