துமி
தமிழ்
தொகுபொருள்
தொகு- துமி, பெயர்ச்சொல்.
- வெட்டைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
- கரந்துமி படுதலுங் கவன்று... (கந்தபுராணம்-அசமுகி சோகப் படலம், 2)
- மழைத்துளியைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
- ஒரு துமி கூடப் பெய்யவில்லை.
- தூறலைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
- துமி தூறும்போது வெளியே செல்ல வேண்டாம்.
- நீர்த்துளியைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
- திரை கடற்றுமி தமூர்புக... (கம்பராமாயணம்-சேது பந்தனப் படலம், 42)
- துமி, வினைச்சொல்.
- வெட்டுண்ணுதலைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
- அரவி னருந்தலை துமிய... (புறநானூறு-211)
- அழிதலைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
- பைம்பயிர் துமிய... (அகநானூறு-254)
- வெட்டுதலைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
- கொடுங்காற் புன்னைக் கொடுதுமித் தியற்றிய... (பெரும்பாணாற்றுப்படை-266)
- அறுத்தலைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
- வேளாப்பார்ப்பான் வாளரந் துமித்த... (அகநானூறு-24)
- விலக்குதலைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
- தொடீஇய செல்வார்த்துமித்தெதிர் மண்டும்... (கலித்தொகை-116, 5)
- உமிதலைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
- மிச்சிலைத் துமிந்து... (காஞ்சிப்புராணம்-கழு வாய்., 63)
- துளித்தலைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
- நீரைத் துமிக்க வேண்டாம்.
- மடமையறுதலைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
இலக்கிய மேற்கோள்கள்
தொகு- பெரியபுராணம்: சுதைச்சிலம்பிமேல் விழவூதித் துமிந் தனன்
மொழிபெயர்ப்புகள்
தொகு
|
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +