திருமாலின் பத்தினியாகிய திருமகள் மக்களுக்கு நல்கும் வரங்களின் தன்மைக்கேற்றவாறு, எட்டு தோற்றங்களில் காட்சியளிக்கிறாள்...ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக, அவளருள் வேண்டி பூசிக்கும் பக்தர்கள் மனதை ஒருமுகப்படுத்தி கண்களைமூடிப் பிரார்த்திக்க, இத்தகைய தனித்தனித் தோற்றங்கள் அவசியமாகின்றன...இவ்வகையில் வாழ்வில் ஏற்படும் எத்தகைய இடர்ப்பாடுகளையும், எதிர்கொண்டு சமாளிக்க வேண்டிய தைரியம்/சாகசம்/துணிச்சல் ஆகியவற்றைப் பெறுவதற்கான பூசனைக்குரிய திருமகளின் உருவத்தோற்றம் தைரியலட்சுமி ஆகும்.