பேச்சு:dove
செய்யவேண்டியவை
தொகு- ஆங்கில அட்டவணையை அட்டியாக மாற்றணும்.
புறாவின் குரலோசை என்பதில் வரும் i என்ற எழுத்து வராமலிருக்க என்ன செய்யணும்?(மாஹிர் சரி செய்தார்)- பிற ஒலி வார்ப்புருக்களுக்கும் (பெயரொலி+வினையொலி) icon வர எண்ண செய்யணும்?
- விக்கி ஊடக நடுவ ஆங்கில உச்சரிப்புக்குரிய ஒலிக்கோப்பில், பல வகைகள், வேறுபட்டுள்ளன. அவற்றினை ஒருங்கிணைக்கும் முறைகளை ஆராய வேண்டும். பெயர்+வினை அவற்றில் ஒருமுறை. இதுவரை பின்பற்றப்பட்ட ஒலித வார்ப்புரு, இதற்கு பொருந்தாது. அதோடு பெயர்+வினைக்குரிய இவ்வார்ப்புருவும் இணைக்கப் படவேண்டும்.த*உழவன் 13:50, 5 மார்ச் 2010 (UTC)
ஆலோசனைக்கான வார்ப்புருக்கள்
1).
ஒலிப்பு | இல்லை |
(கோப்பு) |
டவ்
பெயரொலி | |
(கோப்பு) |
டொவ்
வினையொலி | |
(கோப்பு) |
- (3 IN 1)விக்கி ஊடக நடுவத்தின் கோப்புகளை, இழக்காமலிருக்க உருவாக்கப்பட்டது.
- (3 IN 1)விக்கி ஊடக நடுவத்தின் கோப்புகளை, இழக்காமலிருக்க உருவாக்கப்பட்டது.
2).
பலுக்கல் | இல்லை |
(கோப்பு) |
- (2 IN 1) விக்கி ஊடக நடுவத்தின் கோப்புகளை, இழக்காமலிருக்க உருவாக்கப்பட்டது.
- (2 IN 1) விக்கி ஊடக நடுவத்தின் கோப்புகளை, இழக்காமலிருக்க உருவாக்கப்பட்டது.
3).
பலுக்கல் | இல்லை |
(கோப்பு) |
- (2 IN 1) இரு அமெரிக்க ஒலிக்கோப்புகள்.
- (2 IN 1) இரு அமெரிக்க ஒலிக்கோப்புகள்.
4)
- உச்சரிப்பு(UK)
- உச்சரிப்பு(UK)
சோதனை வார்ப்புருக்கள்
(அதிகமாக உள்ள அமெரிக்கபொதுமுறை)ONLY ONE |
(பெ) டவ் ஒலிப்புகோப்பு
|
||||||||||||||
(catamaran) |
(camel) |
|
dictionary (2 (UK+US)பலுக்கல்கள் உள்ளன) |
- இதன் சொல்பக்க ஆங்கில அட்டவணைகளைப் பலரும் பயன்படுத்தும்படி வார்ப்புருக்களாக மாற்றணும்.த*உழவன் 19:55, 4 மார்ச் 2010 (UTC)
பொதுவானவை
தொகு1) [[பகுப்பு:birds] என்பதனை, [[பகுப்பு:பறவைகள்]என மாற்றியுள்ளீர்கள். அங்ஙனம், மாற்றாதீர்கள். ஏனெனில்,
dove என்ற ஆங்கில சொல்லுக்கு, பகுப்பை ஆங்கிலத்தில் செய்வதே சிறந்தது.
- தாங்கள் கூறியது சரியே. ஏனெனில், பகுப்பு:பறவைகள் --- என்பதனை பார்த்தால் அதில் ஆங்கில வார்த்தைகளும் தமிழ் வார்த்தைகளும் கலந்துள்ளன.பின் [[பகுப்பு:birds] என்பதனை பார்த்தால், அங்கு ஒரு சொல்லும் இல்லை.
ஆகவே ஆங்கில வார்த்தைகளுக்கான பகுப்பை ஆங்கில வார்த்தைகளில் கொடுப்பதுவே சரி. பகுப்பு:birds -- என்பதே சரியாகப்படுகிறது.
- பகுப்பு:பறவைகள் --- என்ற பகுப்பில் கலந்துள்ள ஆங்கில சொற்களை பகுப்பு:birds --- என்ற பகுப்பிற்க்கு மாற்றட்டுமா ?
