தமிழ்

தொகு
 
போற்றுதல்:
துதித்தல்
 
போற்றுதல்:
வணங்குதல்
படிமம்:Food at a South Indian marriage.jpeg
போற்றுதல்:
உணவளித்து உபசரித்தல்
(கோப்பு)

பொருள்

தொகு
  • போற்றுதல், வினைச்சொல்.

(செயப்படுபொருள் குன்றா வினை () பெயரடை)

  • (போற்று + தல்)
  1. துதித்தல் (பிங். )
    (எ. கா.) போற்று மடி யாருண்ணின்று நகுவேன் (திருவாச. 5, 60).
  2. வணங்குதல் (பிங். )
  3. பாதுகாத்தல்
    (எ. கா.) போற்றி னரியவை போற்றல் (குறள். 693).
  4. வளர்த்தல் (W.)
  5. பரிகரித்தல்
    (எ. கா.) புறஞ்சொற் போற்றுமின் (சிலப். 30, 188).
  6. கடைப்பிடித்தல்
    (எ. கா.) புகழ்ந்தவை போற்றிச் செயல் வேண்டும் (குறள்.538).
  7. உபசரித்தல்
    (எ. கா.) எம்மைப் போற்றவே (கம்பரா. அரசியல். 40).
  8. விரும்புதல்
    (எ. கா.) போற்றிக் கேண்மதி (பொருந. 60).
  9. கருதுதல்
    (எ. கா.) பொச்சாவாக் கருவியாற் போற்றிச் செயின் (குறள். 537).
  10. மனத்துக்கொள்ளுதல்
    (எ. கா.) கொண்டனர் நிரை போற்றெனக் கூறினான் (சீவக. 430).
  11. கூட்டுதல் (பிங். )

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. To praise, applaud
  2. To worship
  3. To protect, cherish, keep with great care
  4. To nourish
  5. To guard against
  6. To adhere, hold fast to
  7. To entertain to treat with regard
  8. To desire
  9. To consider
  10. To understand to pay attention to
  11. To gather together


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=போற்றுதல்&oldid=1969365" இலிருந்து மீள்விக்கப்பட்டது