பயனர்:Jambolik/பயனர் பேச்சு:Jambolik-2011-2012
வரவேற்புரைகள்
தொகுவருக!
- பல சொற்களைக் காணுங்கள். பிறகு சொற்பதிவுகளைச் சிறப்பாக செய்திடுங்கள். ஏதேனும் உதவி தேவையெனின், இப்பக்கத்திலேயே கேட்கவும். ஓரிரு நாட்களில் உங்களுக்கான உதவிகளை, நானோ, பிறரோ செய்வோம்.
- வணக்கம்.--21:03, 12 திசம்பர் 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
- மிகச் சிறந்த விளக்கங்கள் அளித்துவருகிறீர்கள். பாராட்டுகள். பழ.கந்தசாமி 21:20, 14 திசம்பர் 2011 (UTC)
தலைப்பு
தொகுமோர்மிளகாய்/ஊறுகாய்மிளகாய் என்று தலைப்பிடுவதற்கு பதில் “மோர்மிளகாய்”, “ஊறுகாய்மிளகாய்” என இரு சொற்களைத் தனித்தனியே உருவாக்கிவிட வேண்டுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 06:03, 16 திசம்பர் 2011 (UTC)
கொச்சைத் தமிழ் சொற்கள்
தொகுகொச்சைத் தமிழ்ச் சொற்களையும் பகுதிசார் தமிழ்ச் சொற்களையும் பதிவேற்றலாமா? --Jambolik 14:06, 18 திசம்பர் 2011 (UTC)
- ஏற்றலாம். வட்டாரவழக்கு / பேச்சு வழக்கு என்பதை தெளிவாகக் குறிப்பிட்டு விடுங்கள். ஆனால் எழுத்துப்பிழைச் சொற்களை ஏற்ற வேண்டாம். (ல/ள, ர/ற வேறுபாடுகள்) --சோடாபாட்டில்உரையாடுக 15:21, 18 திசம்பர் 2011 (UTC)
சிவப்பு நிறத்து எழுத்துக்களின் பொருள்
தொகுபதிவேற்றிய பிறகு எழுத்துக்கள் சிவப்பு நிறத்தில் வந்தால் என்ன பொருள்? வார்ப்புரு என்றால் என்ன? ஆங்கில சொற்களுக்கான புதியத் தமிழ் பதங்களை பயன்படுத்தும்போது அவைகளோடு சிறிது காலம் ஆங்கிலச் சொற்களையும் காண்பித்தால் நன்று! --Jambolik 19:14, 19 திசம்பர் 2011 (UTC)
- சிவப்பு எழுத்துகள் என்றால் அப்பெயருள்ள பக்கம் (அச்சொல்லின் பொருள்) இன்னும் இடப்படவில்லை என்று பொருள். அப்பக்கம் உருவாக்கப்பட்டவுடன், சிவப்புநிறம் நீங்கி, அச்சொல்லைச் சொடுக்கினால், பொருளுள்ள பக்கத்துக்குச் செல்லலாம். எட்டேகால் லட்சணம் என்றால் அவலட்சணம் என்று எனக்குப் பொருள் தெரிந்திருந்தாலும், உங்களது விளக்கத்துக்குப் பின்னரே ஏன் என்று புரிந்தது. மிக்க நன்றி. எடுத்தக்காட்டாக, உங்களைப் பற்றி Jambolik பக்கத்தில் ஒரு சிறிய அறிமுகம் கொடுத்தால் Jambolik-ல் உள்ள சிவப்பு நீங்கும். நன்றி. பழ.கந்தசாமி 20:52, 19 திசம்பர் 2011 (UTC)
- தமிழ் விக்கித்திட்டங்களில் இடைமுகம் தமிழில் தான் இருக்கும். (வார்ப்புரு போன்றவை புதிய சொற்கள் அல்ல, ஐந்தாண்டுகளாக விக்கித்திட்டங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன). தமிழ் இடைமுகச் சூழலில் இதுவரை செயல்படாதவர்கள் புதியதாகக் கருதலாம். ஆங்கில விக்கி இடைமுகத்தைப் பயன்படுத்திப் பழகியவர்களுக்காக ஒரு சொற்களஞ்சியம் ஒன்று தமிழ் விக்கிப்பீடியாவில் உருவாக்கப்பட்டுள்ளது - w:விக்கிப்பீடியா:சொற்களஞ்சியம். அதை ஒரு முறை படித்துவிட்டால் தெளிவாகிவிடும்.--சோடாபாட்டில்உரையாடுக 04:41, 20 திசம்பர் 2011 (UTC)
புளி
தொகுஉங்கள் குறிப்பு "tamarindus indica reached india well before the portugeese arrived; please dont add such details without external refs" பல பத்தாண்டுகளுக்கு முன் சென்னை கன்னிமாரா நூலகத்தில் ஒரு புத்தகத்தில் படித்ததைதான் பதிவேற்றினேன்.இப்போது விவரங்கள் நினைவிலில்லை. நானாக எதையும் சொந்தத்தில் பதிவேற்றுவதில்லை. Sorry.--Jambolik 15:06, 20 திசம்பர் 2011 (UTC)
- நன்றி. இது போன்ற கூறுகளை சேர்க்கும் முன் மீண்டும் ஒரு முறை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டுகிறேன். (இதே போன்ற ஒன்றை நான் மிளகு/மிளகாய் பற்றி படித்திருக்கிறேன். மிளகு ஏற்றுமதிக்காக சேகரிக்க வேண்டி, மிளகாயை போர்த்துகீசியர் இந்தியாவில் அறிமுகப்படுத்தி பரவ விட்டனர் என்று). --சோடாபாட்டில்உரையாடுக 15:18, 20 திசம்பர் 2011 (UTC)
நன்றி, விடை பெறுகிறேன்
தொகுவரும் நான்கைந்து மாதங்களுக்கு உங்கள் அனைவரிடமிருந்தும் விடை பெறுகிறேன்.. இந்நாள் வரை நான் பதிவேற்றியவைகளை, எழுத்து, சொல் மற்றும் பொருட் பிழைகளைக் களைந்து விக்கிபீடியாவில் சேர்த்துக்கொண்டதற்காக மிக்க நன்றி.. மீண்டும் சந்திப்போம். வணக்கம். GOOD BYE.--Jambolik 00:55, 22 திசம்பர் 2011 (UTC)
- மீண்டும் உங்களை எதிர்நோக்கிக் காத்திருப்போம். வணக்கம்.--02:06, 22 திசம்பர் 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
- மிக அருமையான சொற்களையும் விளக்கங்களையும் அளித்துவந்தீர்கள். நன்றி. உங்கள் வரவை மிக ஆவலுடன் எதிர்நோக்குகிறோம். 05:05, 22 திசம்பர் 2011 (UTC)
ஒரு சொல் அதே சொல்லின் பொருளுக்கு பல சொற்கள்-பதிவேற்றும் கொள்கை?
தொகுஒரு சொல்லுக்கு அதே பொருளைத் தரக்கூடிய பல சொற்களிருந்தால், தலையாய ஒரு சொல்லைப் பதிவேற்றி மொழி வளப்பகுதியில் மற்ற சொற்களை அளிக்கலாமா அல்லது ஒவ்வொரு சொல்லுக்கும் தனித் தனியே பக்கங்களை உருவாக்கவேண்டுமா? எடுத்துக்காட்டாக சூரியன் என்ற சொல்லுக்கு ஆதவன், தினமணி, தினகரன், இரவி, பகலவன் போன்ற பல சொற்களிருக்கின்றன!--Jambolik 21:14, 2 சனவரி 2012 (UTC)
- ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு பக்கத்தை உருவாக்குவதே பரிந்துரைக்கப்படுகிறது. அப்படி உருவாக்கப்படும் பக்கங்களின் சொல்வளப்பகுதியில் ஒத்த பிற சொற்களுக்கு இணைப்புத் தருவது மேலும் சிறந்தது.--சோடாபாட்டில்உரையாடுக 21:33, 2 சனவரி 2012 (UTC)
யானை:வேறு சொற்கள்
தொகு'யானை' தலைப்பின் கீழ் எண்பதிற்கும் மேலான இணைசொற்கள் எழுதப்பட்டுள்ளன. நீங்கள் அதை கவனிக்கவில்லை என்று நினைக்கிறேன். 'ஒருபொருட்பன்மொழி' என்பதன் கீழ் சொடுக்கவும் :) - அ. மா. நன்றி--Jambolik 16:33, 3 சனவரி 2012 (UTC)
கடி-சென்னை வட்டார வழக்கு-பதிவேற்றம் குறித்து
தொகுசென்னை வட்டார வழக்கில் 'கடி' என்றொரு சொல்(slang) உள்ளது. பல சந்தர்ப்பங்களில் பயன்படும் ஒரு சொல். இதை ஏற்கனவே இருக்கும் கடி என்ற பக்கத்தில் பதிவேற்ற மனம் ஒப்பவில்லை. ஏனென்றால் அது மொழிக்காகவே உள்ள பக்கமாகத் தோன்றுகிறது. வேறு எந்த முறையில் இந்த சென்னை 'கடி'யை பதிவேற்றலாம்? என்ன இவன் சரியான 'கடி' யாக இருக்கிறானே என்று எண்ணவேண்டாம்!--Jambolik 16:33, 3 சனவரி 2012 (UTC)