- --திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 04:48, 30 டிசம்பர் 2009 (UTC)
மாற்ற வேண்டாம். ஏனெனில், பகுப்பு:ஆங்கிலம்-பறவைகள் என்று பகுப்பு ஏற்கனவே உள்ளது. பகுப்பு:பறவைகள்-இல் இருந்த ஆங்கிலச் சொற்களை, பகுப்பு:ஆங்கிலம்-பறவைகள்க்கு மாற்றிவிட்டேன்.த*உழவன்
2) மேலும், dove இத்தலைப்பில், இத்தாலியம், எங்கு .. போன்றவற்றை சேர்த்துள்ளீர்கள். நீங்கள் வேகமாக செயல்படுவதால் இப்பிழை ஏற்பட்டதா? அவற்றைத் தனிச்சொல்லாக சேர்க்க வேண்டுகிறேன். ஓவியம் வரைவதைப் போன்று நிதானமாக செயல்பட வேண்டுகிறேன்.
- இத்தாலியத்திலும், அதே எழுத்துக்கள் என்பதை அறிந்தேன். ஒரு எழுத்துக்கள் உடைய சொல், பல்வேறு மேற்கத்திய மொழிகளிலும் இருக்கும். ஆனால், பொருள் மாறுபடும் என்பதை உணர்த்திய திரு. பழ.கந்தசாமி புரிய வைத்தார். இருப்பினும், தற்பொழுதுள்ள அமைப்பை விட, செய்துள்ள மாற்றங்கள் படிப்பவருக்கு, உடனே மொழிப்பெயர்ப்புகளைத் தரும். மற்றவைகளை (பெயர்ச்சொல், விளக்கம்,..) பின்னுக்குத் தள்ளிவிடும்.த*உழவன் 05:39, 24 டிசம்பர் 2009 (UTC)
- dove --- என்ற சொல்லில் 3 மொழிகளுக்கான விளக்கத்தை ஒன்றின்பின் ஒன்றாக கொடுத்திருப்பது சரியாகப்படுகிறது.
- ஏனெனில், en.wiktionary --- யும் ஒரு சொல்லுக்கான பல மொழிகளில் உள்ள விளக்கத்தை ஒன்றின்பின் ஒன்றாக கொடுத்திருக்கிறது.
- மேலும் --- dove --- Spelling is same in all the languages. So, we cannot define it as another word. Since, the Spelling is same. To define as another word there should be additional criteria in the word. So, better to mention one by one as done now and it follows the standard of the English Wiktionary.
- --திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 05:37, 30 டிசம்பர் 2009 (UTC)
3) பகுப்பு:மொழிகள் என்பதில், ஏனைய மொழிகளை இணைத்ததற்க்கு மிக்க நன்றி.
- த.உழவன் 04:16, 13 ஜூலை 2009 (UTC)( தொடர்புக்கு..)
- விளக்கம் என்பது சிறிதுபடுத்தப்பட வேண்டும். விளக்கம் பகுதியில் etymology வருமா? பழ.கந்தசாமி 01:09, 31 டிசம்பர் 2009 (UTC)
விளக்கம்
தொகுவிளக்க வார்ப்புருவை சிறிது படுத்தி விட்டேன். விளக்கம் பகுதியில் சொற்பிறப்பியலைத் தந்தால் நன்றாக இருக்கும். ஒரு சொல்லைப் பார்ப்பவருக்கு, மொழிப்பெயர்ப்புக்கே முன்னுரிமை. இது போன்ற விடயங்களை, விளக்கம் பகுதியில் சேர்த்தால் நன்றாக இருக்கும். பிற விக்சனரியில் இருப்பது போன்று, மொழிபெயர்ப்பை கடைசியாக தருவதில் எனக்கு உடன்பாடில்லை.த*உழவன் 06:35, 31 டிசம்பர் 2009 (UTC)
- பொருளுக்கு அடுத்து வாக்கியப் பயன்பாடு, இலக்கணப் பயன்பாடு, பின் விளக்கம் வந்தால் நலமாக இருக்குமா? பெரும்பாலான பொருள் தேடுவோர் பொருளுக்கு அடுத்து வாக்கியப் பயன்பாடு பார்ப்பர் என்று நினைக்கிறேன் பழ.கந்தசாமி 07:07, 31 டிசம்பர் 2009 (UTC)
(தமிழ் அல்லாத பிற சொற்களுக்கு)
பல்லூடக அகரமுதலி என்பதால் முதலில் ஒலி+படம். பின், பொருள் (தமிழ்+ஆங்கி-மொழிபெயர்ப்பாக). மேலும்விரிவாக, விளக்கம் பகுதியில் 1.வாக்கியப் பயன்பாடு,2.இலக்கியப்பயன்பாடு,3இலக்கணப்பயன்பாடு,4.சொற்பிறப்பியல், 5)இசைக்கோப்பு என அந்த வரிசையில் தானே வடிவமைத்துள்ளோம்.
பொருள் தெரியாமல், வாக்கியப் பயன்பாட்டை புரிந்து கொள்ள முடியாதென நினைக்கிறேன்.ஒரு சொல்லுக்கு பொருள் புரிந்த நபரே, பல சொற்களுள்ள வாக்கியத்தின் சொற்களை அறிந்து கொள்ளமுடியும். நாம் சரியாகத் தான் வடிவமைத்துள்ளோம். த*உழவன் 07:57, 31 டிசம்பர் 2009 (UTC)
சொற்பிறப்பியல்
தொகு- Etymology --- சொற்பிறப்பியல் ---
- சொல்லின் மூலத்தை தேடுபவர்கள் குறைவே. அதைவிட சொல்லின் மூலத்தை தெரிந்து அதை இங்கு கொடுப்பவர்கள் மிகவும் அரிது. பெரும்பான்மையோர் சொல்லின் பொருள், படம், சொல்லின் உபயோகம் --- ஆகியவற்றைத் தேடுவர்.
- ஆகவே, Etymology --- சொற்பிறப்பியல் --- இவற்றை --- ஆதாரத்திற்க்கு, முன்னோ, பின்னோ கொடுப்பது சரி என்று கருதுகிறேன்.
- --திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 12:47, 31 டிசம்பர் 2009 (UTC
- ஓ, விளக்கம் என்பது அதற்குப் பின் வருபவற்றின் பொதுத் தலைப்பா? அது சொல்லின் விரிவான விளக்கத்தை மட்டும் சொல்லி பயன்பாடு போன்ற மற்றவை தனித்தலைப்புகளாக வருவது நலம் என்பது என் கருத்து. பழ.கந்தசாமி 15:42, 31 டிசம்பர் 2009 (UTC)
விளக்கம் என்ற வார்ப்புரு, பொருள் வார்ப்புருவின் துணைத்தலைப்பே ஆகும். முன்பு இதனுடன் மொழிபெயர்ப்பு என்ற வார்ப்புருவினைப் பயன் படுத்தினேன்
தமிழல்லாத சொல்லுக்கு தமிழ்=ஆங்கிலம் மட்டும் போதுமென நீங்கள் உணர்த்தியதால், மொழிபெயர்ப்பு வார்ப்புருவுற்கு இங்கு இடமில்லாது போய் விட்டது.
விளக்கம் என்ற வார்ப்புருவுக்கு கீழ் எத்தகைய விரிவான விளக்கம் தருவது என்று கூறுங்கள்.அல்லது அந்த வார்ப்புருவையே எடுத்து விடலாமா? தமிழ் சொற்களுக்கு மட்டும் விரிவான விளக்கம் தர எண்ணுகிறேன். பெரும்பாலும் வருவோர் நீண்ட நேரம் படிக்க விரும்புவதில்லை. அவர்களுக்கு மொழிபெயர்ப்பு, வாக்கியப் பயன்பாடு மட்டும் போதுமென எண்ணுகிறேன்.த*உழவன் 00:33, 1 ஜனவரி 2010 (UTC)
- விளக்கம் தேவைப்பட்டால் பொருளுக்குக் கீழேயே விளக்கம் தரலாம். அதனால, விளக்கத்தை எடுத்து விடலாம். சொற்பிறப்பைக் ஆதாரத்துக்கு மேல் வைக்கலாம்.
- மேலும், (பெ), (வி) போன்றவற்றைப் பொருளுக்கும் முன் உபதலைப்பாக வைக்கலாம். ஏனெனில், ஒரு பெ. சொல்லுக்குப் பல பொருட்கள் வரலாம். பழ.கந்தசாமி 00:58, 1 ஜனவரி 2010 (UTC)
- விளக்கம் என்ற வார்ப்புருவை நீக்க விடலாம். (பெ), (வி) என்பதிலும் உங்களுடன் உடன்படுகிறேன். அவ்வேறுபாடுகள் இல்லா இடத்தில் பின்னுக்குத் தள்ளி விடுவோம்.
