மோழை
பொருள்
தொகு- மோழை = மேழை, பெயர்ச்சொல்
- வரப்பில் அமைக்கும் மடையின் கீழ் இருக்கும், நீர் கசியும் துளை.
- மடு
- ஆழியா னென்று மாழ மோழையிற் பாய்ச்சி (திவ். பெரியாழ்.)
- மூத்தது மோழை, இளையது காளை.(பழமொழி)
- கொம்பில்லா விலங்கு
- ஏழையைக் கண்டால் மோழையும் பாயும்(பழமொழி)
- கஞ்சி அக. நி.
- வெடிப்பு அக. நி.
- காடி
- புளிக்கோசுபோன்ற குழம்பு வகை.
- மொட்டை
- மரத்தின் அடிமுண்டம்
- மடமை
- மோழை மோவத்தினுக்கும் (மேருமந். 103).
- கீழ் ஆறு
- மண்டலங் கிழிந்த வாயின் மறிகடன் மோழை மண்ட (கம்பராமாயணம்).
- குமிழி
- அண்ட மோழை யெழ (திவ். திருவாய்)
காட்சியகம்
தொகு-
கொம்பில்லா விலங்கு
-
மடு
-
வரப்பத்துளை
-
குமிழி
-
மரமுண்டம்
-
காடி
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
இலக்கியங்களில் மோழை
தொகு- அகநானூறு: கூழை உளர்ந்து மோழைமை கூற உம்
- கம்பராமாயணம்: மண்டலம் கிழிந்த வாயில் மறிகடல் மோழை மண்ட
- தேவாரம்: முன்பு சொன்ன மோழைமையால் முட்டை மனத்தீரே
- திருமந்திரம்: கண்ணாறு மோழை படாமல் கரை கட்டி
- திருப்புகழ்: ஏழையை மோழையை ...... அகலாநீள்
- வில்லிபாரதம்:மூவரும் செயல் ஏது என நாடினர்; மோழை கொண்டது, மூடிய கோளமே.
- மோட்டை - மோவம் - மோழி - மோழைக்கறுப்பு - மோழைக்கொம்பு
( மொழிகள் ) |
சான்றுகள் ---மோழை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி