தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • வாமம், பெயர்ச்சொல்.
  1. தொடை
    (எ. கா.) மென்கதலித் தண்டனைய . . . வாமத்தாள் (காளத். உலா. 466)
  2. அழகு (பிங். )
    (எ. கா.) வாமச்சொரூப முடையோய் (இரகு. திக்குவி.140)
  3. ஒளி (சூடாமணி நிகண்டு)
    (எ. கா.) வாம மேகலை மங்கையோடு (கம்பரா. கைகேசி. 49)
  4. இடப்பக்கம்
    (எ. கா.) வாமத்தாண்மேல்வர வலத்தாண்மேனின்று (திருவாலவா.32. 8)
  5. நேர்மையின்மை
    (எ. கா.) வாமப்போர் வயப்பிசாசனும் (கம்பரா. படைத்தலை. 49)
  6. எதிரிடை (W.)
  7. தீமை
    (எ. கா.) வாமக்கள்ளைக் குடித்தவர்போலே (குற்றா. குற. 105)
  8. அகப்புறச்சமயம்
    (எ. கா.) ஆறனுள் அனைத்துலகும் சத்தியின் பரிணாமமே என்றும் சத்தியுடன் இலயித்தலே முத்தியென்றும் கூறும் மதம் (சி. போ. பா. அவையடக். பக். 50)
  9. பாம்பு வகை (W.)
  10. முலை (W.)
  11. செல்வம் (W.)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Thigh
  2. Beauty
  3. Light, brightness, splendour
  4. Left side
  5. Unrighteousness, injustice
  6. Opposition
  7. Evil, baseness
  8. (சைவ சித்தாந்தம்) A šaiva sect which declares that the whole universe is a manifestation of šakti, and that salvation consists in absorption in Her, one of six aka-p-puṟa-c-camayam, ( ← இதைப் பார்க்கவும்)
  9. A kind of snake
  10. Woman's breast
  11. Riches


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வாமம்&oldid=1347140" இலிருந்து மீள்விக்கப்பட்டது