சொற்பிறப்பியலையும் நீங்கள் சொன்ன இடத்தில் பதிவு செய்யலாம். திரு.பெரியண்ணன் சொன்னது மாதிரி அனைவரும் அதைக் கவனிப்பதில்லை. இருந்தால் சிறப்பே. அதிலும் தளத்திற்கு தளம், சொற்பிறப்பியல் பற்றி மாறுபட்டக் கருத்துக்கள் நிலவுகின்றன. இந்த ஒரு தளத்தில் அநேகமாக40 ஆங்கில அகரமுதலிகளை ஒப்பிடலாம். 400-500 சொற்கள் செய்திருக்கிறேன். ஒப்பிட்டுப் படிக்க அதிக நேரம் ஆகிறது என்பதால் சொற்பிறப்பியலை விட்டு விட்டேன். அதோடு அல்லாமல் சுந்தர் தமிழ் சொற்களில் என்னை கவனிக்குமாறு சொன்னார். எனக்கும் அது சரியாகவேப் பட்டது. ஆங்கில அறிவும் எனக்குக் கொஞ்சம் அதிகமென்பதால்!!!, தமிழைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டேன்.த*உழவன்
பக்க வடிவம்
தொகு- ஆங்கில விக்சனரியின் வடிவத்தை, அப்படியே தமிழ் விக்சனரியர் பலர் ஏற்றுக்கொள்ள உடன்படவில்லை. இது பற்றி, பலர் உரையாடி உள்ளனர். எனினும், நாம் அது (தமிழ் அல்லாத பிற மொழிகளுக்கு) பற்றிய ஒரு திண்ணிய முடிவை எடுக்க, இச்சொல்லை கையாளுகிறோம்.
- இதுவரை ஏற்பட்ட பக்க வடிவ அனுபவம், பிறரின் உரையாடல் கவனிப்பு ஆகிய இரண்டினையும் அடிப்படையாகக் கொண்டு இவ்வடிப்பை ஏற்படுத்தினேன்.
- உங்களுடன்(திரு.கந்தசாமி+திரு.பெரியண்ணன்) கலந்து, இவ்வடிவத்தை உறுதி பண்ண விரும்புகிறேன். (ஏறத்தாழ பல வடிவங்களை அமைத்து பார்த்த பின்பே, இவ்வடிவம் அமைத்தேன்.) உங்களுக்கு, இவ்வடிவம் (தமிழ் அல்லாத பிற மொழிகளுக்கு) பிடித்திருக்கிறதா?
- அன்பர் தகவல் உழவருக்கு, தங்களது கருத்துக்களை கவனித்தேன். நன்று.
த*உழவனே! என்று அழைப்பதையே விரும்புகிறேன்.த*உழவன் 06:35, 31 டிசம்பர் 2009 (UTC)
- தமிழ் அல்லாத மற்ற மொழிகளுக்கான வடிவமைப்புக்கு முன் உதாரணமாக தாங்கள் dove --- என்ற சொல்லை எடுத்துக்கொண்டுள்ளீர்கள். நன்று. நான், நேற்று அந்த வார்த்தையில் சிறு மாற்றங்களை செய்துள்ளேன். அதை பாருங்கள்.
நீங்கள் ஏற்படுத்திய 3மாற்றங்கள் நன்றாக உள்ளன. 4வது மாற்றமான பகுப்பு மாற்றம் தேவையில்லை என்றே கருதுகிறேன். ஏனெனில், பகுப்பு:ஆங்கிலப் பெயர்ச்சொற்கள் என்பது பொதுவானப் பகுப்பாகும். ஆனால், பகுப்பு:ஆங்கிலம் - பறவைகள் என்பது, பகுப்பு:ஆங்கிலப் பெயர்ச்சொற்கள்-இன் துணைப்பகுப்பாகும். அதற்குள்ளே அது அடங்கியிருப்பதால், பகுப்பு:ஆங்கிலப் பெயர்ச்சொற்கள் தேவையில்லை. நீக்கி விட்டேன். காரணம் பகுப்பு என்பதே தேடலின் நேரத்தைக் குறைக்கத்தானே? த*உழவன் 06:35, 31 டிசம்பர் 2009 (UTC)
- மேலும் இந்த வார்த்தையில் ஒரு சொல்லை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய விவரங்கள் உள்ளன. ஆகவே, dove --- என்ற சொல்லை முன்னுதாரணமாக வைத்து இந்த வடிவமைப்பை உறுதி செய்ய வேண்டுகிறேன்.--திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 04:08, 31 டிசம்பர் 2009 (UTC)
வார்ப்புருக்கள்
தொகு- உங்களுக்கு பிடித்திருந்தால், இதற்குரிய வார்ப்புருக்களை உருவாக்க வேண்டும். வார்ப்புருக்களைப் பயன்படுத்துவதால், நிறையப் பிழைகளை, புதுப்பயனர் ஏற்படுத்துவதைத் தவிர்க்கலாம். அவை 2ம்படி என்பதால், அதுபற்றி இதையடுத்துப் பார்ப்போம்.த*உழவன் 06:35, 31 டிசம்பர் 2009 (UTC)
- இக்கருத்தினை நான் முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன். வடிவமைப்பு பற்றி நான் கொஞ்சம் தெரிந்து வைத்துள்ளேன். ஆகவே, தாங்கள் வடிவமைப்பு பணியை தொடங்கும் போது எனக்கும் தெரிவித்தால் நானும் தங்களுடன் இணைந்து பணியாற்ற முடியும். --திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 12:39, 31 டிசம்பர் 2009 (UTC)
- {{ஆங்பலு}}என்பதனை உச்சரிப்புக்கான பொது வார்ப்புரு ஆகும். dove வினைச்சொல்லாகவும் வருவதால் இவ்வார்ப்புரு பயன்படாது. பொதுபடிவத்தின் வார்ப்புருவும் பயன்படாது. இதனை நன்கு கவனித்து, விக்கி ஊடக நடுவத்திலிருந்து, இணைப்பு கொடுத்தாலே ஒலிக்கோவைக் கிடைக்கிறது. அது போன்ற இணைப்புகள் இல்லாமல் நிறைய சொற்கள் தமிழ் விக்சனரியில் உள்ளன.--த*உழவன் 07:40, 5 பெப்ரவரி 2010 (UTC)
பகுப்புகள்
தொகு- பகுப்புகள் பற்றி, விரிவாக பின்னர் பார்ப்போம். சுருக்கமாக,
- பகுப்பு:உடற்பகுதிகள் (பல மொழிகளை உடையது.)
- பகுப்பு:இந்தி பெயர்ச்சொற்கள்(ஒரே மொழியின் உபப்பிரிவுகள்)
இவை இரண்டிலும் பார்க்கலாம்.த*உழவன் 06:35, 31 டிசம்பர் 2009 (UTC)
பட இணைப்பு
தொகுஒரு சொல்லைத் தேடும் போது அதற்குரிய பக்கம் விரைவில் கிடைக்க வேண்டும் என்ற கந்தசாமி அவர்களின் கருத்து மிகவும் அவசியம். எனவே, 4 படங்கள் கொண்ட விக்கிக் காட்சியகம் மட்டும் போதும். படமிடும் பணி அனைத்து சொற்களிலும் விரைவாக முடிக்கலாம். அதனையும், ஆதாரத்திற்க்கு மேலேயே, நாம் தரவேண்டும். விரைவான இணைய வசதி (அகண்டஅலைவரிசை - broadband) அனைவருக்கும் கிடைப்பதில்லை.
நான் இருக்கும் இடத்தில், அவ்வசதி வந்து ஒரு வருடமே ஆகிறது. அதற்கு முன் 50kbsக்கும் குறைவான வேகமே, எனக்குக் கிடைத்தது. தமிழக பள்ளிகளில், விக்கிதளங்களை அறிமுகப் படுத்த ஆரம்பித்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் விரைவான இணைய வசதி கிடைக்குமா? எனவே, நாம் படங்களின் பயன்பாட்டை அளவோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். அதற்கானக் காரணங்கள் வருமாறு.
- ஒரு படம் பயன்படுத்துவதால், அது நீக்கப்படும்போது அவ்விடத்தில் படமே இல்லாமல் போகிறது.சில நாட்களுக்கு முன் விக்கிக் கொள்கைகளால், ஏ.ஆர்.ரகுமான் படம் நீக்கப்பட்டது.
- அதனால் ஒன்றுக்கு மேற்பட்ட படங்களை பயன்படுத்த வேண்டும். அங்ஙனம் பயன்படுத்தும் போது, இணைய விரைவினைக் கணக்கில் கொள்ள வேண்டும்.
- ஒரு படமும், நான்குபடங்கள் கொண்ட காட்சியகமும் ஏறத்தாழ ஒரே பைட்டுகளை எடுத்துக்கொள்கிறது. சொல்லப்போனால், காட்சியகம் குறைவாக எடுத்துக் கொள்கிறது.ஒரு படத்தில்px அதிகமாகும் போது இது இன்னும் வேறுபடுகிறது.
- எல்லாவற்றிலும் மேலாக 4படகாட்சியகத்தினை அமைப்பது,தனிப்பட அமைப்பினை விட சுலபம். அதனையும், ஆதாரத்திற்க்கு மேலேயே, நாம் தரவேண்டும்.படமிடும் பணி அனைத்து சொற்களிலும் விரைவாக முடிக்கலாம்.
த*உழவன் 07:11, 1 ஜனவரி 2010 (UTC)
Reproduced for convenience. reference and for further comments in one place. --திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 11:57, 1 ஜனவரி 2010 (UTC)
பழ.கந்தசாமி, த*உழவன் ஆகிய இருவருக்கும் வணக்கம்.
முதலில் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்.
படம் இணைப்பது பற்றி எனது கருத்துக்கள்.
- முதலில் wikimedia Commons - ல் எத்தனை நல்ல பொருத்தமான படங்கள் கிடைக்கின்றன என்பதாகும்.
- இரண்டாவதாக சொல்லுக்கு ஏற்றபடி இருந்தால், அதை சொல்லின் வலது புறத்தில் பெரிய படமாக இணைக்கிறேன்.
- மேலும் நிறைய விதவிதமான படங்கள், நாம் முன்னர் அறிந்திராத செய்திகளுடன் இருந்தால் அவற்றை --- காட்ச்சியகத்தில் (Gallery) இணைக்கிறேன்.
- அப்படி காட்ச்சியகத்தில் இணைக்கும் போது 1-2 படங்களை இணைத்தால் பார்ப்பதற்க்குச் சரியாக இல்லை. ஆகவே, இருக்கும் நல்ல படங்களில், மிகச்சிறந்த, காணக்கிடைக்காத, சிந்தனையை தூண்டும் வகையிலான படங்களையே காட்ச்சியகத்தில் இணைக்கிறேன்.
இங்கும் இணைய தளம் மெதுவாகவே வேலை செய்கிறது. இன்று காலை படம் இணைத்த பக்கங்களும் அவை காண்பிக்கபட்ட நேரத்தையும் கீழே கொடுத்துள்ளேன்.
- --- banana --- 30 seconds
- --- வாழைப்பழம் --- 5 seconds
- --- wagon --- 17 seconds
- --- சுமை வண்டி --- 15 seconds
ஆகவே சொல்லை படிப்பதற்க்கு முனபே, படமும் தெரிகிறது. அங்கு தங்களது இணையதளத்தில் எவ்வளவு நேரத்தில் தெரிகிறது என்று கூறினால் நன்றாக இருக்கும்.
மேலும் தாங்கள் கூறியபடி, அதிகபட்சமாக, வலது புறம் ஒன்று, காட்சியகத்தில் நான்கு என்று (1+4) மொத்தம் 5 படங்களே போதும் என்று எண்ணுகிறேன்.
விக்கிக் காட்சியகத்தை நான் ஆதாரத்திற்க்கு, கீழேயே கடைசியில் இணைத்து வருகிறேன். இதனால் முந்தய தொகுப்புகளுக்கு இடைஞ்சல் ஏதும் இல்லை. இதுவே சரி என்றும் எண்ணுகிறேன்.
தாங்கள், சரியாக கூறினீர்கள். ஒரு படம் பல விளக்கங்களை கொடுக்கும்.
ஒரு படம் பத்து சொற்களுக்கு சமம் --- என்பது எனது கருத்தாகும்.
இங்கு தமிழ் விக்சனரியில் சிறிது பயிற்சி பெற்றபின்பே தமிழ் விக்கிப்பீடியா செல்ல எண்ணியுள்ளேன். தங்களிருவரிடமும் உரையாடுவதால் எனது தட்டச்சு வேகம் அதிகரித்துள்ளது. நன்றி.
நிறைய கட்டுரைகள், படங்கள் இடாமல் தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ளன --- என்று தாங்கள் கூறியுள்ளீர்கள். எனக்கு ஒரு சிறு பட்டியல் கொடுத்தால் நன்றாக இருக்கும். பின்பு நாம் அங்கும் படங்களை இணைப்போம்.
மீண்டும் புத்தாண்டு வாழ்த்துக்கள். தொடர்பு கொண்டமைக்கு மகிழ்ச்சி. நன்றி. வணக்கம். --திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 11:40, 1 ஜனவரி 2010 (UTC)
புத்தாண்டு வாழ்த்துக்கள். படங்கள் பற்றி நீங்கள் கூறப்பட்ட கருத்துக்கள் நாம் ஏற்கனவே பேசியதே. இப்படி பேசும் போது, நமக்குள்ளே பல நல்ல மாற்றங்கள்.உங்களுக்கு தட்டச்சு வேகம். எனக்குத் தெளிவு. முடிந்தவரை அதிக சொற்களுக்கு, குறைந்த காலக் கட்டத்தில் படங்களை இடலாமென எண்ணினேன். உங்களின் பட அமைப்பு நன்றாகவே இருக்கிறது. விக்கிப்பீடியாவைப்பற்றி அவ்வப்போது உங்கள் தமிழ்விக்கிப்பீடியா உரையாடல் பக்கத்தில் தெரிவிக்கிறேன். வச உடலிகளில் ஆர்மடில்லோ பற்றி எழுதுகிறேன். நீங்கள் விரும்பினால், அங்கு ஊடக க்காட்சியகம் என்ற துணைத்தலைப்பில் படங்களைச் சேர்க்கலாம். இங்கு பகுப்பு:கருவச் சொற்கள் என்பதில் முதலில் படங்கள் சேர்க்கலாம்.நன்றி. இவ்வருடம் அதிக உயர்வானவைகளை நாடுவோம்.த*உழவன் 13:40, 1 ஜனவரி 2010 (UTC)
பெயர்+வினை
தொகு- ஒரு ஆங்கிலச் சொல் பெயர்ச்சொல்லாகவும், வினைச்சொல்லாகவும் வரும் போது, அதனை அட்டவணை வடிவத்தில் வடிவமைப்பினை இட்டால் படிப்பதற்கு இலகுவாக இருக்கும்.த*உழவன்
- பெயர்-வினை(ஆங்-பெ+வி)
- மேற்கண்ட ஒலிக்கோப்பிற்கான விக்கிநிரல்களைக் கீழுள்ள(தொகு)என்பதனைச் சொடுக்கிக் காணலாம்
உங்களின் கருத்துகளை அறிய ஆவலாக உள்ளேன்.த*உழவன் 07:29, 1 மார்ச் 2010 (UTC)
- இப்படிப்பட்ட அட்டவணை நிச்சயம் பயன்படுத்தவேண்டியது. நன்றி,
- இன்னொன்று, பல பொருட்கள் வரும்போது பொருளின் பக்கத்திலேயே பயன்பாடும் வரும்படி ஒரு புதிய பக்க வார்ப்புரு இருந்தால் பயன்பாடு இன்னும் பளிச்சென விளங்கும். பழ.கந்தசாமி 15:50, 1 மார்ச் 2010 (UTC)
த*உழவனே! பக்கவடிவத்தைச் செம்மைப்படுத்தச் செய்யும் உங்களின் தொடர்முயற்சிகளுக்கு நன்றி. ஒரு சொல் பெயர், வினை என்று இரண்டும் கொண்டால் அவற்றை (1) (பெ) அல்லது (வி) என்று ஒரே அட்டவணையில் பிரித்துக்காட்டலாம் அல்லட்க்து (2) இரு தனி அட்டவணைகள் வைக்கலாம். உங்கள் கருது என்ன? பழ.கந்தசாமி 17:21, 4 மார்ச் 2010 (UTC)
- நீங்கள் கூறுவது ஆழமானச் சிந்தனைகளை உடையவை.
- பெ+வி இரண்டின் ஒலிவடிவம் ஒன்றாகத்தான் இருந்தால் புரிந்து கொள்ளுதல் எளிதே.
- பெ+வி இரண்டின் பொருளும் பயன்பாடும் தனித்தனி அட்டவணையாக அமைப்பது நமது பதிவுகளுக்கு உகந்ததாக இருக்கும். இதிலிருந்தே பெ மட்டும் வரும் சொற்களுக்கும், விமட்டும் வரும் சொற்களுக்கும் வார்ப்புருக்களைப் பிரித்தெடுக்கலாம். பெ+வி இரண்டினையும் இணைத்தால் இங்கும் பயன்படும்.
