விக்சனரி:ஆலமரத்தடி/2012/2

பக்க வடிவம் பற்றிய உரையாடல்கள் (இதுவரை நடந்த உரையாடல்கள் தொகுதி) தொகு

  1. தமிழ் விக்சனரி பக்க வடிவமைப்பு என்பது எல்லாச் சொற்களுக்குமான கலந்துரையாடல் பகுதி ஆகும்.

User:TamilBOT(மற்றவரின் வேலைகளையும், இது முடிக்க உதவுகிறது) தொகு

விக்சனரி மென்பொருள் குறித்தவைகள்(இதுவரை நடந்த உரையாடல்கள் தொகுதி) தொகு

தமிழ் விக்சனரியை என்னால் பதிவிறக்கம் செய்ய முடியுமா?(அடிக்கடி வினவும் (FAQ)பகுதிக்குரியது) தொகு

தமிழ் விக்சனரியை ஆங்கில விக்சனரி போல் என்னால் என்னுடைய கணிணியில் பதிவிறக்கம் செய்ய முடியுமா? தங்களுடைய தகவலுக்கு என்னுடைய முன்னேகு நன்றி.

முடியும். தமிழ் விக்சனரியின் பதிவிரக்கக்கூடிய தரவுதளம் இங்குள்ளது. இது குறித்த மேலதிகத் தகவல்களை இப்பக்கத்தில் காணலாம்--Sodabottle 05:10, 1 மே 2011 (UTC)[பதிலளி]

ஏனெனில் என்னுடைய கணிணியில் இணைய இணைப்பு இல்லை. ஆனால் இது போன்ற பயனுள்ள வலைத்தளங்களை என்னுடைய கணிணியில் சேமித்துக் கொள்வதில் ஆர்வம் அதிகம். அதுவும் தமிழ் வலைத்தளம் என்பதால் கொஞ்சம் அதிகமாகவே உள்ளது.

அத்துடன் இதுவரை கணிணியில் ஆங்கில அகராதியை மட்டுமே வநததற்கு தமிழ் அகராதியை உபயோகிப்பது புதிதாக் உள்ளது.

தலைப்புகளில் இலக்கமிடல் தொகு

தமிழ்விக்கிப்பீடியாவில் இல்லாதவகையில், இங்கு தலைப்புகளில் தானியக்கமாக இலக்கமிடப்படுகிறது. இங்கு அதனின் தேவை என்ன? dado, அம்மா, யானை தலைப்புகளைப் பாருங்கள். ஒன்று இரண்டு, மூன்று என தலைப்புகளின் முன்னொட்டாக எண்கள் அமைந்துள்ளது. அதனை நீக்கலாமா?--04:56, 3 செப்டெம்பர் 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..


அரேபியம்-தமிழ், சீனம்-தமிழ் பதிவுகள் தொகு

سلام(அரேபியம்), (சீனம்) சொற்களைப் போல, ஏறத்தாழ 1500 அரபுமொழிச்சொற்களையும், 1000அடிப்படை சீனச்சொற்களையும் பொதுக்கணக்கான TamilBOT என்பதன் வழியாக, ஒலிக்கோப்புகளுடன், பதிவேற்ற உள்ளேன். இது குறித்து மற்றவரின் கருத்தறிய ஆவல். அப்பதிவேற்றம் இன்னும் 5நாட்களுக்குப்பிறகு தொடங்கும்.--13:57, 15 செப்டெம்பர் 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

  • சீனம்-ஆங்கிலம்-தமிழ் அகரமுதலி யின் குறிப்புகளை, இந்த கூகுளின் இணைய அட்டவணைச் செயலியில், காணலாம்.
குறிப்பு:கொடுத்துள்ள மொழிபெயர்ப்புகள் தவறெனின், அடுத்தக்கட்டத்தில் எழுதவும்.--05:53, 23 செப்டெம்பர் 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..
  • அரேபியம்-தமிழ் அகரமுதலி யின் குறிப்புகளை, இந்த கூகுளின் இணைய அட்டவணைச் செயலியில் காணலாம்.

நல்லதோர் முயற்சி பதிவேற்றலாமே--Pitchaimuthu2050 06:25, 23 செப்டெம்பர் 2011 (UTC)

மிகத் தாமதமான பதிலுக்குப் பொறுத்தருள்க. இத்தகைய சொற்களை ஆங்கில விக்சனரியில் இருந்து எடுத்துத் தமிழாக்கி ஏற்றுகிறோம் என்று ஊகிக்கிறேன். இவ்வாறு ஏற்றப்படும் பிற மொழிச் சொற்கள், அம்மொழிகள் பற்றி நம்மில் யாருக்காவது தேர்ச்சி உண்டா? அவ்வாறு இல்லாத நிலையில் இவற்றை மேம்படுத்துவதும், சரி பார்ப்பதும் இயலுமா? ஏனெனில் ஒரு மொழியில் இருந்து ஆங்கிலத்துக்கு மாற்றி அதில் இருந்து தமிழுக்கு மாற்றுகிறோம் என்னும் போது நுணுக்கமான பொருள் மாற்றம் வர வாய்ப்புண்டு. பிற மொழித் திரைப்படங்களை ஆங்கில உரைத்துணை உதவியுடன் பார்க்கும் போது இதனை உணரலாம். அந்தந்த மொழிகளின் நுணுக்கங்களை நேரடியாக அறிந்தோர் பதிவேற்றினால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்--இரவி 12:37, 14 பெப்ரவரி 2012 (UTC)
இரவி, நீங்கள் சொல்வது முக்கியமான கருத்து. ஆங்கிலத்திலும், தானியங்கியாய் மொழிபெயர்ப்பதை அவர்கள் சுட்டிக்காட்டி "இவை சரிபார்க்க வேண்டியவை- தானியங்கியால் செய்த பெயர்ப்பு" என்பது போன்ற அறிவிப்பை இடுகிறார்கள். எனக்கு சீனமொழி தெரியும் என்று சொல்லிக்கொள்ள முடியாவிட்டாலும், சீனம் மிகமிகச் சிறிதளவு முறைப்படி படித்திருக்கின்றேன். இவ்வறிவு போதவே போதாது. தகவல் உழவன் செய்வது போல் செய்யலாம் என்றே நினைக்கின்றேன், ஆனால் மிகவும் கவனமாகவும், முடிந்தால் ஆங்கிலத்தோடு இன்னும் இரண்டொரு வேற்றுமொழிகளிலும் பார்த்து உறுதி செய்து இடலாம். அண்மையில் 妈妈 (ஒலிப்பு: சீரான உயரொலி முதலில் வரும் மா கொண்ட "மா̄ம "(பின்யின் māma) என்பதன் பொருள் அம்மா என்பதாகும், ஆனால் தவறுதலாக பாட்டி என்று பொருள் இட்டிருந்தது முதலில். இது யாருக்கும் நேரக்கூடிய இயல்பான பிழையாக இருக்கும் என்பதை அறிவேன். சீன மொழியில் மா என்ற சொல்லே நான்கு விதமாகச் சொன்னால் ஒவ்வொன்றுக்கும் பற்பல வெவ்வேறு பொருள்கள் உண்டு. மா என்பது ஒலிக்கும் குரல் ஏற்றத்தாழ்வைக் கொண்டு குதிரையாக இருக்கலாம், வினாவைக் குறிக்கு பின்னொட்டாக இருக்கலாம், அம்மாவைக் குறிக்கலாம்-என்று இப்படியாகப் பல பொருள்கள் உண்டு. ஓரளவுக்கு அறிந்து எழுதுவது பயனுடையதாக இருக்கும் என்பது கருத்து. சீன மொழியின் வினைச்சொற்கள் பிறமொழிச்சொற்கள் போல் அல்ல, மிகவும் வேறான முறையில் செயற்படும். தமிழில் பெயர்க்கும் பொழுது தமிழில் ஏவல் வினையில் வரும் பொது வடிவமே சிறந்தது. தமிழில் படி, உழை போன்ற வினைவடிவங்கள் ஏவற்பொருளில் இருந்தாலும், அவை வினையின் திணை, பால், காலம் போன்றவற்றால் மாற்றம் பெறாத வடிவாகவும் இருப்பதால், அதுவே சிறந்த பொது வடிவம். படி என்பது படித்தான், படிப்பேன், படிக்கிறாள், இயந்திரம் படிக்கின்றது என்றெல்லாம் திணை, பால், காலம் முதலானவற்றுக்கு ஏற்ப மாறாத வடிவ்ம் "படி" என்பது. சீனமொழியில் இறந்தகால வடிவம், எதிர்கால வடிவம் என்று வினைச்சொல் மாற்றம் அடையாது. --செல்வா 15:16, 14 பெப்ரவரி 2012 (UTC)
செல்வா, தகுந்த எடுத்துக்காட்டோடு விளக்கி இருப்பதற்கு நன்றி. தமிழ் மட்டுமே அறிந்த தமிழர் பல மொழிகளிலும் உள்ள அடிப்படைச் சொற்களை அறிய வேண்டும் என்பதே இம்முயற்சியின் நோக்கமாக இருக்க முடியும். அகரமுதலிப் பணி என்பது அந்தந்த மொழிகளை அறிந்த தேர்ந்த அறிஞர்கள் செய்ய வேண்டிய பணி. விக்கியில் அந்த அளவு இறுக்கமான நடைமுறை கிடையாது என்றாலும், குறைந்தபட்சம் குறிப்பிட்ட மொழியை நேரடியாகக் கற்றுத் தேர்ந்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். மூல மொழியில் இருந்து ஆங்கிலத்துக்குத் தானியக்கமாய் மொழிபெயர்த்திருந்தார்கள் என்றால், இன்னும் சிக்கலாகும். தானியங்கியால் செய்ததாக இருந்தாலும் சரி, நேரடியாக மாந்த அறிவின் மூலம் செய்ததாக இருந்தாலும் சரி, தமிழ் விக்சனரியில் இம்மொழியில் தேர்ந்தவர்கள் நேரடியாகச் சரி பார்க்க இயலாதவரை, இவற்றின் தரம் / நம்பகத்தன்மை கேள்விக்குறியானதே. சரி பார்க்க வேண்டிய அறிவிப்புகளை இட்டாலும், சில மொழிகள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ள சிறிய தமிழ் விக்சனரி சமூகத்தில் இது உடனடியாக நடக்கக்கூடியது அன்று. இது குறித்து இச்சொற்களைப் பதிவேற்றி வரும் த.உழவன், ஏனைய பயனர்களின் கருத்தை அறிய விரும்புகிறேன். நன்றி--இரவி 19:05, 14 பெப்ரவரி 2012 (UTC)
அடிப்படைச் சொற்களுக்கு மூலமொழி அறிவு தேவையில்லை என்பது என் கருத்து. அடிப்படைச் சொற்களில் பெரும்பாலானவைக்கு இடம் சார் பொருள்மாற்றம் நிகழாது. மேலும் பதிவேற்றுபவரின் மொழிப் புலமையை விட உசாத்துணையின் நம்பகத்தன்மையே முக்கியமானது. விக்கி என்பதே ”தேர்ந்த அறிஞர்கள்” / துறை அறிஞர்கள் / குறிப்பிட்ட தகுதி கொண்டோரை எதிர்ப்பாக்காமல் அனைவரும் செய்வது தானே. தமிழுக்கும், ஆங்கிலத்தும் உருவாக்கும் போதும் நாம் கற்றுத் தேர்ந்த அறிஞர்கள் கிடையாதே. பயன்படுத்தும் உசாத்துணையும் மூலநூலும் தரமானதாக இருந்தால் / சரி பார்க்க இயன்றதாக இருந்தால் போதும். (ஆங்கில மொழிபெயர்ப்பு தானியங்கி முலம் செய்யப்பட்டிருந்தால் அதை மீண்டும் தமிழாக்கம் செய்வதைத் தவிர்க்கவேண்டும்) --சோடாபாட்டில்உரையாடுக 19:23, 14 பெப்ரவரி 2012 (UTC)
// மேலும் பதிவேற்றுபவரின் மொழிப் புலமையை விட உசாத்துணையின் நம்பகத்தன்மையே முக்கியமானது. விக்கி என்பதே ”தேர்ந்த அறிஞர்கள்” / துறை அறிஞர்கள் / குறிப்பிட்ட தகுதி கொண்டோரை எதிர்ப்பாக்காமல் அனைவரும் செய்வது தானே. தமிழுக்கும், ஆங்கிலத்தும் உருவாக்கும் போதும் நாம் கற்றுத் தேர்ந்த அறிஞர்கள் கிடையாதே.// அதனால் தான் விக்கியில் ஒருவரின் கல்வித் தகுதி, துறை அறிவு குறித்த இறுக்கமான நடைமுறை இல்லை என்று முன்பே குறிப்பிட்டேன். மொழியில் புலமை என்பது வேறு, பதிவேற்றுபவருக்கு மொழியே தெரியாது என்பது வேறு. தமிழ் படிக்கும் சீன மாணவரோ, சீன மொழி படிக்கும் தமிழ் மாணவரோ இது போன்ற சொற்களைச் சேர்ப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. (சீனம்) பக்கத்தில் இரண்டு வெளியிணைப்புகள் உள்ளன. அங்குள்ள ஆங்கிலப் பொருளைச் சரி பார்க்க முடிகிறது. ஆனால், சீன எழுத்தையோ சொல்லையோ நேரடியாகப் படிக்க இயன்றவரால் தான் மூலப் பொருளை உறுதி செய்ய முடியும். தமிழ் விக்சனரி போன்ற சிறிய சமூகத்தில் ஒவ்வொரு அயல்மொழியையும் அறிந்த பல பயனர்கள் இருக்க மாட்டார்கள். எனவே, சொல்லைப் பதிவேற்றுபவராவது நேரடியாக அம்மொழியை அறிந்திருப்பது அவசியமாகப் படுகிறது--இரவி 10:42, 15 பெப்ரவரி 2012 (UTC)

பதிவேற்றலாம். ஆனாலும் அம்மொழிகளில் தேர்ச்சியுள்ளவர்கள் சரிபார்ப்பது நன்று. அது வரை இந்த வார்ப்புரு போல இதற்குப் பொருத்தமான வார்ப்புருவை உருவாக்கி அந்த வார்ப்புருவை இட்டு விடலாம். --மதனாஹரன் 12:20, 15 பெப்ரவரி 2012 (UTC)

  • பதிவேற்றுபவருக்கு அம்மொழி தெரிந்திருத்தல் மிக உதவியாக இருக்கும். அவ்வகையில் அவர் விக்சனரியில் இடப்படும் அம்மொழிச் சொற்களைச் சரிபார்க்கவும் இயலும். எனக்கு எசுப்பானியம் எழுத, படிக்க, பேசத் தெரியும் என்பதால் நான் அம்மொழிச் சொற்களை அவ்வப்போது பதிவேற்றிவருகிறேன். பழ.கந்தசாமி 15:54, 16 பெப்ரவரி 2012 (UTC)

தகவலுழவன் எண்ணங்கள் தொகு

நீண்ட நாட்களுக்கு பிறகு, எனது முதல் முயற்சி குறித்து எண்ணங்களை வெளிப்படுத்தியமைக்கு முதலில் நன்றி கூற விரும்புகிறேன்.

1) விக்சனரி ஒரு பன்மொழி அகரமுதலி என்பதற்கு ஏற்ப, முன்பு இந்தியை செய்தேன். இப்பொழுது, சீனம்-தமிழ் அகரமுதலிக்கு, ஆங்கில விக்சனரியின் தரவுகள் நன்கு உதவுகிறது. அங்கும் வளர் நிலையில் இருக்கிறது. அதன் ஒலிக்கோப்புகள், முன்பு வேறொரு பிரான்சிய இணையத்தளத்தில் இருந்தது. தற்பொழுது அத்தளம் ஏனோ இல்லை. ஆனால், காமென்சில் அதன் ஒலிக்கோப்புகளைப் பதிவேற்றி வருகின்றனர். ஆங்கிலத்தின் துணைக் கொண்டு, அடிப்படை மாண்டரினைக் கற்கிறேன்.


2)கற்றலின் முதல் நிலை ஒலிப்புகளை கேட்டல் என்பதால், சில மாதங்களுக்கு முன் ஆங்கில விக்சனரியில் இருந்து ஒலிக்கோப்புகளை பிரித்தெடுக்க முயன்றேன். தோல்வி. தற்பொழுது, நிரல் இயக்கத்தால், ஒலிக்கோப்புகளை மட்டும் பிரித்தெடுத்து வைத்துள்ளேன். அதனை ஒவ்வொரு நாளும்,10சொற்களை என்ற அடிப்படையில் நம் தமிழ்விக்சனரியில் சரிபார்த்து இணைக்கிறேன்.

3) இம்முயற்சியின் முதல் வரியான Translingual என்பதனை மொழியிடைக்குறி என்று மொழிபெயர்த்து இட்டேன்.செல்வா அதனை பன்மொழிகுறியீடு என மாற்ற ஆலோசனைச் சொன்னார். அடுத்து Mandarin, என்ற சொல்லை, எப்படி என்று பவுலிடன் வினவிய போது, அவர் மண்டரின் சீனம் என மாற்றலாம் என ஆலோசனைக் கூறினார்.

4)அதற்கு அடுத்தது ஒலிக்கோப்பு. மேலே குறிப்பிட்டுள்ளேன்.

5)அதற்கு அடுத்து வரும் பொருளை, சரி பார்க்க ஏற்கனவே வேண்டுகோளை வைத்துள்ளேன். நானே எனது முயற்சியில் சீனத்தைத் தாய்மொழியாகக் கொண்டவரிடம் உதவியோடு, இருக்கும் ஒருசில பொருள் மயக்கத்தை/பிழையைக்களைவேன். எனது இந்த முதல்முயற்சியில், தவறு வராமல் கவனித்தே செயல்படுகிறேன். இச்செயலை செவ்வனே செய்ய, பலரின் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது என்பதனையே அங்கு கேட்டுள்ளேன். இயன்றால் உதவுங்கள்.

6)மொழிபெயர்ப்பு சரிபார்க்கப்பட வேண்டும் என்ற குறிப்பை இடலாமென்றே, நானும் எண்ணுகிறேன். பிறகு, அக்குறிப்பை எடுக்க, எத்தகைய அணுகுமுறையை நான் கையாள வேண்டும்? பிறகு, சில மாதங்கள் கொடுத்தால், உரியவர் இங்கு சரிபார்க்க, முறைப்படி ஆவண செய்கிறேன்.

7) உங்களின் வழிகாட்டல்கள் எனது நோக்கத்திற்கு பேருதவியாக இருக்குமென்றே எண்ணுகிறேன். ஏனெனில், இந்திய அலுவலக மொழிகளுக்கு எல்லாம், அந்தந்த மொழிகாரர்களே பதிவேற்றிட முயற்சிக்கிறேன்.எங்களுக்குள் ஆங்கிலம் இடைமொழியாக இருக்கிறது. அதுபோலவே வங்க மொழி, தெலுங்கு மொழி, கன்னட மொழி, மலையாள மொழி,நேப்பாள மொழி போன்றவற்றை தாய் மொழியாக கொண்டவர்கள் ஒலிக்கோப்புகளை தர இசைந்துள்ளனர்.

8)என்னால் ஒரு மணிநேரமே இணையத்தில் அமர முடிகிறது.மின்தடை.இரண்டு மணி நேரத்திற்கு முன் இதனை தட்டச்சிடத் துவங்கினேன். முடிக்கும் தருவாயில் மின்தடை. அனைத்தும் அழிந்துவிட்டது. மீண்டும் மின்சாரம் வரும் வரைக் காத்திருந்து, இரவு 1மணிக்கு இதனைத் தட்டச்சிடுகிறேன். மற்றது வழமை போல, பொருளாதார நெருக்கடி. என் கல்வியை ஆராயாமல், நான் எப்படி பலரின் திறமைகளை இங்கு கொணரந்து ஒருங்கிணைக்க வேண்டும் என்று திட்டமிட்டு கொடுத்தால், செய்து முடிப்பேன்.

9)பொதுவாக இது போல பன்மொழி அகரமுதலி இங்கு வளர வழிமுறைகளை இயற்றிக் கொடுத்தால், அது எனக்கு, மிக உறுதுணையாக இருக்கும். உங்களின் நேரத்தினையும் நான் பேண விரும்புகிறேன்.

10)பிற மொழி தவிர, இதுவரை பதிவேற்றிய ஆங்கிலம்- தமிழ் அகர முதலியில் களைய வேண்டிய பிழைகள் குறித்தும் திட்டமிடக் கேட்டுக்கொள்கிறேன். நாம் இணைந்து அவற்றைக் களைவோம். ஏனெனில், 98% தமிழ் இணையக் கல்விக் கழக இணையத்தளத் தொடுப்புகளில் உள்ளப் பிழைகளை எப்படி களையலாம். மற்றொன்று பகுப்புப் பிழைகளை எப்படி களையலாம். இப்பொழுதுள்ள பகுப்புகளை மறைய வைக்க முடியுமா? வேண்டுபவர் மட்டும் சொடுக்கிப் பார்க்க, வழிவகை செய்ய இயலுமா? ஏறத்தாழ 1.5 இலட்சம் ஆங்கிலம்-தமிழ் சொற்களில் நிறைய களைகள் உள்ளன.

இதைப்போல தமிழில் சொல்வளக் கோவை/சொற்களஞ்சியம் உருவாக்க முயற்சிக்கிறேன். அதற்காக, இரண்டொடரு நாட்கள் வெளியூர் பயணம் மீண்டும் சந்திப்போம். மற்றவை உங்களுரைக் கண்டு..--19:30, 16 பெப்ரவரி 2012 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

த. உழவன், தங்கள் கருத்துகளைப் பகிர்ந்தமைக்கு நன்றி. நம்மில் பலரும் இங்கு தமிழறிஞர்களோ ஆங்கில அறிஞர்களோ அல்ல. எனினும், ஒரு புதுச்சொல்லை அறிந்து கொள்ளும் போது, நமது ஒட்டு மொத்த மொழியறிவின் துணையோடு அந்தச் சொல்லின் பயன்பாட்டைச் சரியாகப் புரிந்து கொண்டு பதிய முடியும். இது போன்ற ஒரு சூழல், குறைந்த அளவு மொழித் தேர்ச்சி இல்லாத அயல்மொழிகளைப் பற்றிப் பதியும் போது இருக்காது. கற்றுக் கொண்ட பிறகு விக்சனரியில் பகிர்வது வேறு. கற்கக் கற்கவும், கற்பதற்காகவும் விக்சனரியைப் பயன்படுத்துவது வேறு. குறிப்பிட்ட மொழி அறிந்தவர்களைத் தங்களுக்குத் தெரியும் எனில், அவர்களை நேரடியாக விக்சனரியில் பங்களிக்க அழையுங்கள். அல்லது, நீங்கள் ஒரு மொழியை முறையாக கற்ற பிறகு, விக்சனரியில் அது குறித்து சொற்களைச் சேருங்கள். சீனம், அரேபியம் போன்ற பயிற்சி இன்றி வாசிக்க இயலாத எழுத்துகளைக் கொண்ட மொழிகளைச் சரி பார்க்க உடனடியாக பல பங்களிப்பாளர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்க இயலாது. அது வரை வார்ப்புரு இடுவதும் பிறகு அழிப்பதும் தேவையற்ற பணிச்சுமை. இப்போது இத்தகைய சொற்களைச் சேர்ப்பதற்கான எந்த அவசரமும் இருப்பதாகத் தெரியவில்லை. நீங்களே பல முறை குறிப்பிட்டுள்ளவாறு, விக்சனரியில் ஏற்கனவே உள்ள துப்புரவுப் பணிகளே நிறைய உள்ளன. அவற்றைக் கவனிப்போமே? நன்றி--இரவி (பேச்சு) 15:15, 28 பெப்ரவரி 2012 (UTC)

  1. பணிசுமை பற்றிய உங்களின் கருத்து என்போக்கினை மாற்றும்.நன்றி.சீனஒலிக்கோப்புகளை இணைத்து விட்டு, இப்பணியை நிறுத்திவிடுகிறேன்.
  2. பங்களிப்பாளர்களை தொடர்ந்து, இங்கும், காமென்சிலும் ஈடுபாடு கொள்ள முயற்சிக்கிறேன். அவர்களைப் பற்றி, பிறகு தெரிவிக்கிறேன்.
  3. துப்புரவு பணிகளைப் பட்டியலிடக்கோருகிறேன். சில மாதிரிகளை செய்துகாட்டினால் நன்றாக இருக்கும். தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் உசாத்துணைகளை மாற்றலாமென்று எண்ணுகிறேன். அதோடு இணைந்த பிற மாற்றங்களையும் தெரிவிக்கவும்.--04:08, 29 பெப்ரவரி 2012 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் உசாத்துணைகள் தொகு

அரபி மொழிக்கான உதவி தொகு

  1. அரபி கற்றவன் என்ற முறையில் எனது நண்பர்களுடன் ( எமது இலங்கை தென் கிழக்கு பல்கலைக்கழக அரபி பீடத்திலுள்ளவர்களுடனும்) இணைந்து உதவுகிறேன் --Ahaleemsl 05:46, 17 பெப்ரவரி 2012 (UTC)
    நீங்கள் உங்கள் குழுவினரோடு எடுத்துள்ள முயற்சிகளைக் கண்டேன். அசத்துகிறது. யாருக்கு சென்றடைய வேண்டுமோ, அவர்களுக்காக செயல்படுதல், என் அடிப்படை எண்ணங்களை சற்று மாற்றியது. நன்றி. எனினும், உங்களின் தரவுகளை இங்கும் நன்கொடையாகத் தரக்கோருகிறேன். இத்தளம் வந்து தேடுபவர்களுக்கு உதவுக்கூடும்.--05:29, 28 பெப்ரவரி 2012 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

சிங்கள மொழிக்கான உதவி தொகு

  1. சிங்களமும் கற்றவன் என்ற முறையில் எனது நண்பர்களுடன் இணைந்து சிங்கள- தமிழ் சொற்களில் பங்களிக்கலாமென நினைக்கிறேன் --Ahaleemsl 06:22, 17 பெப்ரவரி 2012 (UTC)
    மொழி என்ற அடிப்படையில் சிங்களத்தை ஏற்கிறேன். உங்களுக்கு நான் உதவ விரும்புகிறேன். என்னென்ன உதவி வேண்டுமென்று, உங்களின் பேச்சுப்பக்கத்திலேயே கேட்கவும். ஒரு மணிநேரத்தில்,தானியக்க முறையில், 500 சொற்களையாவது குறைந்த பட்சம் பதிவேற்றலாம்.அதுவும் உங்கள் பெயரிலேயே.எனவே, கருத்திடாமல் தொடர்ந்து பங்களிக்கக் கோருகிறேன். ஒலிப்புக்கோப்புகளை உருவாக்குதல் முதற்கட்ட பணி.எனவே, இது குறித்து அறிய உங்களுக்கு ஆவலும், நேரமும் இருந்தால் தொடரவும்.அதுவே எனது சிரம் தாழ்ந்த வேண்டுகோள். வணக்கம்.--05:35, 28 பெப்ரவரி 2012 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

நூலகம் இணையத்தில் பல நூல்கள் உள்ளன. அவை உங்களின் பணியை மேம்படுத்துமென எண்ணுகிறேன்.--05:00, 2 மார்ச் 2012 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

இரண்டு வேண்டுகோள்கள் தொகு

1. தமிழ் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் பங்களிப்பாளர்களை அறிமுகப்படுத்தி வருவதை அறிவீர்கள். இது ஏற்கனவே உள்ள பங்களிப்பாளர்களை ஊக்குவிக்கவும் புதிய பங்களிப்பாளர்களை ஈர்க்கவும் பெரிதும் உதவுவதாக உணர்கிறோம். இது போல் தமிழ் விக்சனரியிலும் செய்யலாமா? அனைவருக்கும் ஏற்புடையது என்றால் இதனை இற்றைப்படுத்தும் பணியைப் பொறுப்பெடுத்துச் செய்ய விரும்புகிறேன்.

2. தமிழ் விக்கிப்பீடியாவுக்குக் கூடுதல் பங்களிப்பாளர்களை ஈர்க்கும் முகமாக, விக்சனரியின் தள அறிவிப்பில் விக்கிப்பீடியா:தள அறிவிப்பு/பங்களிப்பாளர் அறிமுகங்கள் இடலாமா?. அவ்வப்போதோ சில நாட்களுக்கு ஒரு முறையோ இதனைச் செய்து வந்தால் நன்றாக இருக்கும். தமிழ் விக்கிமீடியாவில் உள்ள அனைத்துத் திட்டங்களிலும் ஒன்றுக்கு ஒன்று நற்செய்கைகளைப் பரிமாறிக் கொள்வதும் உதவுவதுமே இதன் நோக்கம். நன்றி--ரவி 19:53, 11 பெப்ரவரி 2012 (UTC)

  • ரவி, இரண்டையுமே செய்வது பயனளிக்கும் என்றே கருதுகிறேன். பழ.கந்தசாமி 07:17, 12 பெப்ரவரி 2012 (UTC)
இரவி, இரண்டையும் வரவேற்கின்றேன். ஆனால் இவற்றுக்கும் முன்னால் ஒன்றை செய்வது முகனை (முக்கியமானது) என்று நான் கருதுகின்றேன். முதற்பக்கம் இன்னும் எடுப்பாக இருக்க வேண்டும். அறிமுகங்கள் தருவதாயினும், நாளொரு சொல் திட்டத்துக்கான பெட்டியும் இருக்கும் என்பதால், முதற்பக்கத்தை இன்னும் எடுப்பாகவும் பயனுடையதாகவும் சீரமைக்க வேண்டும். கொரிய விக்சனரியில் உள்ளது போல பக்கங்கள் யாவும் ஒரே அல்லது இரண்டொரு வகைப்பட்ட வடிவமைப்பில் மட்டும் இருந்தால் வரவேற்புணர்வைக் கூட்டும். --செல்வா 17:23, 12 பெப்ரவரி 2012 (UTC)

செல்வா, கந்தசாமி - ஒப்புதலுக்கு நன்றி. இதற்கான பணிகளைத் தொடங்குகிறேன். செல்வா, நீங்கள் சுட்டியுள்ள பணி முகனையானதே. இது தொடர்பாக முதற்பக்கத்தின் பேச்சுப் பக்கத்தில் உரையாடி சீர் செய்வோம். நன்றி--இரவி 12:15, 14 பெப்ரவரி 2012 (UTC)

சிறந்த முயற்சி வாழ்த்துக்கள், தொடருங்கள். விக்சனரியினை GTALK, உபோயோகப்பாளர்களுடன் இணைத்தால் அதிக சொற்களும் பயனர்களை விக்சனரியினை நோக்கி ஈர்க்க உதவும். அன்புடன், -Pitchaimuthu2050 09:12, 17 பெப்ரவரி 2012 (UTC)


உதவி: அறிவியல்_சொற்கள்_உருவாக்கச்_செயல்முறை தொகு

 
விக்கிநூல்கள் உங்களின் உதவியை நாடுகிறது!