- ஆக்கப்பூர்வமாக எத்தனை முறைவேண்டுமானாலும் 'கடி'க்கலாம் ;)
- சென்னைப் பேரகரமுதலியில் சொல்லின் மூலம் வேறுபட்டால், கந்தம்1, கந்தம்2 என்பது போல் தனித்தனியாகப் பொருள் குறிப்பிடப்பட்டுள்ளது. விக்சனரியில் நாம் பெரும்பாலும் ஒரே பக்கத்தில்தான் இட்டுவருகிறோம். இதற்கெனத் தனிக்கொள்கை இதுவரை இல்லை. பழ.கந்தசாமி 16:49, 3 சனவரி 2012 (UTC)
- வேறு வேறு பொருள் என்றாலும் ஒரே பக்கத்தில் இடுவது தான் தேடலுக்கு வசதியாக இருக்கும். எனவே slang எனினும் அதே பக்கத்தில் கூடுதல் பொருளை சேர்த்து விடுங்கள்--சோடாபாட்டில்உரையாடுக 17:34, 3 சனவரி 2012 (UTC)
யானை என்ற சொல்லில்..
தொகுஉங்களை சந்திப்பதிலே மகிழ்ச்சி. உங்கள் பதிவுகளால் தமிழ்-தமிழ்-அகரமுதலி வளர்வது கண்டு உவகை அடைகிறேன். யானையில், இந்த சொற்களை சேர்த்ததை அறிந்தேன். அந்த பக்கத்திலேயே இருக்கும் ஒரு பொருட்பன்மொழி என்ற உட்பிரிவில், இன்னும் அதிகமான சொற்கள் உள்ளதைக் காணவும். எனவே, இதுபோல இல்லா இடங்களில் சொல்வளத்தை கூட்டிடக் கோருகிறேன். மேலும் யானயில் இல்லாதவற்றையும் சேர்த்திடக் கோருகிறேன். வணக்கம்--18:22, 3 சனவரி 2012 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
ஏற்கனவே உள்ள சொல்லோடு வேறுபாடு கொண்டால்?
தொகுஒரு சொல்லை பதிவேற்றம் செய்ய விழைகிறேன். அந்தச் சொல் எற்கனவே விக்சனரியில் இருக்கிறது. ஆனால் அந்த விக்சனரி சொல்லின் பொருளும், விளக்கமும் நான் பதிவேற்றம் செய்ய நினைத்தபடியில்லை! அந்த நிலையில் நான் என்ன செய்யலாம்?--Jambolik 23:41, 4 சனவரி 2012 (UTC)
- அப்பக்கத்தில் பொருள் தவறாக இருப்பின் மாற்றலாம். கூடுதல் பொருள் எனில், அப்பொருளையும் சேர்க்கலாம். சொல்லுக்கான பொருள் பற்றி அப்பக்கத்தின் மேலே உள்ள உரையாடல் பகுதியில் அப்பக்கத்தைப் பற்றி விவாதிக்கலாம். நன்றி. பழ.கந்தசாமி 00:19, 5 சனவரி 2012 (UTC)
தனிச்சொல்லா அல்லது கூட்டுச்சொல்லா?
தொகுபதிவேற்றும்போது மிக நீண்ட சொற்றொடரைப் பயன்படுத்தவேண்டிய நிலையில் அந்தச் சொற்றொடரைத் தனித் தனிச் சொல்லாகக் குறிப்பிடலாமா அல்லது கூட்டுச்சொல்லாக எழுதலாமா? நான் விக்சனரிக்குப் புதியவன் என்பதால் இத்தகைய கேள்விகளை ஒரு பள்ளிச் சிறுவன் போல் கேட்க வேண்டியிருக்கிறது!!--Jambolik 17:29, 6 சனவரி 2012 (UTC)
- தனித் தனிச் சொற்களாக பிரிந்திருப்பதே நல்லது கூட்டுச்சொல்லாக வேண்டாம். ஐயம் கேட்பது பற்றி தயங்க வேண்டாம். நாங்கள் அனைவரும் வந்த புதிதில் இது போலக் கேட்டுத் தான் கற்றுக் கொண்டோம் :-). எனவே உங்களுக்கு உதவுவது எங்கள் கடமை.--சோடாபாட்டில்உரையாடுக 18:13, 6 சனவரி 2012 (UTC)
- கூடவே, பொதுவான எழுத்து அல்லது பேச்சுப் பயன்பாட்டில் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதையும் கருத்தில் கொள்ளவும். எடுத்துக்காட்டாக, நிலவொளி என்பதை கூட்டாக எழுதலே சிறந்தது. பழ.கந்தசாமி 18:17, 6 சனவரி 2012 (UTC)
பழமொழிகளைப் பதிவேற்றுவதைப் பற்றிய கொள்கை?
தொகுஒரு சொல்லிற்கான பக்கத்தில் அந்தச்சொல் பயன்படுத்தப்பட்ட ஒரு பழமொழியை இலக்கியமாகக் கருதி 'இலக்கிய வளம்' என்ற பகுதியில் இணைக்கலாமா அல்லது '(சொல்லைக்குறிப்பிட்டு) பழமொழியில்' என்று தனி பத்தி அமைக்கலாமா?--Jambolik 15:26, 7 சனவரி 2012 (UTC)
- மேற்கண்ட கேள்விக்கு பதிலைக்காணோம். சந்தேகங்களைக் களைய விக்சனரி இவ்வளவு நேரம் எடுத்துக் கொண்டதில்லை--Jambolik 14:39, 8 சனவரி 2012 (UTC)
- காணாமல் விட்டுவிட்டோம். ஐயங்களை விக்சனரி:ஆலமரத்தடி பக்கத்தில் வினவினால் பலரது கண்களில் பட வாய்ப்புள்ளது. இங்கு உங்கள் பேச்சுப் பக்கத்தை கவனிப்பவர்கள் குறைவாக இருக்கலாம் / அல்லது அதிகமான தொகுப்புகள் நடைபெறும் போது காணத் தவறிவிடலாம்.
- பழமொழியை “பயன்பாடு” பகுதியிலேயே சேருங்கள், தனிப்பத்தி தேவையில்லை.--சோடாபாட்டில்உரையாடுக 15:18, 8 சனவரி 2012 (UTC)
தெலுங்குப் பதிவுகள்
தொகுஜம்போ, வட்டார வழக்குகள் தமிழ் அகராதியில் இருப்பது சிறந்தது, ஆனால் அனைத்தும் தமிழ் சொற்களாகவே இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். தமிழ் அகராதியில் proper தெலுங்கு சொற்களைச் சேர்ப்பதில் எனக்கு ஏற்பு இல்லை :-)
புரிந்துக்கொண்டேன்.. தங்களின் பெயர் ? நன்றி.--Jambolik 17:12, 8 சனவரி 2012 (UTC)
சொற்களின் இலக்கணக் குறிப்புகள்
தொகுதமிழ் இலக்கணம் கற்காததால் ஒரு சொல்லை விக்சனரியில் சேர்க்கும்போது அந்த சொல்லை எனக்கு பெயர், வினை, உரி என்று வகைப்படுத்தத் தெரியவில்லை!
எதோ தவறாக பெயர்சொல் என்று பதிவேற்றிவிட்டால் அந்த சொல்லின் பதிவேற்றப்பட்ட இலக்கணப் பெயர் மறுபரிசீலனை செய்யப்பட்டு தவறு நீக்கப்படுமா?--Jambolik (பேச்சு) 13:29, 8 சூலை 2012 (UTC)
- ஐயமுள்ள சொற்களை பகுப்பு:தமிழ் மொழி என்பதில் இணைத்து விடலாம்.நீங்கள் பதிவேற்றிய சொற்களை திரும்பவும் பார்க்கும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அதில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்படுத்தியிருந்தால், அவற்றினைக் கொண்டும் நீங்கள் உங்கள் பதிவுகளை மேம்படுத்திக் கொள்ளலாம். திரும்பவும் சந்திப்போம். வணக்கம்.--த♥ உழவன் +உரை.. 15:03, 8 சூலை 2012 (UTC)
குறை, தவறுகளைத் தெரிவிக்கவும்
தொகுஎனக்கு விக்சனரியில் பெரிய அனுபவம் இல்லை. ஆகவே எனது இடுக்கைகளில் ஏதாவது குறைகளிருந்தாலும், அளிக்கும் முறையில் தவறுகள் இருந்தாலும், ஏதாவது நீக்கப்பட்டாலும் உடனுக்குடன் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளுகிறேன்.
அவ்வாறானால் தகுந்தவாறு என்னை சரி செய்துக்கொள்ளமுடியும்
--Jambolik (பேச்சு) 22:39, 9 நவம்பர் 2012 (UTC)
- புதுச் சொற்களை நல்ல விளக்கங்களுடன் பதிவு செய்துவருகிறீர்கள். தொடர்ந்து பங்களிக்க வாழ்த்துகள். பழ.கந்தசாமி (பேச்சு) 23:57, 9 நவம்பர் 2012 (UTC)
- தொடர்ந்து பங்களிப்பை நல்குவதற்கு மிக்க நன்றி. உங்கள் பங்களிப்புகள் மேம்பட சிலவற்றைக் கூற விரும்புகிறேன்.
- விளக்கம் பகுதியில் ஏதாவது எழுதும் போது,:*... என்பதில், மூன்று புள்ளிக்குறியீடுகளை மட்டும் நீக்கி விடவும். ஏனெனில், வெற்றாக இருக்கும் இடத்தை நிரப்புவதற்காக, அவைகள் இடப்பட்டுள்ளன. நீங்கள் பெரும்பாலும் , விளக்கம் எழுதுவதால், அக்குறியீடுகள் நீக்கப்பட வேண்டும்.
- பொருள் + விளக்கம் + மொழிபெயர்ப்புகள் முதலியவற்றில் நீங்கள் உள்ளீடு செய்யும் போது, ஏதாவது ஒரு முக்கிய சொல்லுக்கு அகத்தொடர்பு தரவும்.(internal link)அப்படி இருப்பின் சிறப்பு.இல்லையெனில் பக்க எண்ணிக்கைக் கூடாது. இருப்பினும் உங்கள் எண்ணிக்கை கூடுவதற்குக் காரணம், ஆதாரங்கள் என்ற சிறு எழுத்துக்கள் வரியில் (மொழிகள்) என்ற இடத்தில் சிறு மாற்றுத்தீர்வு அமைத்துள்ளேன். எதிர்காலத்தில் யாரேனும் அதனை நீக்கினால், அன்று உங்கள் அதிகரித்த சொற்களின் எண்ணிக்கை குறையும். நானும் பல சொற்களுக்கு இதுவரை உருவாக்காமல் வைத்துள்ளேன்.எனினும், உள்ளே உள்ள கட்டக அமைப்பைக் கூறினேன்.
- உங்களைப் பற்றி உங்கள் பயனர் பக்கத்தில் அறிமுகக் குறிப்புகளைத் தருக. என்றும் நட்புடன். வணக்கம்.--த♥ உழவன் +உரை.. 04:12, 10 நவம்பர் 2012 (UTC)
- மிக்க நன்றி. நீங்கள் அளித்த முதல் குறிப்பை நன்றாகவே புரிந்துக்கொண்டேன்.
ஆனால் இரண்டாம் குறிப்பை அவ்வளவாக புரிந்துக்கொள்ளமுடியவில்லை. என்ன
இந்த 'அகத்தொடர்பு (internal link)'? ஓர் எடுத்துக்காட்டோடு தயவு செய்து விளக்க முடியுமா?
--Jambolik (பேச்சு) 13:56, 10 நவம்பர் 2012 (UTC)
- ஒரு வாக்கியத்தில் உள்ள சொற்களில், ஏற்கனவே உருவாக்கப்பட்டிருக்கும் ஏதேனும் ஒரு சொல்லுக்கு இணைப்புத் தருதலை, பலர் இதனை உள்ளிணைப்பு என்பார்கள். நான் நமது இலக்கியங்களின் அடிப்படையில் (அகநானூறு,புறநானூறு), அகத்தொடர்பு என்பேன்.--த♥ உழவன் +உரை.. 23:24, 10 நவம்பர் 2012 (UTC)
ஊடக இணைப்புகள்
தொகுஉங்களைத்திரும்பவும் சந்திப்பதிலே மகிழ்ச்சி. நம் விக்சனரி எழுத்துக்களை மட்டும் அளிக்காமல் ஊடக இணைப்புகளையும் தந்தால் நன்றாக இருக்குமென்று எண்ணுகிறேன். நீங்கள் உருவாக்கிய சொற்களில் சிலவற்றை இணைத்துள்ளேன். துவாலை , ஒலிப்பான் நீங்களும் ஓரிரு சொற்களில் ஒவ்வொரு முறையும் இணைக்க வேண்டுகிறேன். மீண்டும் சந்திப்போம். வணக்கம்.--த♥ உழவன் +உரை.. 15:33, 13 நவம்பர் 2012 (UTC)
- என்ன தெரியப்படுத்துகிறீர்கள் என்று தெளிவாகப் புரியவில்லை. ஊடக இணைப்புகள் என்றால் பத்திரிகைகள், இணையம் இவைகளில் வெளிவந்தவைகளின் இணைப்பையா? அப்படியென்றால் எனக்கு மிக சிரமமான காரியம்தான்! எவ்விடம் எந்த ஊடகத்தில் அந்தச் சொற்களைக் கண்டேன் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள முடியவில்லை.மேலும் நீங்கள் சொன்னபடி நான் எந்த சொற்களையும் உருவாக்குவது இல்லை! ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட சொற்கள்தான். நான் இப்போது கடைப்பிடிக்கும் முறைதான் எனக்கு மிக எளிதான வழி. இதில் விக்சனரிக்கு தீவிரமான ஏற்றுக்கொள்ளப்பட முடியாத நிலை இருக்கிறதா?
--Jambolik (பேச்சு) 16:12, 13 நவம்பர் 2012 (UTC)
- நம் விக்கியில் ஊடகக் கோப்பகம் உள்ளது. உங்களுக்கு தெரிந்திருக்கும் என்றே எண்ணியிருந்தேன். அங்குள்ள கோப்பின் பெயரை நகலெடுத்து இங்கு ஒட்டினால், அது தெரியும். அங்ஙனம் ஒட்டுவதற்கு கீழுள்ள , விக்கி நிரல்கள் என்ற தலைப்பில் 3வது வருதைச் சொடுக்கினால், [[|150px|{{PAGENAME}}|thumb|right]] என்பது தொகுத்தல் சாளரத்தினுள் வரும். அங்ஙனம் வந்தவுடன் ஏற்கனவே நகலெடுத்து வைத்திருக்கும் கோப்பின் பெயரை இட்டாலே போதும். வழக்கம் போல முன்தோற்றம் பார்த்து விட்டு, பக்கத்தைச் சேமிக்கவும். ஆங்கில விக்கிப்பீடியாவிலும் படங்களைத் தேடுதல் எளிது. இன்னும் தெளிவாக விளக்க வேண்டுமெனில், எனது அலைப்பேசி எண்ணுக்கு(90 95 34 33 42) தொடர்பு கொள்ளவும் அல்லது மின்னஞ்சல் செய்யவும்(tha.uzhavan AT ஜிமெயில்) உடன் விளக்குகிறேன்.
- இன்று துருவக்கரடியின் படத்தை அதற்கான பக்கத்தில் இணைக்க முயன்றேன். தோல்விதான். இன்னும் தெளிவாக இந்தப் பகுதியிலேயே விளக்க உங்களுக்கு இயலுமானால் தயவு செய்து செய்யவும்.
--Jambolik (பேச்சு) 19:32, 19 நவம்பர் 2012 (UTC)
தெளிவாக
தொகு- இதனை அழுத்தவும்.
- பொருத்தமான படத்தின், கோப்பின் பெயரை நகலெடுக்கவும். (எ. கா.) File:Eisbär 1996-07-23.jpg
- பின்பு விக்சனரி வந்து, எந்த சொல்லில் படத்தை இணைக்க விரும்புகிறீர்களோ, அப்பக்கத்தை திறக்கவும்.
- பின்பு, பதிப்புரிமையுள்ள ஆக்கங்களை அனுமதியின்றி சமர்ப்பிக்க வேண்டாம்! என்பதன் கீழுள்ள விக்கிநிரல்கள் என்ற தலைப்பில், மூன்றாவதாக அமைந்துள்ள [[|150px|{{PAGENAME}}|thumb|right]] குறிப்புகளை அழுத்தவும்.
- இவ்வாறு அழுத்துவதற்கு முன், தொகுத்தல் சாளரத்திற்குள் சொடுக்கியை நான், *'''{{PAGENAME}}''',<small>பெயர்ச்சொல்.</small> என்பதற்கு அடுத்தவரியில் வைத்துக் கொண்டேன்.பிறகு தான் அழுத்த வேண்டும்.
- முன்பு கூறிய விக்கிநிரலை அழுத்தியவுடன், சாளரத்திற்குள் எதனை நீங்கள் அழுத்துகிறீர்களோ, அந்த விக்கிநிரல் வரிகள் தோன்றும்.
- அப்பொழுது, பொருத்தமான படக்கோப்பின் நகலை, அங்கு ஒட்டி விடவும்.
- [[File:Eisbär 1996-07-23.jpg|150px|{{PAGENAME}}|thumb|right]] என அமைகிறதா என சரிபார்த்துகொள்ளவும்.
- இப்பொழுது முன்தோற்றம் பாருங்கள். படம் தெரியும். இறுதியாக பக்கத்தினைச் சேமிக்கவும்.
எனக்கு படமிடுதலைப் பற்றிய குறிப்புகளை அளிக்க வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி. வணக்கம்.--த♥ உழவன் +உரை.. 22:21, 19 நவம்பர் 2012 (UTC)
- நானல்லவோ உங்களுக்கு முதற்கண் நன்றி சொல்லவேண்டும். பத்தோடு ஒன்று பதினொன்று என்றிருந்துவிடாமல்
என் வேண்டுகோளையும் ஒரு பொருட்டாக மதித்து இவ்வளவு பொறுமையோடு உழைப்பைக்கொட்டி பதில் தந்ததற்காக மிக மிக நன்றி. வணக்கம்.--Jambolik (பேச்சு) 13:55, 20 நவம்பர் 2012 (UTC)
பகுப்பிடல்
தொகு- மேலுள்ள விருப்பத்தேர்வுகள் என்பதனை அழுத்தவும்.
- அதில் கருவிகள் என்ற தத்தலை அழுத்தவும்.
- அங்குள்ள விரைவுப்பகுப்பி (hotcat)யைத் தெரிவு செய்யவும்.
- பக்கத்தை சேமிக்கவும்.
- இப்பொழுது ஒவ்வொரு சொல்லின் இறுதியிலும் + - குறிகள் தெரியும்.
- பகுப்புகளைக் கூட்ட + குறியை அழுத்தவும், பகுப்புகளை நீக்க - குறியை அழுத்தவும்.
- அனைத்துக்கும் முன் உள்ள பகுப்புகள் என்பதனை தனிப்பக்கத்தில் திறந்து உள்ள பகுப்புகளை அறியமுடியும்.
- ஏற்கனவே ஒரு பகுப்பு உருவாக்கப்பட்டுள்ளதா என முதலில் அறிந்து கொள்வது சிறப்பு. ஏனெனில், அப்பகுப்புகளில் பல சொற்கள் ஏற்கனவே கோர்க்கப்பட்டிருக்கும். புதியதாக நாம் கோப்புகளை உருவாக்கினால், அதில் பல சொற்கள் இணைக்கப்பட்டிருக்காது. அனைவரும் ஒரே பகுப்பை பின்பற்ற இதனைச் சொல்ல விழைகிறேன்.
- பகுப்பு:வைணவம் என்ற பகுப்பே உங்களுக்கு அதிகம் பயன்படும் என்று எண்ணுகிறேன். (எ. கா.) அனுமன்.
- நீங்கள் உருவாக்கி வரும் சொற்களில் அவ்வப்போது சில மாற்றங்களை இணைத்து மேம்படுத்துவேன். அதன்மூலமும் நீங்கள் அறிந்து கொள்ளக் கேட்டுக்கொள்கிறேன். மற்றவை அவ்வப்போது,...வணக்கம்.--த♥ உழவன் +உரை.. 02:01, 25 நவம்பர் 2012 (UTC)
நன்றி.நீங்கள் சொன்னவற்றைப் பின்பற்ற முயற்ச்சி செய்கிறேன்.--71.62.61.237 13:16, 25 நவம்பர் 2012 (UTC)
ஊதா நிறச்சொற்களின் பொருள்
தொகுபயனர் பங்களிப்புகள் பகுதியில் 'தொடங்கப்பட்ட கட்டுரைகள்' என்றத் தலைப்பைச் சொடுக்கினால், சில சொற்கள் ஊதா நிறத்தில் காணப்படுகின்றன. என்ன பொருள்?--Jambolik (பேச்சு) 14:05, 30 நவம்பர் 2012 (UTC)
- எங்கு வருகிறது? எனக்கு வரவில்லையே? அப்பக்கத்தை அனுப்புங்கள். ஏன் அப்படி வருகிறது எனத தகவலுழவனுக்குத் தெரியலாம். பழ.கந்தசாமி (பேச்சு) 02:03, 7 திசம்பர் 2012 (UTC)
- காரணம் தெரிய வந்தது... ஒரு பக்கம் பயன்படுத்தப்படும்போது அந்தப் பக்கப் பெயர் ஊதா நிறத்தைப் பெறுகிறது...
புகுபதிகை செய்தவுடன் தலைப்பில் உள்ள பங்களிப்புகள் என்ற இடத்தில் சொடுக்கி வரும் பங்களிப்பு விவரங்களின் பக்கத்தின் அடியில் காணப்படும் தொடங்கிய கட்டுரைகள் என்ற இடத்தில் சொடுக்கினால் pages created by ... என்றப் பகுதி வருகிறது... இந்தப் பகுதியில்தான் சில சொற்கள் ஊதா நிறத்தில் தோன்றின. நன்றி.--Jambolik (பேச்சு) 17:01, 8 திசம்பர் 2012 (UTC)
நல்ல பொருத்தமான விளக்கங்கள்
தொகுபயன்பாட்டிலுள்ள மன்மதக்குஞ்சு, வகைதொகை இப்படி பல வார்த்தைகளை நல்ல விளக்கங்களுடன் தருகிறீர்கள். நன்றி. பழ.கந்தசாமி (பேச்சு) 19:05, 6 திசம்பர் 2012 (UTC)
மூன்றெழுத்துச் சொற்களை பதிவேற்றும் முறை
தொகுமூன்றெழுத்துச்சொற்கள் பக்கத்தில் சொற்களை மேலிருந்து கீழாக ஒரே வரிசையில் அல்லாமல் பல வரிசைகளாக ஒன்றின் பக்கத்தில் ஒன்றாக அமைப்பது எப்படி?...இன்னும் பல சொற்கள் இணைக்கபட இருப்பதால் இந்தத் தொகுப்பு மிக மிக நீளமாக வந்துவிடும்...கையாளுவதற்கும் பிறருக்கு சற்று சிரமமாக இருக்குமல்லவா?--Jambolik (பேச்சு) 01:42, 10 திசம்பர் 2012 (UTC)
- மிக அவசரம்...
- ஒரு தவறான செயலை செய்துக் கொண்டிருக்கிறேனோ என்னும் ஐயம் வந்திருக்கிறது... விக்சனரியிலுள்ள 'மூன்றெழுத்துச் சொற்கள்' என்னும் பக்கம் ஏற்கனவே விக்சனரியிலுள்ள மூன்றெழுத்துச் சொற்களுக்கான ஓர் அட்டவணை என்றே நினைக்கிறேன்... இதைச் சரியாகப் புரிந்துக்கொள்ளாமல் புதியதாய் விக்சனரியில் இல்லாத மூன்றெழுத்துச் சொற்களை நிறையவே அந்தப் பக்கத்தில் பதிவேற்றி இருக்கிறேன்... கொஞ்சம் ஐயம் வந்ததும் மேற்கொண்டு, இன்னும் நிறையச் சொற்கள் ஆயத்தமாக இருந்தும், பதிவேற்றுவதை நிறுத்திவிட்டேன்...ஆகவே என்னுடைய ஐயம் சரிதானா?... ஆம் என்றால் இதுவரை நான் பதிவேற்றிய பக்கங்களை தயவு செய்து நீக்கிவிடுங்கள்... இல்லைஎன்றால் அதே பக்கத்தில் மேலும் மூன்றெழுத்துச் சொற்களை சேர்க்க அனுமதி தாருங்கள்.--Jambolik (பேச்சு) 17:07, 11 திசம்பர் 2012 (UTC)
- உங்களது பதிவுகளைக் கண்டேன். உடன் தொடர்பு கொள்ள இயலவில்லை. பயணச்சூழலில் இருக்கிறேன். யாரிடமும் அனுமதி பெறத் தேவையில்லை. எனினும், இவ்வாறு தொகுக்க எண்ணுகிறேன் என்று நீங்கள் முன் கூட்டியே அறிவித்தால், உங்களது நேரம் காக்கப்படும். மற்றொன்று, நமது கட்டமைப்பு நன்றாக இருக்கும். தங்களது பதிவுகள் அருமை.தொடர் பங்களிப்புக்களை, விளக்கத்துடன் எழுதுகிறீர்கள். மிக்க நன்றி. அதற்காக தங்களை, இருகரம் கூப்பி வணங்குகிறேன்.விரைவில் நமது தமிழ்-தமிழ்-அகரமுதலியை பெரிய அளவில் வளர்த்தெடுப்பேன். அதற்கு உங்களது பதிவுகள் உத்வேகம் அளிக்கிறது.பகுப்பு:மூன்றெழுத்துச் சொற்கள் இருக்கும் போது, பகுப்பு:மூன்றெழுத்துச்சொற்கள் தேவையில்லை. முன்பு கூறிய பகுப்பை, மறைமுகப் பகுப்பாக வைத்துள்ளேன். அதனால் தான் இப்பிழை வந்ததோ என சிந்திக்கிறேன். மீண்டும் சந்திப்போம். வணக்கம்.--த♥ உழவன் +உரை.. 10:01, 15 திசம்பர் 2012
(UTC)