- இதன்மூலம் யாவருக்கும் எளிமையான விதி என்பது கட்புலனாகும். ஒன்றாக இணைந்த வார்ப்புருக்களால் நன்மைகளை விட, புதியவருக்கு குழப்பத்தைத் தரும்.
நல்லநேரத்தில் இத்தகையச்சிந்தனைகளைத் தந்திங்க! இரண்டினையும்(பெ+வி) ஒன்றாக இணைப்பதிலேயே, பலவித நடைமுறைகளை செய்துகொண்டிருந்தேன். சில குழப்பங்கள் அதில் இருக்கிறது. அதனை விலக்கியமைக்கு நன்றி.த*உழவன் 17:49, 4 மார்ச் 2010 (UTC)
மொழிகளின் தலைப்பு
தொகுஇப்போதுள்ள மொழிகளின் தலைப்பு, விக்கி நிறப்(சாம்பல்)பட்டையாக மாற்றப் படவேண்டும்(த*உழவன் 07:57, 3 ஜூன் 2010 (UTC))
- (1) அசைபடமாக இருந்தால் கண்ணை உறுத்துகின்றது. பொறுமையாக படிக்கவிடாமல் கண்ணை ஈர்க்கின்றது. (2) நீலக்கோடுகளால் பிரிக்கப்பட்டிருkkum பட்டை அழகாக இருப்பதாக உணர்கிறேன்.மேலும், முதலில் கொடி இட்டு பின்னர் மொழியில் பெயரை இடுவது மொழிப்பட்டை என்பதை ஒதுக்கமாக இருக்கச்செய்வதாக உணர்கிறேன் (இப்படி இருப்பது நம் கருத்தைச் சொல்லின் பொருளுக்கு நிறைவாய் இட்டுச் செல்வதாக உணர்கிறேன்). ஆகவே கீழ்காணுமாறு ஆங்கிலம், எசுப்பானியம் கிசுவாகிலி ஆகியவற்றில் இருப்பது போல இருந்தால் நன்றாக இருப்பதாக நான் உணர்கிறேன்.
இதன் ஒரு படியை, ஆலமரத்திலும் இடுகின்றேன்.--செல்வா 12:39, 3 ஜூன் 2010 (UTC)
ஆலமரத்தடியில் நீங்கள் இட்ட, எசுப்பானிய அசைப்படம் கண்டேன். ஆவலில் ஆங்கில கொடிகளின் அசைப்படத்தை உருவாக்கி, அதனைபகுப்பு:ஆங்கிலம்-பழங்கள்-ல் மட்டும் பயன்படுத்தியுள்ளேன். ஆலமரத்தடியில் பலரின் கருத்தினை அறிவோம். பலரின் கருத்தினை அறிந்த பிறகே, அதனை படிவத்தில் இணைப்பேன்.
ஒரு சொல்லினை பார்த்தவுடன், அது எம்மொழி என்பதனையே முதலில் உணர வேண்டும். அதனையே பல விக்சனரிகள் செய்துள்ளன. ஒரு சொல்லின் மொழிப்பெயர், கொடியை விட முக்கியம். கொடி என்பது ஒரு அழகு அவ்வளவே. ஆங்கிலம் அதிகமான நாடுகளில் ஆட்சி மொழியாக இருக்கும் பட்சத்தில் 5-6 நாட்டு கொடிகளை இடுவதில் எனக்கும் மாறுபட்ட எண்ணங்கள் உண்டு. ஐக்கிய இராச்சியம் தானே ஆங்கில ஆட்சியை வழி வகுத்தது. அதனால் அக்கொடியை மட்டும் இடலாமா?
நீங்கள் காட்டிய நிறத்தை விட, விக்கியோடு ஒட்டிய நிறமே என் கண்களுக்கு உறுத்தவில்லை.
dove
மற்ற மொழிகளைப்பற்றி, ஆலமரத்தடியில் தொடர்வோம். ஆங்கில கட்டமைப்பை மட்டும் இங்கு தொடர்வோம். பலரது கருத்தினையும் ஒன்றிணைக்க குவிக்க முயற்சிக்கிறேன். என்னை விட உங்களுக்கு அது எளிமையான செயல் என்றே எண்ணுகிறேன். அதற்கான முயற்சி எடுக்க வேண்டுகிறேன்.
(த*உழவன் 00:52, 4 ஜூன் 2010 (UTC))