தமிழ் மொழியை சங்ககாலம் முதலே ஒரு இலக்கியத் தமிழாகவும், இயற் தமிழாகவும், இசைத் தமிழாகவும் பல அறிஞர், அரசர்களால், துறவியர்களால் உருவாக்கப்பட்டுவிட்டுள்ளது. ஆனால் தமிழை அறிவியல் தமிழாக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் நமக்கு தற்போது உண்டு என்பதில் சிறிதும் ஐயம் இல்லை. எனவே அறிவியல் தமிழை உருவாக்க அனைவரையும் அழைக்கிறோம். பொறியியல் சார் நூல்களைத் தொகுக்க அழைக்கிறோம். மேலும் சில தருணங்களில் அறிவியல் சொற்களை உருவாக்கும் பொழுது பின்பற்றப் பட வேண்டிய முறைகளைப் பற்றியப் பக்கத்தைக் காணவும். http://ta.wikibooks.org/wiki/அறிவியல்_சொற்கள்_உருவாக்கச்_செயல்முறை

மேற்கண்ட கட்டுரையில் தமிழ் சொற்களுக்கு அறிவியல் சொற்களை நான் உருவாக்கும் பொழுது சந்திக்கும் இடர்களின் மூலம் சில விதிகளை உருவாக்கி உள்ளேன். இவ்வாறு ஒரு கட்டமைப்பான விதியை உருவாக்கும் பொழுது தமிழ் சமுதாயம் முழுமையும், பிற மொழி கருத்துக்களை மொழிமாற்றம் செய்யும் பொழுது ஒரு தொழில் நுட்பச்சொல்லிற்கு ஒரு சொல்லையே பயன்படுத்தும் முறை உருவாகும், என்பதில் ஐயம் இல்லை.

தமிழ் ஆசிரியர்களை பங்களிக்குமாறு வேண்டுகிறோம்.

தங்களின் மேலான கருத்துக்களை வரவேற்கிறோம்.

பி.கு: ஒரு வேளை இந்த முயற்சித் தேவையற்றது என்றாலும் அதனையும் தெரிவிக்கவும்.

-Pitchaimuthu2050 18:23, 19 பெப்ரவரி 2012 (UTC)

என்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.
நீங்களும், கயல் விழியும் தொகுத்துள்ள, மேற்குறிப்பிட்ட தொடுப்புப் பக்கம் சென்று பார்த்தேன்.விக்கிப்பீடியாவிலும், இங்கும் அவ்வப்பொழுது, செந்தி,கலை,செல்வா,கதிர் போன்றோர் சீரான சொற்களைச் செய்வர். அதிக உழைப்பு தேவைப்படும் துறையிது. 2009-இல், கறையான் கட்டுரையை உருவாக்கிய போது, 4,5 சொற்களை வகைப்பாட்டியலில் உருவாக்கினேன். ஒரு சொல் உருவாக்க ஏறத்தாழ 1.5மணிநேரம் ஆனது.மேலும் இந்நோக்கத்தில் சொற்களின் உருவாக்குவதலை விட, உரையாடல் நீள வாய்ப்புள்ளது. எனவே, ஒரு சொல்லுக்கு எந்த அளவு உரையாட வேண்டுமென்ற எல்லையை வகுத்துக்கொண்டு செயற்படலாம்.மற்றொன்று ஒன்றுக்கும் மேற்பட்ட சொல் உருவாவதை, பயன்படுத்துவதைக் கட்டுபடுத்த இயலாது என்பதே மொழியில் அறிஞர்களின் கூற்று. உங்களோடு இணைந்து, நானும் சிறு பங்களிப்பை செய்ய விரும்புகிறேன்.இனி அப்பக்கத்திலேயேத் தொடர்வோம். வணக்கம்.--05:51, 28 பெப்ரவரி 2012 (UTC) உழவன் (Info-farmer)+உரை..
விக்கிநூல்கள் தளம் பொதுவாக பாடநூல்கள் ஆக்குவதற்கான தளம் என்று கூறப்படுகிறது. இது குறித்து இறுக்கமான விதி, வழிகாட்டு இல்லை என்றாலும், இத்தகைய நூலை ஆக்குவதற்கு விக்கிநூல்கள் சிறந்த களமாக இருக்குமா என்று எனக்குத் தெளிவில்லை.
//. ஒரு சொல் உருவாக்க ஏறத்தாழ 1.5மணிநேரம் ஆனது.மேலும் இந்நோக்கத்தில் சொற்களின் உருவாக்குவதலை விட, உரையாடல் நீள வாய்ப்புள்ளது. எனவே, ஒரு சொல்லுக்கு எந்த அளவு உரையாட வேண்டுமென்ற எல்லையை வகுத்துக்கொண்டு செயற்படலாம்.// ஒரு சொல் ஓராயிரம் ஆண்டுக்கு மேல் நிலைக்கும் போது, அதற்கு 1.5 மணி நேரமோ கூடுதலாகவோ தேவைப்படுவது தவறு இல்லை. இத்தனை மணி நேரத்தில் இத்தனைச் சொற்கள் என்று கணக்கு வைத்துச் செய்ய இது என்ன தொழிற்கூடமா? தகுந்த சொல்லை உருவாக்க எவ்வளவு உழைப்பு தேவையோ அவ்வளவு உழைப்பையும் செலுத்த வேண்டும். தவிர, சொற்கள் உருவாக்கும் முறையைப் பற்றித் தான் நூல் பேசுகிறதே தவிர, சொற்களை உருவாக்குவது நூலின் குறிக்கோளாகத் தெரியவில்லை.--இரவி (பேச்சு) 15:15, 28 பெப்ரவரி 2012 (UTC)

முதற் பக்க சீரமைப்பு தொகு

தினம் ஒரு சொல் என்பதற்குப் பதிலாக விக்கி சொற்களஞ்சியத்தில் இருக்கும் நன்கு நேர்த்தி செய்யப் பட்ட சிறப்புச் சொற்களை முதற் பக்கத்தில் இனைக்கும் ஒரு முதற் பக்க மாதிரியை உருவாக்கி உள்ளேன். இதன் படி நாம் எவ்வளவு சொற்களை (நன்கு நேர்த்தி செய்யப்பட்டு உள்ள சொற்களேன எண்ணுகிறோமோ) அவற்றை கொடுக்கப் பட்டுள்ள பக்கத்தில் இணைத்து விட்டால் தாமாகவே புதிய புதிய சொற்களை முதற்பக்கத்தில் ஒவ்வொரு முறையும் காட்சிப்படுத்த முடியும்.

உதாரணமாக, சுமார் ௨௦௦௦ (2000) சொற்களுள்ள பட்டியலை நாம் உருவாக்கினால் இந்த ௨௦௦௦ சொற்களிருந்து ஒவ்வொரு முறையும் ஒரு சொல் காட்சிப் படுத்தப்படும். மேலும் இதனால் சொற்களை செப்பனிடவும் உதவும் என்று எண்ணுகிறேன்.

இதனை முயற்சிச் செய்து பார்க்க விக்கி சமுதாய நண்பர்களை அழைக்கிறேன்.

http://ta.wiktionary.org/wiki/பயனர்:Pitchaimuthu2050/மணல்தொட்டி

இந்த முறையை தமிழ் விக்கி நூல்களில் இன்பம்குமாரின் உதவியுடன் சில மாதங்கள் முன்னர் செய்து உள்ளோம். (அவரின் தொழிநுட்ப உதவி சிறந்தது. விக்கி நூல்களை செப்பனிட அவரின் தொழில்நுட்ப அறிவு உதவியது என்பதில் ஐயாம் இல்லை) அது சிறப்பாக இயங்குகிறது. முதற்பக்கத்தில் வருகின்ற சிறப்பான நூல்கள் போன்று சிறப்பானச் சொற்களை முதற்பக்கத்தில் இடலாம், மேல் காணும் தொடுப்பில் சென்று குறை ஏதும் இருந்தால் கூறவும். மேலும் முதற்பக்க அணுக்கம் உள்ள நபர் எவரேனும் இந்த மாற்றத்தை செய்ய அழைக்கிறோம்.

அன்புடன், -Pitchaimuthu2050 10:22, 20 பெப்ரவரி 2012 (UTC)

நல்ல முயற்சி ஐயா. பாராட்டுகிறேன்.விரைவில் என் கருத்தைப் பகிர்கின்றேன்.--செல்வா (பேச்சு) 21:48, 24 பெப்ரவரி 2012 (UTC)

ஒரு முக்கியமான வேண்டுகோள் தொகு

ஆலமரத்திலோ விக்சனரி என்னும் பகுப்பில் வருவதையோ, அருள்கூர்ந்து யாரும் முன்பின்னாக "சீரமைப்பதாக" எண்ணி மாற்றி அமைக்க வேண்டாம். வகைப்படுத்த வேண்டும் எனில் படியெடுத்து (எங்கிருந்து படியெடுத்தீர்கள் என்று சுட்டு தந்து) தொகுக்கலாம். காலவரிசைப்படி சீராக பதிவாகி இருக்க வேண்டிய ஆலமரத்தடியின் உரையாடல்கள் தகவல் உழவனின் விருப்பபடி பலவாறு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இது முறையல்ல. அருள்கூர்ந்து தகவல் உழவனோ மற்றவர்களோ இக்கூற்றைத் தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள். காலவரிசைப்படி பதிவாவது அப்படியே இருக்க வேண்டும். இவற்றைப் பரணில் இடுவதைத் தவிர மற்ற மாற்றங்கள் (இடம் மாற்றுதல், வெட்டி எடுத்து இன்னொரு இடத்தில் பதிவு செய்தல் போன்றவை) எதுவும் செய்தல் தவிர்க்கப்பட வேண்டும். இதனை இதற்கு முன்னரும் கூறியுள்ளேன். ஆங்கிலத்திலே சொல்வார்களே data integrity என்று அப்படித் தரவுகள் மாற்றப்படாமல் இருக்க வேண்டும். த. உழவனோ, பிறரோ, தொடர்புடைய சில கருத்துகள் ஓரிடத்தில், ஒரு தலைப்பின் கீழ் வந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணினால் படியெடுத்து அங்கே தொகுத்து வையுங்கள் (மூலத்தை, மூல இடத்தில் இருந்து அழிக்காமல்- எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பதற்கு சுட்டு தருவதும் தேவை). --செல்வா (பேச்சு) 22:00, 24 பெப்ரவரி 2012 (UTC)

செல்வா! //விருப்பப்படி// என்று கூறுவது தவறு. முறைப்படி வார்ப்புருவினை இட்டே, 98% உரையாடல்கள், ஆலமரத்தடி பரணில் தான், கால வரிசைப்படி பக்கங்கள் தொகுக்கப்படுகின்றன.
தவறு எனின், நீங்களும் விக்சனரியில் நி.அணுக்கம் பெற்றவர் தானே. சரியானதை செய்துகாட்டினால் நன்றாக இருக்கும். தங்களது கருத்துகளை, இனி வார்ப்புரு இடும்போதே, அந்த வார்ப்புருவிற்குக் கீழேயே, அக்காலகெடுவிற்குள் கூறவும்.அடிக்கடி வந்து கருத்திட்டு, செயல்படுத்திக்காட்டினால் நன்றாக இருக்கும். உரிய காலம் முடிந்தவுடன், கருத்திடுவதால் நான் மேற்கொண்டு என்ன செய்வது? காலந்தாண்டிய செயல்களுக்கு, இனி நான் பதிலிடப்போவதில்லை.
  1. படி எடுத்தல் என்பது சிறந்த நோக்கமே. இனி இதுபோன்ற பராமரிப்புப் பணிகளை அப்படியே செய்கிறேன். அதனை ஒட்டி, தரவுப்பதிவுகளைக் கோர்க்கிறேன். 4,5 தலைப்புகள் தான் அவ்விதம், இங்கு படியின்றி பதிவு மாற்றப்பட்டுள்ளன. தவறு என்று கருத்து மட்டும் கூறாமல், மாற்றிக்காண்பிக்கவும். அதனை ஒட்டி, பிறரின் கருத்தறிந்து செயல்படலாம்.
எல்லாவற்றிற்கும் மேலாக விரவிக்கிடக்கும் ஒரு குறிப்பிட்ட இலக்குள்ள பதிவுகளை ஒருமுகமாக தொகுப்பது எப்படி? எடுத்துக்காட்டாக, இதுவரை தமிழ் சொற்களுக்கான பக்கவடிவமைப்பு கருத்துக்களை ஒருமுகமாக, ஒருங்கிணைப்பது எப்படி? செய்துகாட்டவும். ஏனெனில், என்னிடம் சில ஆயிரம் தமிழ் சொற்களுக்கான தமிழ் விளக்கம், இலக்கியங்களில் அவை அமைந்துள்ள இடம், ஆங்கில மொழிபெயர்ப்பு உள்ளன. அவற்றை இதுபோல பதிவேற்ற எண்ணியுள்ளேன். இது குறித்து, உங்களின் பார்வையென்ன? --05:16, 28 பெப்ரவரி 2012 (UTC) உழவன் (Info-farmer)+உரை..
த. உழவன், கருத்து சொல்வது எளிது, செயல்படுத்துவது சிரமம் என்பதை அறிவேன். அதே வேளை நேர்மையான நோக்குடைய பலருக்கும் எல்லா நேரத்திலும் விக்சனரியில் பங்களிக்கும் நேரம் அமையாது. ஒரே மாதிரியான பிரச்சினை திரும்பத் திரும்ப வரும்போது அதைப் பற்றி ஒரு பொது இடத்தில் குறிப்பிட்டு கவனம் கோருவதும் வழக்கமே. எனவே, தாங்கள் ஒரு நிருவாகி என்ற முறையில் பயனர்கள் கூறும் கருத்துகளைத் தகுந்த முறையில் உள்வாங்கிச் செயற்பட வேண்டுகிறேன். மாற்றுக் கருத்து இருந்தால் முறையாக வெளிப்படுத்துங்கள். அதே போல, குறிப்பிட்ட ஒரு பிரச்சினையை முன்வைத்துப் பேசும் போது, அதற்கான எதிர்வினையை மட்டும் தாருங்கள். திட்டத்தில் உள்ள மற்ற பணிகளைக் குறிப்பிடுவது பிரச்சினையின் முக்கியத்துவத்தை எந்த விதத்திலும் மாற்றாது. தொடர்ந்து உங்களிடம் இத்தகைய போக்கு தென்படுவதால் இதைக் குறிப்பிட வேண்டி உள்ளது. எடுத்தெறிந்தாற் போல் பேசுவது பன்மொழி அறிஞர்கள் வந்து பங்களிக்க வேண்டிய ஒரு திட்டத்தைப் பாழாக்கி விடக்கூடும். நன்றி--இரவி (பேச்சு) 15:15, 28 பெப்ரவரி 2012 (UTC)
//எடுத்தெறிந்தாற் போல் பேசுவது// எனது வழக்கமும் இல்லை. எனது நோக்கமும் இல்லை. விரவிக்கிடக்கும், ஒரே நோக்கமுடைய உரையாடல்களை ஒருங்கிணைப்பது எப்படி? புதிய பயனர்கள் வழக்கமாக கேட்கும் கேள்விகளுக்கு, அவரிடம் இந்த இடத்தில், நீங்கள் கேட்ட கேள்விக்கு ஏற்கனவே உரையாடி இருக்கின்றனர் என்று எப்படி காட்டுவது? இதுவே எனது நோக்கம். எப்படி?--04:17, 29 பெப்ரவரி 2012 (UTC) உழவன் (Info-farmer)+உரை..
த.உழவன், புதிய பயனர்கள் கேட்கும் கேள்விகளுக்கு என தொகுப்பது எனில் வெட்டி எடுத்து நகர்த்தாமல், படி எடுத்து ஓரிடத்திலே இடலாமே? ஓர் எடுத்துக்காட்டுக்கு: தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்ற சொற்கள் விக்சனரியில் ஏற்றப்பட்டது அல்லவா? அது குறித்து நடந்த உரையாடல்கள் ஏறத்தாழ எப்பொழுது நடந்தன என்று தெரியும். தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை! அவை எங்கு உள்ளன என்று சுட்டிக்காட்டி உதவுங்கள். நன்றி! --செல்வா (பேச்சு) 02:21, 19 மார்ச் 2012 (UTC)

த.உழவனின் விடைகளில் தென்படும் காட்டம் ஏன் என்று விளங்கவில்லை. //தவறு எனின், நீங்களும் விக்சனரியில் நி.அணுக்கம் பெற்றவர் தானே. சரியானதை செய்துகாட்டினால் நன்றாக இருக்கும்.// என்கிறீர்களே, வெட்டி எடுத்து இடம் மாற்றாமல் இருக்க வேண்டும் என்பதை "செய்து காட்டினால்" நன்றாக இருக்கும் என்றால், நான் வெட்டி இடம் மாற்றாமல் இருக்கின்றேனெ, அது போதும் அல்லவா? அதற்கு என்ன செய்து காட்ட வேண்டும். உங்களுக்குத் தொகுப்பது பயனுடையதாக இருக்கும் என்று தோன்றினால் படி எடுத்து இன்னொரு இடத்தில் தொகுக்கலாமே. --செல்வா (பேச்சு) 02:32, 19 மார்ச் 2012 (UTC)

தமிழ் என்று தலைப்பிடல் அவசியமா? தொகு

தமிழில் உருவாகும் சொற்களுக்கு, தமிழ் என்ற மொழித்தலைப்பு இட வேண்டியதில்லை என்று எண்ணுகிறேன். ஏனெனில், தமிழ் எழுத்துக்களை, தமிழில் மட்டுமே பயன்படுத்துகிறோம். ஆனால், ஆங்கில (இலத்தீனிய) எழுத்துக்களை, ஒன்றுக்கும் மேற்பட்ட மொழியினர் பயன்படுத்துவதால், ஆங்கில விக்சனரியில் தலைப்பிடுகின்றனர். எடுத்துக்காட்டாக் en:dove என்பது பல மொழிகளில், வெவ்வேறு பொருள் தருகிறது. மொழி, பொருள் மயக்கத்தை நீக்க, அங்கு தலைப்பிடுகின்றனர். தமிழ் சொற்களுக்கு, அத்தகைய நிலை, தேவை இல்லை என்பதே என் கருத்து. பிறரின் கருத்தறிய ஆவல்.--06:03, 28 பெப்ரவரி 2012 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

வடமொழிச் சொற்கள், தமிங்கிலச் சொற்கள் உட்பட தமிழரிடையே பரவலாகப் புழங்கும் சொற்களைத் தமிழ் எழுத்துகளில் எழுதும் வழக்கம் உள்ளது. எது உண்மையிலேயே தமிழ் என்று தெரிய இந்தத் தலைப்பு இருப்பது நல்லது தான். --இரவி (பேச்சு) 15:15, 28 பெப்ரவரி 2012 (UTC).
இப்பகுப்பில் நாம் ஏற்கனவே உரையாடி, தொகுக்கிறோம்.அப்படி இருக்க, தமிழ் என்று ஏன் தலைப்பிடல் வேண்டும்.அரசர்சின்னம் போல தொகுக்கலாமா?அல்லது அதில் தேவைப்படும் மாற்றங்கள் என்ன? ஏன் என்றும் சற்று விளக்கமாகக் கூறக்கோருகிறேன்.--17:25, 29 பெப்ரவரி 2012 (UTC) உழவன் (Info-farmer)+உரை..
  • தமிழ் எனத் தனித்தலைப்பு தேவையில்லை எனினும், இருந்துவிட்டுப் போகட்டுமே. அதனால் என்ன? பழ.கந்தசாமி (பேச்சு) 17:42, 29 பெப்ரவரி 2012 (UTC)

Survey invitation தொகு

First, I apologize that part of this message is in English. If you can assist by translating it for your local community, I would greatly appreciate it.

The Wikimedia Foundation would like to invite you to take part in a brief survey.

