பெற்றி (பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  1. இயல்பு
  2. தன்மை
  3. விதம்
  4. காரியமுறை
  5. பெருமை
  6. நிகழ்ச்சி
  7. பேறு
  8. விரதம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. nature; natural property
  2. character, quality
  3. method, manner, order
  4. course of action
  5. greatness, esteem
  6. event, occurrence
  7. acquisition, boon
  8. fasting
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  1. பெற்றிபிழையா தொருநடை யாகுவர் சான்றோர் (நாலடியார், 343)
  2. உறாஅமை முற்காக்கும் பெற்றி யார்ப் பேணிக்கோளல் (திருக்குறள், 442)
  3. அப்பெயர் புணர்ந்த பெற் றியும் (காசிக. பஞ்சநத. 1)
  4. மாருதி வடித்துச் சொன்ன பெற்றியே பெற்றி (கம்பராமாயணம். விபீடண. 108)
  5. உற்றபெற்றி யுணர்த்துவாம் (கம்பராமாயணம். கைகேசி. 63)
  6. யோகத்தின் பெற்றியாலே (கம்பராமாயணம். சவரி. 8)
  7. பெறு கதில் லம்மவிவ் வூருமோர் பெற்றி. (சிலப்பதிகாரம். குன்றக்.).

ஆதாரங்கள் ---பெற்றி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பெற்றி&oldid=1643537" இலிருந்து மீள்விக்கப்பட்டது