நரசிங்காவதாரம்
நரசிங்காவதாரம்(பெ)
பொருள்
- திருமாலின் பத்து அவதாரங்களில் நான்காவதாகிய மனித உருவும் சிங்க உருவும் கலந்த நரசிங்க அவதாரம்; நரசிங்கமூர்த்தி; நரசிம்மமூர்த்தி
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
- the fourth incarnation of Vishnu, as a man-lion
விளக்கம்
- (வடமொழி மூலம்.தத்பவம்)> ந்ரு(மனிதன்)+சிம்ஹம்(சிங்கம்)+அவதாரம் (திருத்தோற்றம்)=ந்ருசிம்ஹாவதாரம்=நரசிங்காவதாரம்.மனித உருவமும் சிங்க உருவமும் இணைந்த அவதாரமானதால் இந்தப்பெயர் உண்டானது.
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- வருசிங்க முகமி டக்கை வலக்கையிற் றிரிப தாகம்
- தெரியவே பிடித்தா னார சிங்காவ தாரத் திற்கும் (மஹாபரத சூடாமணி)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---நரசிங்காவதாரம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
- தசாவதாரம் - மச்சாவதாரம், கூர்மாவதாரம், வராகாவதாரம், நரசிங்காவதாரம், நரசிம்மாவதாரம், வாமனாவதாரம், பரசுராமாவதாரம், இராமாவதாரம், பலராமாவதாரம், கிருஷ்ணாவதாரம், பௌத்தாவதாரம், கல்கியவதாரம்
- நரசிங்கம், நரசிம்மம், நரசிங்கன், நரசிம்மன், நரசிங்கமூர்த்தி; நரசிம்மமூர்த்தி
- ஆளரி, சிங்கப்பிரான், நரசிங்கராச்சியம், நரசிங்கவாசனம், நரமடங்கல், நரவரி, நிருசிங்கம், மடங்கல், மானுடமடங்கல், லக்ஷ்மீநரசிம்மன், நரசிம்மசயந்தி, நரசிம்மதாபினி
- அவதாரம், தோற்றம், திருமால்