மாயை
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
விளக்கம்
- இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
மொழிபெயர்ப்புகள்
மாயை (பெ) | ஆங்கிலம் | இந்தி |
பொய்த்தோற்றம் | illusion, unreality | _ |
மாய வித்தை | sorcery, witchcraft, magic | _ |
வஞ்சகம் | deception, fraud, trick | _ |
காளி | Kali | _ |
பார்வதி | Parvati | _ |
மாயாதேவி | goddess of Maya | _ |
மாயாபுரி ; அரித்துவாரம் என்னும் புண்ணியஸ்தலம் | The sacred city of Hardiwar | _ |
நரகம் | hell | _ |
மூலப்பிரகிருதி | primordial matter | _ |
விளக்கம்
- மாயை என்ற சொல் பல தளங்களில் பயன்படுத்தப்படுகிறது. உண்மையை மறைக்கும் திரை என்ற பொருளிலேயே அது பொதுவாக பயன்பட்டாலும் பிற்கால மதங்களில் பிரபஞ்ச சாரமான சக்தியின் அலகிலா அழகுத்தோற்றமாக கருதப்படுவதும் உண்டு (சங்கரமதம், அத்வைதம்,மாயாவாதம், ஜெயமோகன்)
- ஆனாலும் அவ்வப்போது நந்தினியின் மோகமாகிய மாயை தம் அறிவை மறைத்து வந்தது என்று துயரத்தோடு எடுத்துச் சொன்னார் (பொன்னியின் செல்வன், கல்கி)
- இந்தி கற்பதனால் வேலை வாய்ப்பு பெருகும் என்பது ஒரு மாயை. இன்று வாய்ப்புகள் தமிழ்நாட்டில்தான் உள்ளன. வடக்கே அல்ல. (இந்தி,சம்ஸ்கிருதம்,தமிழ், ஜெயமோகன்)
- '"மாயை இம் மான்" என, எம்பி, வாய்மையான்,
- தூயன உறுதிகள் சொன்ன சொல் கொளேன் (கம்பராமாயணம்)
{ஆதாரம்} ---> DDSA பதிப்பு வின்சுலோ