2012 பணம் விநியோகித்தல் முன்னுரிமை வழங்குதல் குறித்த கணக்கெடுப்பிற்கு உங்கள் நேரத்தை செலவு செய்தமைக்கு நன்றி. இந்த கணக்கெடுப்பு மூலம் அறக்கட்டளையால், விக்கிமீடியர்களுக்கு என்ன வளங்கள் தேவைப்படுகிறது என்பதையும் மற்றும் என்ன முன்னுரிமையில் என்பதையும் கணிக்க முடியும் (சிலருக்கு நிதி தேவைப்படலாம்). அனைத்து அறக்கட்டளை நிகழ்ச்சிகளும் இங்கே இருக்காது (அடிப்படை செயல்பாடுகள் குறிப்பாக விலக்கப்படுகின்றன) – தனிப்பட்ட பங்களிப்பாளர்கள் அல்லது அத்தியாயங்கள் (chapters) போன்ற விக்கிமீடியாவால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் கேட்கும் வளங்கள் மட்டும். நீங்கள் (அல்லது அத்தியாயங்கள் அல்லது சங்கங்கள் போன்ற குழுக்கள்) எதில் ஆர்வமாக உள்ளீர்கள் என்பதை அறிந்துகொள்வது, மற்றும் விருப்பத்தேவுகளை உங்கள் தேர்வுகளின் அடிப்படையில் தரவரிசைப்படுத்துதல் ஆகியவையே இங்கு முக்கிய நோக்கங்களாகும். நாங்கள் இந்த பட்டியலில் "சேவகன்களை செயல்பாட்டில் வைத்திரு" போன்றவைகளை இந்த பட்டியலில் சேர்க்கவில்லை, ஏனெனில் அவை தனிப்பட்ட பங்களிப்பாளர்கள் அல்லது தன்னார்வ நிறுவனங்களின் பொறுப்பு அல்ல. இந்த கணக்கெடுப்பின் நோக்கம் எந்த பணம் வழங்குதல் முன்னுரிமையை பங்களிப்பாளர்கள் ஒத்துக்கொள்வார்கள் அல்லது ஒத்துக்கொள்ளமாட்டர்கள் என்பதை எங்களுக்கு சொல்வதே ஆகும்.

To read more about the survey, and to take part, please visit the survey page. You may select the language in which to take the survey with the pull-down menu at the top.

This invitation is being sent only to those projects where the survey has been translated in full or in majority into your language. It is, however, open to any contributor from any project. Please feel free to share the link with other Wikimedians and to invite their participation.

If you have any questions for me, please address them to my talk page, since I won’t be able to keep an eye at every point where I place the notice.

Thank you! --Mdennis (WMF) (பேச்சு) 21:54, 5 மார்ச் 2012 (UTC)

தமிழ் இணையப் பல்கலைக்கழகச் சொற்களைப் பதிவேற்றிய வரலாற்று ஆவணங்கள் தொகு

தமிழ் இணையப் பல்கலைக்கழகம் வழங்கிய சொற்களும் அவற்றை இங்கே விக்சனரியில் பதிவேற்றிய உரையாடல்களும் ஆவணக் குறிப்புக்களும் எங்குள்ளன என்று அறிந்தவர்கள் சுட்டிக் காட்ட வேண்டுகிறேன். நன்றி. --செல்வா (பேச்சு) 16:17, 25 மார்ச் 2012 (UTC)

இக்கேள்விக்கு யாரேனும் மறுமொழி தர இயலுமா? --செல்வா (பேச்சு) 23:47, 27 ஏப்ரல் 2012 (UTC)

தமிழ் விக்கி ஊடகப் போட்டி முடிவுகள் தொகு

தமிழ் விக்கி ஊடகப் போட்டி முடிவுகள் வெளியாகியுள்ளன.--சோடாபாட்டில்உரையாடுக 19:45, 29 மார்ச் 2012 (UTC)

முதன்மையான கலைச்சொல் தொகு

  • முதன்மையான, பெருமளவில் பயன்படுத்தப்படும் கலைச்சொல்லை தடித்த எழுத்துகளில் எழுதலாம் என்று நினைக்கிறேன்.
  • அதிகளவில் துறைகளும் அவையனைத்திலும் ஒரே கலைச்சொற்களே இருக்கும் எனில், துறைகளின் எண்ணிக்கையைக் குறைக்கலாம்; பொதுவாக, அறிவியல், தொழில்நுட்பம் என்று இடலாம்.--பரிதிமதி (பேச்சு) 06:24, 14 ஏப்ரல் 2012 (UTC)
  • பரிதிமதி, முதன்மையான கலைச்சொல்லை முதலாவதாக இட்டாலே போதும் என நினைக்கிறேன். நன்றி. பழ.கந்தசாமி (பேச்சு) 04:39, 15 ஏப்ரல் 2012 (UTC)

வார்ப்புரு-த.இ.க.க.சொற்தேடல்பக்கம் தொகு

இப்பக்கத்தின் தொழில்நுட்பத்தை மேம்படுத்துக. தமிழ் இணையக் கல்விக் கழகச் சொல்லுக்குரிய, ஆதாரபக்கத்திற்கு செல்லாமல், அந்த ஆதாரங்கள் இருக்கும், ஒரு பொதுவான, இணையப் பகுதிக்கே செல்கிறது. மேம்படுத்துக.வணக்கம்.--19:08, 28 ஏப்ரல் 2012 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

அண்மைய மாற்றங்கள் தொகு

அண்மைய மாற்றங்கள் பகுதியில் சொற்கள் எண்ணிக்கை என்று உள்ளது. அதனை,பதிவேறியச் சொற்களின் எண்ணிக்கை என்று இருந்தால் நன்றாக இருக்கும் என கருதுகிறேன். பிறரின் கருத்தறிய ஆவல்.--04:53, 14 மே 2012 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

தமிழ் 10-ஆவதில் இருந்து 11-ஆவது இடத்திற்கு நகர்வு தொகு

உலக மொழிகளின் வரிசையில் தமிழ் 10-ஆவதில் இருந்து 11-ஆவது இடத்திற்கு நகர்ந்துள்ளது. போலந்தியம் இப்பொழுது 10-ஆவது இடத்தில். சில ஆயிரம் சொற்கள் வேறுபாட்டில் மட்டுமே 12-ஆவதாக வியட்னாமியம், 13-இடத்தில் இடாய்ச்சு (செருமன்), 14-ஆவது இடத்தில் கன்னடம் உள்ளன. பார்க்கவும்! --செல்வா (பேச்சு) 17:37, 22 மே 2012 (UTC)[பதிலளி]

  • நன்றி. நான் எண்ணிக்கைத் தரவரிசையை சிலமாதங்களில் கவனிக்கவில்லை. கிரேக்கம் முன்னேறியுள்ளது என நினைக்கிறேன். .அண்மையில் தகவலுழவன் பங்களிப்புவேகத்தை அதிகப்படுத்தியுள்ளார். நான் சற்று மந்தமாக ஆனால் தொடர்ந்து பங்களித்துவருகிறேன். முனைப்புடன் பங்களிக்க இன்னும் பலர் சேர்ந்தால் நாமும் வேகமாக முன்னேறலாம். அதுவரை 'நிதான ஓட்டமே நிச்சய வெற்றி' என்று நிதானமாக ஓடிக்கொண்டே இருப்போம். பழ.கந்தசாமி (பேச்சு) 19:16, 22 மே 2012 (UTC)[பதிலளி]
நன்றி கந்தசாமி, நானும் இயன்றவாறு பங்களிக்கின்றேன். --செல்வா (பேச்சு) 22:29, 22 மே 2012 (UTC)[பதிலளி]
  • செல்வா, நீங்கள் சொற்களுக்குச் சிறந்த விளக்கம் தரக்கூடியவர். நேரம் கிடைக்கும்போது இங்குவந்தால், விக்சனரியை முதல்தரமாக்க நம்மால் முடியும். எண்ணிக்கையில் முதலிடம் என்பதைவிட, விளக்கத்தால், பொருளால் முதல்தரத்தை அடையலாம். நன்றி. பழ.கந்தசாமி (பேச்சு) 00:20, 23 மே 2012 (UTC)[பதிலளி]
  • எண்ணிக்கையே எனது முதலாம் இலக்கு;அதற்கடுத்தது, ஊடகங்களை இணைப்பது;ஆனால்,பழ.கந்தசாமி அவர்கள் கூறுவது போல, தரமே நிரந்தரம். மகிழ்ச்சி.மேற்கோள்களை(எடுகோள்) தருவதில் பழ.கந்தசாமிக்கு இருக்கும் ஆளுமை என்னை செயல்படத் தூண்டுகிறது.நாம் ஒவ்வொரும், ஒரு இலக்கை வைத்து செயல்படுவது, எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.வணக்கம்.--00:57, 23 மே 2012 (UTC) உழவன் (Info-farmer)+உரை..
பழ. கந்தசாமி, நன்றி, நான் பல இழுப்புகளுக்கு ஈடுகொடுக்கின்றேன் ஆகையால் நேரப்பற்றாக்குறை வெகுவாக உள்ளது. த.வி-யில் பங்களிப்பு மிகக்குன்றிவிட்டது. Quality first, because Quality lasts என்று ஒரு கும்பினியின் (Honeywell என்று நினைவு) முத்திரைமொழி என்னைக் கவர்ந்த ஒன்று (அதில் ஒளிரும் உண்மையால்). செய்வனத் திருந்தச்செய் என்பதே நம் பழமொழியுமாம். ஒன்றை வடிவாக அழகாகச் செம்மையாக செய்தால் அதுவே ஈர்க்கு தன்மை கொண்டதாயணிருக்கும். படிப்போரை ஆழ உவக்கச் செய்வதாயுமிருக்கும் இவை பொறுமையாகச் செய்ய வேண்டுபவை. நீங்கள் மிகச் சிறந்த மேற்கோள்களுடன்/எடுத்துக்காட்டுகளுடன் சொற்பதிவுகள் செய்வது மிகவும் சிறந்ததாக நான் கருதுகின்றேன். விடாது முயலுவோம்!!--செல்வா (பேச்சு) 01:17, 23 மே 2012 (UTC)[பதிலளி]

ஒலிக்கோப்புகள் இணைப்பு தொகு

புதிய சொற்களை உருவாக்கும் போது, பின்வரும் குறிப்புகளை ஒலிப்புப் பகுதியில் இணைத்தால், அக்கோப்பு விக்கிப்பொதுவம்/காமென்சில் உருவாக்கப்பட்டிருந்தால், அக்கோப்பினை இங்கும் பயன்படுத்த இயலும். இங்கு இணைக்கப்பட வேண்டிய குறிப்புகள் வருமாறு, * {{audio|De-{{PAGENAME}}.ogg|ஒலிப்பு}}. இதில் De என்பது Deutsch என்பதன் தரக்குறியீடு. ஒவ்வொரு மொழிக்கும் ஒருகுறியீடு உள்ளதை நாம் மறவாமல், நாம் உருவாக்கும் மொழியின் சொல்லுக்கு ஏற்ப தேர்ந்தெடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். பகுப்பு:இடாய்ச்சு-பெயர்ச்சொற்கள் என்பதில் இருக்கும் 62சொற்களுக்கும், பொதுவத்திலுள்ள ஒலிக்கோப்புகளை இங்கு இணைத்து விட்டேன். அதில் Saft என்ற சொல்லில் மட்டுமே கொடி பயன்பட்டுள்ளது. கொடிகளைப் பயன்படுத்துவதால், உபுண்டு போன்றவற்றில் தோற்றப்பிழை வருகிறது. முதல் 10 இடங்களில் வரும் விக்சனரிகளில், கொடி பயன்பாட்டை ஒலிப்புகளில் தவிர்க்கின்றனர் என்பதனையும், நாம் கருத்தில் கொள்ள வேண்டும். வணக்கம்.--05:25, 26 மே 2012 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

இங்கே நான் இணைத்திருப்பதைப் பார்க்கலாம். ஆனால் ஒலிக்கோப்பு இல்லை எனில் எடுத்தவுடன் ஒன்று இல்லை காட்டுவதைவிட வரும் பொழுது நாம் சேர்த்துக்கொள்ளலாம். மேலும் இவற்றைத் தானியங்கியாகவும் சேர்க்க இயலும் என்று நினைக்கின்றேன். அல்லது ஒலிக்கோப்பு இருந்தால் மட்டுமே அவ்வரியைச் சேர்க்குமாறும் செய்ய இயலும், ஏனெனில் ஒரே எழுத்துச்சரம் கொண்ட ( * {{audio|De-{{PAGENAME}}.ogg|ஒலிப்பு}}) ஒன்றைத்தான் சேர்க்கின்றோம்--செல்வா (பேச்சு) 13:25, 26 மே 2012 (UTC)[பதிலளி]
இடாய்ச்சு பகுப்பில், ஒலிக்கோப்புகள் உள்ளவற்றில் மட்டுமே, அவ்வார்ப்புருவை இணைத்துள்ளேன்.
//எடுத்தவுடன் ஒன்று இல்லை காட்டுவதைவிட வரும் பொழுது நாம் சேர்த்துக்கொள்ளலாம்//
என்பதனை நாம் பொதுவிதியாக பின்பற்றலாமென கருதுகிறேன். என்னால் இயன்றவரை தமிழ் சொல்லுக்குத்தவிர, பிறமொழிகளில், கோப்பு இல்லை என்பதனை நீக்கியே வருகிறேன். நான் பதிவேற்றும் தமிழ் சொற்களுக்குரிய ஒலிக்கோப்புகளை விக்கிப்பொதுவத்தில் உருவாக்குவேன் என்பதால், அவற்றிற்க்கு பதிவேற்றும் போதே, தேவைப்படும் ஒலிக்கோப்பு வார்ப்புருவை இணைக்கிறேன். தங்களின் கருத்தால், என் செயற்பாட்டில் திண்ணமுற்றேன். நன்றி வணக்கம்.--01:43, 27 மே 2012 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

Update on IPv6 தொகு

 

(Apologies if this message isn't in your language. Please consider translating it, as well as the full version of this announcement on Meta)

The Wikimedia Foundation is planning to do limited testing of IPv6 on June 2-3. If there are not too many problems, we may fully enable IPv6 on World IPv6 day (June 6), and keep it enabled.

What this means for your project:

  • At least on June 2-3, 2012, you may see a small number of edits from IPv6 addresses, which are in the form "2001:0db8:85a3:0000:0000:8a2e:0370:7334". See e.g. w:en:IPv6 address. These addresses should behave like any other IP address: You can leave messages on their talk pages; you can track their contributions; you can block them. (See the full version of this announcement for notes on range blocks.)
  • In the mid term, some user scripts and tools will need to be adapted for IPv6.
  • We suspect that IPv6 usage is going to be very low initially, meaning that abuse should be manageable, and we will assist in the monitoring of the situation.

Read the full version of this announcement on how to test the behavior of IPv6 with various tools and how to leave bug reports, and to find a fuller analysis of the implications of the IPv6 migration.

--Erik Möller, VP of Engineering and Product Development, Wikimedia Foundation 01:26, 2 சூன் 2012 (UTC)[பதிலளி]

Distributed via Global message delivery. (Wrong page? Fix here.)

2011 Picture of the Year competition தொகு

македонскиnorskpolski

Dear Wikimedians,

Wikimedia Commons is happy to announce that the 2011 Picture of the Year competition is now open. We are interested in your opinion as to which images qualify to be the Picture of the Year 2011. Any user registered at Commons or a Wikimedia wiki SUL-related to Commons with more than 75 edits before 1 April 2012 (UTC) is welcome to vote and, of course everyone is welcome to view!

Detailed information about the contest can be found at the introductory page.

About 600 of the best of Wikimedia Common's photos, animations, movies and graphics were chosen –by the international Wikimedia Commons community– out of 12 million files during 2011 and are now called Featured Pictures.

From professional animal and plant shots to breathtaking panoramas and skylines, restorations of historically relevant images, images portraying the world's best architecture, maps, emblems, diagrams created with the most modern technology, and impressive human portraits, Commons Features Pictures of all flavors.

For your convenience, we have sorted the images into topic categories.

We regret that you receive this message in English; we intended to use banners to notify you in your native language but there was both, human and technical resistance.

See you on Commons! --Picture of the Year 2011 Committee 18:41, 5 சூன் 2012 (UTC)

Distributed via Global message delivery. (Wrong page? Fix here.)

Mobile view as default view coming soon தொகு

 

(Apologies if this message isn't in your language. Please consider translating it, as well as the instructions on Meta)

The mobile view of this project and others will soon become the default view on mobile devices (except tablets). Some language versions of these projects currently show no content on the mobile home page, and it is a good time to do a little formatting so users get a mobile-friendly view, or to add to existing mobile content if some already exists.

If you are an administrator, please consider helping with this change. There are instructions which are being translated. The proposed date of switching the default view is June 21.

To contact the mobile team, email mobile-feedback-l lists.wikimedia.org.

--Phil Inje Chang, Product Manager, Mobile, Wikimedia Foundation 08:36, 16 சூன் 2012 (UTC)[பதிலளி]

Distributed via Global message delivery. (Wrong page? Fix here.)

பைத்தானின் அவசியம் தொகு

பைத்தானின் துணைக்கொண்டு பல பணிகளை, பல்வேறு மொழியினர், எளிமையாகவும், சிறப்பாகவும் விக்கிகளில் பங்களிக்கின்றனர். நாமும் அவ்விதம் பயன்படுத்துவோமாயின், பல சீரியப் பணிகளை இங்கு செயல் படுத்த இயலுமெனத்தோன்றுகிறது. அதற்கு சோதனையாக, success destime என்ற சொல்லில் பைத்தானின் துணைக் கொண்டு பகுப்பொன்றினை(englishcompoundwords,EnglishSociology), உருவாக்கிப் பார்த்தேன். நன்கு வருகிறது. ஆனால், இதனை வின்டோசின் -XP இயங்குத்தளத்தில் இருந்து செயற்படுத்தியதால், தமிழ் சொற்களைக் கொண்டு பகுப்புகளை உருவாக்க இயலவில்லை. ஆங்கிலம்-கூட்டுச்சொற்கள் என்பதற்கு பதிலாக, தமிழை உள்ளீடு செய்ய இயலாததால், englishcompoundwords, EnglishSociology என்று சோதனைப்பகுப்புகளைச் செய்துள்ளேன். தமிழ் சொற்களால் பகுப்பினை உள்ளீடு செய்வது பற்றி அறிய ஆவல்.--19:29, 22 சூன் 2012 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

பகுப்பில் வார்ப்புரு இணைப்பு பற்றி தொகு

அனைவருக்கும் வணக்கம், வார்ப்புரு:categoryTOC‎ மற்றும் வார்ப்புரு:categoryTOC‎ englishஇவ்விரண்டு வார்ப்புருக்களையும் பகுப்புகளில் பக்கங்களை வரிசைப்படுத்த உருவாக்கியுள்ளேன். பார்க்க பகுப்பு:ஆங்கிலம்-பெயர்ச்சொற்கள் மற்றும் பகுப்பு:பெயர்ச்சொற்கள். இவற்றை மற்ற பகுப்புகளிலும் இணைக்கலாம் என எண்ணியுள்ளேன், உங்கள் கருத்து தேவை.

மேலும் ஆங்கிலம்-நிருவாகவியல் பகுப்பில் தேவையான சொல்லுக்கு ஏற்றவாறு ஆங்கிலம்-பெயர்ச்சொல் மற்றும் ஆங்கிலம்-வினைச்சொல் பகுப்பையும் தேவையான இடங்களுக்கு வார்ப்புரு:ஆங்கில ஆதாரங்கள்ஐயும இணைக்க எண்ணியுள்ளேன். கருத்துகளைக் கூறவும்.--shanmugam (பேச்சு) 17:16, 28 சூன் 2012 (UTC)[பதிலளி]

  1. நீண்ட நாள் தேவைகளுள் ஒன்றிணை, தமிழ் விக்சனரியில் அமைத்தமைக்கு நன்றி. பல பகுப்புகளில், அதுபோல விடுபட்டுள்ளது. நானும் அவ்வப்போது உங்களுடன் இணைவேன். வணக்கம்.--06:47, 29 சூன் 2012 (UTC) உழவன் (Info-farmer)+உரை..
பார்க்க பகுப்பு:ஆங்கிலம்-பெயர்ச்சொற்கள் மற்றும் பகுப்பு:பெயர்ச்சொற்கள்.--shanmugam (பேச்சு) 14:12, 29 சூன் 2012 (UTC)[பதிலளி]

மிகவும் பயனுள்ளது. வார்ப்புரு:categoryTOC‎ இதில் உள்ளப் பட்டியில், 0-9 க்கும், அ-விற்கு இடையில் புள்ளி உள்ளது. ஆனால் அனைத்து எழுத்திற்கும் இடையில் புள்ளியில்லை. இதன் வடிமைப்பை சீராக்க வேண்டும். மேலும் துணைப்பகுப்பின் பட்டியலில் 1,2,3 வரிசைப்பட்டியல் முதலெழுத்து எண்ணாக இல்லாத போதும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.--இராச்குமார் (பேச்சு) 19:35, 29 சூன் 2012 (UTC)[பதிலளி]

இடைவெளி சரி செய்யப்பட்டது. இந்த வார்ப்புருவின் குறியீட்டின் படி சொடுக்கும் எழுத்தில் தொடங்கும் வார்த்தைகளிலிருந்து அனைத்தையும் வரிசைப்படுத்தும் (பகுப்பில் பக்கங்கள் 200க்கு குறைவாக இருந்தால், எந்த எழுத்தை பொறுத்து வரிசைப்படுத்தினாலும், உள்ள பக்ககங்கள் அனைத்துமே காட்டப்படும்), துணைப்பகுப்புகள் சரியாக வருவதில்லை. மேலும் இது அனைத்து விக்கிகளிலும் பொதுவாக பயன்படுத்தும் வார்ப்புருவே (ஆங்கில விக்கியில் இந்த பக்கத்தில் உள்ள எதேனும் ஒரு பகுப்பை பாருங்கள் )--shanmugam (பேச்சு) 16:25, 29 சூன் 2012 (UTC)[பதிலளி]

கூட்டுச்சொற்கள் பகுப்பு தொகு

பகுப்பு:கூட்டுச் சொற்கள் இப்பகத்தை நீக்குங்கள் அல்லது பகுப்பு:கூட்டுச்சொற்கள் என்றப் பக்கத்திற்கு வழிமாற்றுங்கள். --இராச்குமார் (பேச்சு) 11:21, 3 சூலை 2012 (UTC)[பதிலளி]

ஏன் அவ்விதம் செய்ய வேண்டுமென அறிய விரும்புகிறேன்.--14:37, 3 சூலை 2012 (UTC) உழவன் (Info-farmer)+உரை..
பகுப்பு:கூட்டுச் சொற்கள்,பகுப்பு:கூட்டுச்சொற்கள் என்று இரு பக்கங்கள் உள்ளது. --இராச்குமார் (பேச்சு) 20:03, 3 சூலை 2012 (UTC)[பதிலளி]
அப்பகுப்பில் இருந்த உரை, இப்பகுப்பில் இணைக்கப்பட்டு நீக்கப்பட்டது.--தஉழவன். 05:51, 4 சூலை 2012 (UTC)

Help decide about more than $10 million of Wikimedia donations in the coming year தொகு

 

(Apologies if this message isn't in your language. Please consider translating it)

Hi,

As many of you are aware, the Wikimedia Board of Trustees recently initiated important changes in the way that money is being distributed within the Wikimedia movement. As part of this, a new community-led "Funds Dissemination Committee" (FDC) is currently being set up. Already in 2012-13, its recommendations will guide the decisions about the distribution of over 10 million US dollars among the Foundation, chapters and other eligible entities.

Now, seven capable, knowledgeable and trustworthy community members are sought to volunteer on the initial Funds Dissemination Committee. It is expected to take up its work in September. In addition, a community member is sought to be the Ombudsperson for the FDC process. If you are interested in joining the committee, read the call for volunteers. Nominations are planned to close on August 15.

--Anasuya Sengupta, Director of Global Learning and Grantmaking, Wikimedia Foundation 20:26, 19 சூலை 2012 (UTC)[பதிலளி]

Distributed via Global message delivery. (Wrong page? Fix here.)

குறும்பக்கங்கள் தொகு

இங்கு குறும்பக்கங்கள் 257832 என, பைட்டுகளின் அளவில், ஏறு வரிசையில் உள்ளன.அவைகளை குறும்பக்கங்கள் என்று குறிப்பிடுதல் தவறே. மாற்றாக ஏறுவரிசை அளவிலானப் பக்கங்கள் என மாற்றினால் பொருத்தமாக இருக்கும்.

மற்றொன்று, பைட்டுகளின் அளவைக் கூட்டிய போது, அவைகள் உயர்ந்தன. அப்பக்கங்களில் எனது மாற்றத்திற்கு முன், பகுப்போ, அக இணைப்போ இல்லாமல் இருந்தது குறிப்பிடத் தக்கது. இப்போது மொத்த பக்கங்கள் 2,57,062 எனக் காட்டுகிறது. ஆனால், இத்தொடுப்போ 257832 உள்ளதாகக் காட்டுகிறது. மீதமுள்ள, (257832 - 2,57,062 =770 எங்கே?) பக்கங்கள் ஏன் காட்டப்பட வில்லை?-- உழவன் +உரை.. 11:30, 25 சூலை 2012 (UTC)[பதிலளி]

  • இன்றளவில் நம் விக்சனரியில், 12148 சொற்கள் 500எண்ணுன்மிகளுக்கு(bytes) குறைவாக உள்ளன. அவற்றில் தான் இவை உள்ளன. விரைவில் கண்டறிந்து அடையாளப்படுத்துகிறேன்.இப்பொழுது இணைய இணைப்பு சரியில்லை.நாளை அதிகாலை முயற்சிக்கிறேன்.-- உழவன் +உரை.. 13:17, 26 சூலை 2012 (UTC)[பதிலளி]
முன்பு பகுப்பு செய்தாலே பக்க எண்ணிக்கை கூடி விடும்.சுந்தர் தானியங்கி எண்ணிக்கையை அவ்விதம் தான் அதிகரித்தோம்.ஆனால், இப்பொழுது உள்ளிடும் விளக்க வரிகளில், அகயிணைப்புத்தரப்பட வேண்டும்.அப்பொழுது தான் பக்க எண்ணிக்கைக் கூடுகிறது.தங்கள் வழிகாட்டலுக்கு நன்றி.(தகவலுழவன்)
500பைட்டுகளுக்கு கீழ் உள்ளவை, குறும்பக்கங்கள் எனப்படுகின்றன. இன்றளவில், இக்குறும்பக்கங்கள் ஏறத்தாழ அனைத்து மொழியிலும், மொத்தம் ~11,000 சொற்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் 500பைட்டுகளுக்கு மேல் விரிவுபடுத்த வேண்டும். அப்படி செய்தால், 500பக்கங்கள் அதிகமாகும். ஏனெனில், அப்பக்கங்களில், அகயிணைப்பு இல்லாமல் இருக்கின்றன.~11000 சொற்களை விரிவு படுத்தும் போதே அவைகளை இனங்கண்டறிய முடியும். இருப்பினும், அச்சொற்களில் {.{ஆதாரங்கள்}} என்பதனை இணைத்தால், விரிவாக்கத்தின் ஒரு பகுதியாகவும் அது அமையும். எண்ணிக்கையும் கூடி விடும்.



( மொழிகள் )

சான்றுகோள் ---

{.{ஆதாரங்கள்}} வார்ப்புரு மேற்கண்டவாறு, ஒவ்வொரு பக்கத்திலும் அமையும். இதனுடன்,{.{stub}} என்ற வார்ப்புருவினையும் இட்டால், அது குறும்பக்கங்கள் என்ற அறிவிப்பும்,ஒவ்வொரு பக்கத்தின் கீழ்புறம் அமையும்.அனைத்திலும் அடுத்தமாதம் (செப்தம்பர்-2012) இடலாம் என்று எண்ணுகிறேன்.உங்களின் எண்ணங்களைக் கூறுக.-- உழவன் +உரை.. 07:31, 3 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]

தமிழ் கம்ப்யூட்டர் இதழில் விக்சனரி - சிறப்புக் கட்டுரை தொகு

தமிழ் கம்ப்யூட்டர் (செப்டம்பர் 1-15, 2012) இதழில் “விக்சனரி இணைய அகரமுதலி - ஒரு சிறப்புப் பார்வை” எனும் தலைப்பில் நான் எழுதிய கட்டுரையின் முதல் பகுதி மூன்று பக்கங்களில் வெளியாகி இருக்கிறது. அதன் ஒளிப்பதிவுகள் இங்கு இணைக்கப்பட்டுள்ளன.

இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் வெளியாகும்.--Theni.M.Subramani (பேச்சு) 11:20, 1 செப்டெம்பர் 2012 (UTC)

Request for Comment: Legal Fees Assistance Program தொகு

 

I apologize for addressing you in English. I would be grateful if you could translate this message into your language.

The Wikimedia Foundation is conducting a request for comment on a proposed program that could provide legal assistance to users in specific support roles who are named in a legal complaint as a defendant because of those roles. We wanted to be sure that your community was aware of this discussion and would have a chance to participate in that discussion.

If this page is not the best place to publicize this request for comment, please help spread the word to those who may be interested in participating. (If you'd like to help translating the "request for comment", program policy or other pages into your language and don't know how the translation system works, please come by my user talk page at m:User talk:Mdennis (WMF). I'll be happy to assist or to connect you with a volunteer who can assist.)

Thank you! --Mdennis (WMF)02:14, 6 செப்டெம்பர் 2012 (UTC)

Distributed via Global message delivery. (Wrong page? Fix here.)

auto redirect facility in Tamil Wiktionary தொகு

house-House redirect feature இங்கு கேட்டிருந்தேன். அதற்கு பதிலளித்துள்ளார் ஒருவர். இந்த வசதியை இங்கு கொண்டுவரலாமா? -- மாகிர் (பேச்சு) 03:16, 7 செப்டெம்பர் 2012 (UTC)

  • மாகிர், அதை நிச்சயம் கொண்டு வரலாம்.( பழ.கந்தாசாமி) 04:22, 7 செப்டெம்பர் 2012 (UTC)
  • தயங்காமல் செய்யக்கோருகிறேன். ஏற்கனவே, சில சொற்கள், ஆங்கில மேலெழுத்திலேயே உருவாக்கப்பட்டு இருக்கிறது. வெளியூர் பயணத்தில் இருந்தேன். அதனால் தான் உடன் பதில் எழுத இயலவில்லை. திரும்பவும் வந்தமைக்கு மிக்க நன்றி. நீங்கள் ஆடியோ வார்ப்புருவில் பயன்படுத்திய நிரல்களை, மலகசி மொழி விக்சனரியில் அறிமுகப்படுத்தினேன். அவர்களும் அதனை பயன்படுத்துகின்றனர். அங்கு பல வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இப்பணி முடிந்த தும் , அதனை இங்கு செய்ய, அறிமுகப்படுத்துகிறேன். திரும்பவும் சந்திப்போம்.-- உழவன் +உரை.. 14:45, 7 செப்டெம்பர் 2012 (UTC)
  • இவையனைத்தும் ஆங்கில மேலெழுத்தில் வர, இங்கு ஆவண செய்யக்கோருகிறேன்.-- உழவன் +உரை.. 02:13, 25 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

எண்ணுண்மி தொகு

பார்க்க: பேச்சு:எண்ணுன்மி --மதனாஹரன் (பேச்சு) 13:05, 10 செப்டெம்பர் 2012 (UTC)

  தீர்வு -- உழவன் +உரை.. 13:43, 10 செப்டெம்பர் 2012 (UTC)

"https://ta.wiktionary.org/w/index.php?title=விக்சனரி:ஆலமரத்தடி/2012/2&oldid=1194761" இலிருந்து மீள்விக்கப்பட்டது