பிராந்து
பொருள்
பிராந்து(பெ)
- பருந்து
- மயக்கம், பிராந்தி
- இதுவென்ன பிராந்தே (சி. சி. 8, 16).
- பிராந்தகன்; அறிவு மயங்கியவன்
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- hawk
- bewilderment; obscuration of the understanding, illusion; madness
- a bewildered, mad man
விளக்கம்
பயன்பாடு
- காக்கைகளால் சிறு சிறு தொல்லைகள் ஏற்படுகின்றன என்று அதன் கூட்டைக் கலைக்கப் போகும்போது, கோழிக் குஞ்சுகளை வேட்டையாடும் செம்பிராந்துகளைக் காகங்கள் விரட்டுகின்றன என்று அந்தக் கூட்டைக் காப்பாற்றுகிறார் பெரியவர். ஆனால் பிராந்துத் தொல்லையை ஒழித்த காகங்களில் ஒன்று அவருடைய கோழிக் குஞ்சையே காயப்படுத்தி விடுகிறது. அதையடுத்து அவரது கோபம் காகங்களின் மேல் திரும்புகிறது. (பூமணி - அள்ளக் கிடைக்காத அம்பாரம், சொல்வனம்)
- சில நாயகர்களை இவர் வெறுத்த காலம் போய், இவரை வெறுக்கிற காலம் வந்துவிட்டதாம் ஆந்திராவில்.பாழாய் போன சிறிய உடல்வாகும், இளைக்கவே இளைக்காத அவரது சம்பளமும்தான் இதற்கு காரணம் என்கிறார்கள். இவ்வளவுக்கு பிறகும் ஆந்திராவை நேசிக்க அவருக்கு பிராந்து பிடித்திருக்கவில்லையே? (இங்கே வந்த இலியானா?..தமிழ் சினிமா)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பிராந்து--- DDSA பதிப்பு + வின்சுலோ +