மச்சாவதாரம்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- மச்சாவதாரம், பெயர்ச்சொல்.
- (புறமொழிச்சொல்--சமசுகிருதம்--मत्स + अवतार = मत्सावतार = மத்1ஸாவதா1ர =- மச்சாவதாரம்)
- காண்க...மத்ஸ்யம், 2
- திருமாலின் பத்து அவதாரங்களில் முதலாவதான மீனவதாரம்; மத்ஸ்யம்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- See....மத்ஸ்யம், 2
- the first incarnation of Vishnu, as fish
விளக்கம்
தொகு- மச்சாவதாரத்தைக் குறித்து பற்பல மாறுபட்ட விளக்கங்கள் இருப்பினும் கரு ஒன்றே!... வடிவங்கள்தான் வேறுவேறானவை... ...சத்திய/கிரித யுகத்தில் பிரசாபதி என்னும் படைப்புக் கடவுளான பிரம்மன், உறக்க மயக்கத்தில் கொட்டாவி விட்டபோது அவர் வாயிலிருந்து நான்கு வேதங்களும் வெளியேத் தோன்றின...அப்போது அங்கு வந்த சோமுகாசுரன்/அயக்ரீவன் என்னும் குதிரை முகம் கொண்ட அரக்கன் தன் யோக சித்தியினால், அந்த வேதங்களைக் களவாடிக் கடலுக்குள் புகுந்து, அவற்றை ஒளித்து மறைத்துவிட்டான்...பிரம்மன் இந்த நிகழ்வை அறியாமல் ஆழ்ந்துத் தூங்கிவிட்டார்...வேதங்கள் தன்வசம் இல்லையேல் அவருக்குப் படைப்புத் (சிருட்டி) தொழிலை செய்ய ஏலாது...உலகத்தில் அறம் ஒழுங்காக நிறைவேற வேதத்தின் துணை மிக அவசியம்....
- பிரம்மன் உறங்கும்போதுதான் பிரளயம் எனப்படும் உலகின் எல்லாக் கடல்களும் பொங்கியெழுந்து ஆழிப்பேரலைகளால் உலகம் முழுவதும் தண்ணீரில் மூழ்கடிக்கப்பட்டுவிடும்...அதன்படியே இம்முறையும் மகாப்பிரளயம் ஏற்பட்டு மூன்று உலகங்களும் கடற்நீரில் மூழ்கின...
- இந்தப் பிரளயம் ஏற்படுவதற்கு ஏழு நாட்களுக்கு முன் ஒரு நிகழ்வு நடந்தது...ஏழாவது மனு எனப்படும் சத்தியவிரதன் ஒரு திராவிட நாட்டு மன்னர்...தீவிர திருமால் பக்தரான இவர், உணவு ஒன்றும் உட்கொள்ளாமல் தண்ணீரை மட்டும் அருந்தி, திருமாலை வழிபட்டுக்கொண்டு வாழ்ந்துவந்தார்...அநேக வியக்கத்தக்க நிகழ்ச்சிகளுக்குப்பின் ஒரு சூழ்நிலையில் இறைவன் திருமால் சத்தியவிரதனிடம் உலகம் முடிவுறும் சமயம் எழுநாட்களில் வந்துவிடும்..அப்போது நான் ஒரு பெரிய படகை அனுப்புகிறேன்... நீ உலகின் அனைத்து மரம், செடி, கொடிகள், வித்துக்கள் மற்றும் உயிரினங்களில் வகைக்கு ஒன்றாக மாதிரிக்காகச் சேகரித்துக்கொண்டு, படகில் சப்த உருசிகளுடன் ஏறிக்கொள்...பிரளய காலத்தில் உலகம் நீரில் மூழ்கி, கடும் இருட்டும், பெரும் சுழற் காற்றும் உள்ளபோது ஒரு திமிங்கலமாக (ஒரு பெரும் மீன்) கடலில் நான் தோன்றுவேன்...சப்த உருசிகள் உனக்கு ஒளிமயமாக இருந்து வழிகாட்டுவர்...அப்போது வாசுகியை (ஒரு தெய்வீகப் பாம்பு) கயிறாகப் பயன்படுத்தி, நானான திமிங்கலத்தின் கொம்பில் (செதிள்) படகைக் கட்டிவிடு...கடும் சுழற்காற்றில் உன் படகு அலைக்கழிக்கப்பட்டு கவிழ்ந்துவிடாமல் காப்பாற்றி, தூங்கிக்கொண்டிருக்கும் பிரம்மன் விழித்தெழுந்து, அழிந்த உலகை மீண்டும் உண்டாக்கும் வரை, பெருங்கடலில் ஒரே சீராக படகோடு சஞ்சரித்துகொண்டிருப்பேன்! என்று அருளினார்...அவ்வாறே எல்லாம் நடந்தேறியது...
- பிரம்மனின் தூக்கம் கலைந்தது... உலகத்தைக் கவ்வி இருந்த இருட்டு விலகி, ஒளிப் படலங்கள் தோன்றின....ஓயாது பெய்த மழையும் நின்றது... பொங்கிப் பெருகிய தண்ணீர் வடிய ஆரம்பித்தது...திமிங்கலமாக இருந்த திருமாலும் படகைக் கரை சேர்த்தார்... சத்திய விரதன் அந்நேரம் பிரம்மனைப் புது சிருட்டிக்காக, அழிவுற்ற உலகில் மீண்டும்உயிரினங்களின் தோற்றத்திற்காக, தொழுது வழிபட்டார்.. பிரம்மன் அவர் முன்பு தோன்றி, அவர் கோரிக்கையை ஏற்றுத் தம் சிருட்டியைத் தொடங்க நினைத்தபோதுதான், வேதங்கள் அவரிடமிருந்து களவாடப்பட்ட விபரம் அவருக்குத் தெரிந்தது...செய்வதறியாமல் காக்கும் கடவுளான திருமாலை நோக்கி தியானம் செய்தார்... அதுசமயம் மீனாகவே (திமிங்கலமாகவே) இருந்த இறைவன், வேதங்களை அயக்ரீவன் கடலுக்குள் ஒளித்து வைத்திருப்பதை அறிந்து, இடுப்பிற்கீழ் மீன் உருவமும், இடுப்பின் மேற்புறம் ஆயுதங்களோடுக் கூடிய நான்கு கைகளுடனும் உருக்கொண்டு, கடற்வெள்ளத்திற்குள் புகுந்தார்...அங்கு அயக்ரீவனைக் கண்டு, அவனுடன் போர் புரிந்து, அவனைக் கொன்று, வேதங்களை மீட்டு, மீண்டும் பிரம்மனிடம் ஒப்படைத்து,. மறுபடியும் சிருட்டியைத் தொடங்கும்படி சொன்னார்...பிரம்மனும் தன் கடமையான படைப்புத் தொழிலைச் செய்யத் தொடங்கினார்...இதுவே மச்சாவதாரத்தின் ஒருங்கிணைக்கப்பட்டச் சுருக்கமானக் கதை...
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +