படுவம்
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- படுவம், பெயர்ச்சொல்.
- சேற்றுநிலம்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
விளக்கம்
- பள்ளத்தில் கிடக்கும் வயல்கள் யாவும் படுவப் பத்து ஆகிவிடுவதும் இல்லை. களிமண் பாங்கான நிலம், சமதரையை விடத் தாழ்ந்த நிலப்பரப்பு, பக்கத்தில் ஆறு, குளம், ஏரி போன்று எப்போதும் தண்ணீர் கிடக்கும் நிலைகள் இருந்து, ஈர நயப்பு மாறாது தண்ணீர் ஒலித்துக்கொண்டும் ஊறிக்கொண்டும் இருக்கும் நன்செய் நிலப்பகுதிதான் படுவம். (படுவப் பத்து (2), நாஞ்சில்நாடன்)
பயன்பாடு
- படுவம் என்றால் பள்ளம் என்று பொருள். 'கிடங்கு விழுந்துவிட்டது' என்பதற்கு 'படுவம் விழுந்து கெடக்கு' என்பார்கள். ஆறாத புண்ணைப் பார்த்து 'பெரும் படுவமால்ல இருக்கு' என்றும் அரிவைகளை மோப்பம் பிடித்துத் திரியும் விடலைப் பையன்களை வயசாளிகள் "ஏய், பெரும் படுவமாக்கும்! பாத்துப் பரிமாறு என்னா!" என்று எச்சரிப்பதும் வழக்கு. பெருமழைக் காலங்களில் ஓடைக் கரைகள் உடைத்த வயலில் பாய்ந்து, பாய்ந்த இடம் பெரும் குண்டாகக் கிடக்கும். அதை 'மழைத்தண்ணி சாடி படுவம் பாஞ்சுற்று' என்பதும் உண்டு. பள்ளமான வயற்காட்டில் கிளைத்த கதை இது. (படுவப் பத்து (1), நாஞ்சில்நாடன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---படுவம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +