வாருங்கள்! உங்களை வரவேற்கிறோம் !!

வாருங்கள், Azhagiya manavalan!

விக்சனரிக்கு உங்களை வரவேற்கிறோம். தமிழ் விக்சனரி பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். தளத்தை பயன்படுத்துவது குறித்து ஏதேனும் உதவி, விளக்கம் தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் சொற் பொருள் எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள் அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு இப்படி --> இருக்கும் பொத்தானை அழுத்தவும் . .

விக்சனரிக்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, புதுப்பயனர் பக்கத்தை பாருங்கள். பக்கங்களை எப்படி தொகுப்பது என்று அறிய தொகுத்தல் உதவிப் பக்கத்தைப் பாருங்கள். புதிய சொற்களை சேர்க்க இங்கு செல்லுங்கள்.

உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்சனரி உங்களுக்கு முதன் முதலில் எவ்வாறு எப்பொழுது அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி

வாழ்த்துகளும் பாராட்டுகளும்

தொகு

அருமையான பங்களிப்புகளைச் செய்து வருகிறீர்கள் அழகிய மணவாளன். உங்கள் பணி தொடர் என் வாழ்த்துகள். ஏதேனும் உதவி தேவைப்படின் தயங்காமல் கேளுங்கள். என்னால் இயன்றவரை உதவுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 07:25, 5 நவம்பர் 2011 (UTC)Reply

நான் தமிழ்ப் புலவன் இல்லை :-). பொறியியல் (இன்னும் சில) படித்த ஒரு சாதாரண இணையவாசி தான் :-). புறநானூறு போன்ற இலக்கியச் சொற்களை சேர்ப்பது மிக அருமையான முயற்சி.--சோடாபாட்டில்உரையாடுக 08:15, 5 நவம்பர் 2011 (UTC)Reply
  • மணவாளன், விக்சனரியில் ஆர்வத்துடன் பங்களிக்க வந்தமைக்கு நன்றி. வருக, வருக! பழ.கந்தசாமி 13:13, 5 நவம்பர் 2011 (UTC)Reply
  • நன்றி, கந்தசாமி அவர்களே! தமிழ் சொற்களஞ்சியத்தை விரிவடையச் செய்வோம்!
  • அழகிய மணவாளன் தமிழ் சொற்களஞ்சிய இணையத்திற்கு வரவேற்கிறோம். --சிங்கமுகன்
  • நன்றி சிங்கமுகன் :) இந்த அனுபவம் எனக்கு மிகவும் புதுமையாகவும் சுவாரசியமாகவும் இருக்கிறது.

பங்களிப்புகள்

தொகு

நாம் தொடங்கிய அல்லது தொகுத்த பக்கங்களின் வரலாறு சீராக எங்காவது பதிவு ஆகியிருக்குமா? அதைக் காண என்ன செய்ய வேண்டுமென்று கூற முடியுமா? (cc: சோ.பா., த.உ., பழ. க.)

மேல் மெனுவில் உள்ள “என் பங்களிப்புகள்” தொடுப்பை சொடுக்குங்கள். பக்கத்தின் இறுதியில் ஒரு பெட்டி தோன்றும். அதில் ”தொகுப்பு எண்ணிக்கை”, “தொடங்கிய கட்டுரைகள்” என்று இரு இணைபுகள் உள்ளன. அவற்றை சொடுக்கி பங்களிப்பு விவரங்களைப் பெறலாம்.--சோடாபாட்டில்உரையாடுக 05:05, 12 திசம்பர் 2011 (UTC)Reply

கிண்டி பொறியியல் கல்லூரி

தொகு

இன்று தான் நீங்கள் சீஈஜி மாணவர் என்பதை உங்கள் பயனர் பக்கத்தின் மூலம் அறிந்தேன். மிக்க மகிழ்ச்சி. நானும் அதே கல்லூரியின் பழைய மாணவன் (2002 பட்டம்பெற்றேன்). தமிழ் விக்கித்திட்டங்களில் சீஈஜியின் பல முன்னாள் + இன்னாள் மாணவர்கள் இருக்கிறோம் :-)--சோடாபாட்டில்உரையாடுக 16:21, 23 திசம்பர் 2011 (UTC)Reply

அட, அப்படியா! நான் ECE பிரிவு, 2008 வகுப்பைச் சேர்ந்தவன். மேலும், நீங்கள் ஏற்றும் ஒலிக்கோப்புகள் பெண்குரலில் இருந்ததால் நீங்கள் பெண் என நினைத்திருந்தேன் :P மன்னிக்கவும்! நம் கல்லூரி மக்கள் இங்கு முனைப்பாக இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது :) - அ. மா.

  • நான் CEG அல்ல, சென்னைத் தொழில்நுட்பக் கழகம். உங்களுக்கு முன் பலப்பல பல்லாண்டுகளுக்குமுன். ;). எப்படியோ, யாயும் ஞாயும் யாராகியரோ, எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்' எனினும் தமிழால் இங்கு ஒன்றாகக் கலந்துள்ளோம்.
  • சோ.பா.வை நான் சென்ற செம்மொழி மாநாட்டின்போது சந்தித்துள்ளதால், பெண்குரல் ஒலிக்கோப்புகள் அவருடையதல்ல என்றுமட்டும் தெரியும் (அவர் பலகுரல் கலைஞராக இருந்தாலொழிய).. யாராயிருப்பினும் அரிய பணி. சோ.பா.வுக்கும் அப்பெண்மணிக்கும் நன்றி.
  • அ.மா, தொடர்ந்து ஆர்வத்துடன் பங்களித்துவருவதற்கு நன்றி. பழ.கந்தசாமி 17:20, 23 திசம்பர் 2011 (UTC)Reply
ஒலிக்கோப்புகளைத் தயார் செய்பவர் என் அம்மா - பயனர்:booradleyp :-). நான் இங்கு சொற்களில் இணைப்பு மட்டும் தந்து வருகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 17:29, 23 திசம்பர் 2011 (UTC)Reply
  • கிண்டி பொறியியல் கல்லூரியோடு தொடர்புடையவர்கள் இங்கு ஒன்றுசேர்ந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. நானும் மாணவனாக அல்லாமல் ஓர் ஊழியனாக அந்தக் கல்லூரியின் அலுவலகத்தில் மிகக் குறுகிய காலம் பணி புரிந்தவன் தான்!!--Jambolik 15:04, 8 சனவரி 2012 (UTC)Reply
  • மிக்க மகிழ்ச்சி, ஜம்போ :) உங்கள் பதிவுகள் விரிவானதாகவும் பயனுள்ளதாகவும் அமைகின்றன. நன்றி. (அ.மா.)

பகுப்பு:த.இ.க.க. கொடை

தொகு

உங்களின் தமிழ்-தமிழ்-ஆங்கிலம் அகரமுதலி பங்களிப்பு குறித்து மிக்க மகிழ்ச்சி. quid pro quo சொல்லின், ஒரு பகுப்பினை நீக்கக் கண்டேன். அவ்வாறு நீக்க வேண்டாமெனக் கருதுகிறேன். காரணம், அது நன்கொடையாக வழங்கப்பட்ட சொற்கோவையாகும்.

பல்வேறு உரையாடல்களில் இப்பகுப்பு பற்றி பேசப்பட்டுள்ளது. ஏறத்தாழ 1.4 இலட்சம் சொற்கள் நன்கொடையாக அளிக்கப்பட்டன. அவற்றில் ஏற்கனவே சுந்தரும், இரவியும் பதிவேற்றியிருந்தனர்.மீதமிருந்த சொற்களை, பலரது உரையாடல்களுக்குப் பிறகு, வாக்கெடுப்பு நடத்தப்பட்டு பதிவேற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவ்வரலாற்றைப் பேணுதல் சிறப்பு என்பதால், அப்பகுப்பு நீக்கலை, மறுபரிசீலனை செய்யக் கோருகிறேன். இது குறித்த உரையாடல்கள், ஆங்காங்கே விரவி கிடக்கிறது. அவற்றையெல்லாம் மேற்குறிப்பிட்ட உரையாடற்பகுதியில், {{நகர்த்தலாமா?}}(காண்க:ஆலமரத்தடி) வார்ப்புரு இட்டு, அறிவித்தப்பின்பு, தொகுக்க வேண்டும்.15 நாட்கள் வெளியூர் செல்கிறேன். மீண்டும் சந்திப்போம்.வணக்கம்.--06:04, 14 சனவரி 2012 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

  • நன்றி, த.உ., நானும் அந்த அகரமுதலி சொற்களிலிருந்து நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன். ஆனால் சில இடங்களில் மொழிபெயர்ப்பு சரியாக இல்லை, சில இடங்களில் முற்றிலும் தவறாக உள்ளது. எங்கெல்லாம் அது போல பிறழ்ச்சி இருக்கிறதோ, அங்கு த.இ.உ citation-ஐ நீக்கி விட்டு வருகிறேன். நீங்கள் சொல்வது போல் இனி நீக்காமல் விட்டு விடுகிறேன். ஆனால் அகராதி தரம் காண அச்சொற்களுக்கு பொதுவாக நிறைய தொகுப்பு தேவைப்படுகிறது, என்பதே என் கருத்து. பொங்கல் நல்வாழ்த்துக்கள் :) அ. மா. (14/1/2012)
  • இன்னொரு சந்தேகம்: பல ஆங்கில சொற்களுக்கு பகுப்பு சம்பந்தமே இல்லாமல் உள்ளது. வேளாண்மை, பொறியியல் போன்றவை தொடர்பற்ற சொற்களுக்கு இணைக்கப்பட்டுள்ளன. அவற்றை நீக்குவதில் உங்களுக்கு ஆட்சேபனை உள்ளதா? ஆங்கிலத்தில் பெயர்-வினை-உரி என்ற பகுப்பே நான் உபயோகித்து வருகிறேன். அ. மா. (14/1/2012)
நீங்கள் கூறிய பொருள் பிழையும், பகுப்புப்பிழையும் நீக்கப்பட வேண்டியவையே. இதனை செந்தி, கலை, போன்ற துறை சார்ந்த வல்லுனர்கள் நீக்கியும், புதுச்சொல்லை உருவாக்கியும், கலந்துரையாடலுக்குப்பின்னே, உருவாக்கி வருகின்றனர். த.இ.உ பகுப்பை மட்டும் விட்டு விட்டு மற்றவற்றை நீக்க ஒரு திட்டம் தீட்டி, பெரும்பாலோரது ஒப்புதலைப் பெற்று, நிறைய மாற்றங்கள் கொண்டு வரவேண்டும். த.இ.உ கொடுத்தபடி, அப்படியே பதிவேற்றினோம். மறுசீரமைப்பு பல வற்றில் கொண்டு வரவேண்டும். 4,5 மாதங்களுக்குப்பிறகு அவை சாத்தியமாகும் எனநம்புகிறேன். ஏனெனில், கணினி வல்லுனர்களின் கருத்துக்களை, உரையாடியும், திரட்டியும் வருகிறேன். இங்குள்ள உரையாடல்களை ஒருமுகமாக கோர்க்க வேண்டும். மிக்க நன்றி. மீண்டும் அடுத்த மாதம் சந்திப்போம். வணக்கம்.--20:39, 14 சனவரி 2012 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

w:விக்கிப்பீடியா:உதவித்தொகை என்பதில் கலந்து கொள்க

தொகு

இந்திய விக்கிமீடியாவின் நிதி உதவியால், மடிக்கணினிப் பெற, தமிழ்விக்கிசமூகத்தின் ஒப்புதல் பெற வேண்டும். எனவே, w:விக்கிப்பீடியா:உதவித்தொகை#Info-farmer (தகவலுழவன்) என்ற திட்டப்பக்கத்தில், விண்ணப்பித்துள்ளேன். இதுபற்றி ஏற்கனவே, தமிழ் விக்கிப்பீடியாவின் மேனிலைப் பங்களிப்பாளர்(Bureaucrats)களுக்கும், சிறப்புநிலைப் பங்களிப்பாளர்(system operator) களுக்கும், அவரவர் உரையாடற்பக்கத்தில், தனித்தனியே செய்தி விடுத்துள்ளேன். பிற பங்களிப்பாளரகளும், அத்திட்டபக்கத்தில் தங்களின் நிலைப்பாட்டைக் கூற அழைக்கிறேன். மேலும், பிற தமிழ் திட்டங்களின் ஆலமரத்தடியிலும், இச்செய்தி விடுத்துள்ளேன். வணக்கம்.---- உழவன்+உரை.. 01:42, 11 சூலை 2015 (UTC) Reply

"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Azhagiya_manavalan&oldid=1312672" இலிருந்து மீள்விக்கப்பட்டது