விக்சனரி பேச்சு:தமிழ் விக்சனரி பக்க வடிவமைப்பு

ஏற்கனவே உள்ள தமிழ் விக்சனரி பக்கங்களின் வடிவைச் சீரமைப்பதுடன், அடுத்து பதிவேற்ற உள்ள சொற்களுக்கும் ஒரு பொதுவான பக்க வடிவமைப்பை உருவாக்குவதற்கான உரையாடல்களை இங்கு மேற்கொள்ளலாம். (ஏற்கனவே இது போன்ற பக்கம் இருந்தால் தயவு செய்து குறிப்பிடுங்கள். இல்லாவிட்டால், இது வரை உள்ள உரையாடல்களுக்கான தொடுப்பை இங்கு தரலாம். உரையாடல்கள் பல இடங்களிலும் சிதறி உள்ளதால் குழப்பமாக உள்ளது)

தமிழ் விக்சனரி பக்க வடிவமைப்புத் திட்டக் காலம்

தொகு

ஆகத்து 01, 2010 முதல் ஆகத்து 15, 2010 வரை. (தேவைப்பட்டால் நீட்டிக்கலாம்)

ஏற்கனவே உள்ள உரையாடல்களுக்கான தொடுப்புகள்

தொகு

--செல்வா 00:27, 30 ஜூலை 2010 (UTC)

உசாத்துணை வெளி இணைப்புகள்

தொகு

இதுவரை உள்ள முக்கிய பக்க வடிவங்கள்.

தொகு
  • நாம் நெடுந்தூரம் செல்ல வேண்டியிருப்பதால், பக்க வடிவினை முடிவு செய்யலாமென்று எண்ணுகிறேன். அவ்வடிவம், பிற மொழி விக்சனரிகளும், பாராட்டும் வகையில் அமைத்தால் சிறப்பாக இருக்கும். அதே போல, நமது அனைத்து பக்கங்களும், ஒரே மாதிரியாக அமையுமாயின் சிறப்பாகும்.

அதற்காக, இதுவரை இங்குள்ள சொற்பக்க வடிவங்களைத் தருகிறேன்.

1) abandonment சொல் வடிவிலேயே, இங்குள்ள அதிக சொற்கள் (90,000 சொற்களுக்கும் மேலாக) இருக்கிறது.

2) dove சொல்லில் ஓரளவு மாற்றங்கள் கலந்தாய்வு செய்யப்பட்டன. அதிலுள்ள படி, பொருளடக்கம் என்ற பக்க வடிவுமுறை வந்தால் நன்றாக இருக்கும். பிற அகரமுதலிகளிடமிருந்து, தமிழ் விக்கி அகரமுதலி சிறப்பாக இருக்க இதுவும் துணை புரியும். உள்ளுள்ள கருத்து வடிவிலும், சில மாற்றங்கள் தேவை.

abandonment சொல்லுக்கும், dove சொல்லுக்குமுள்ள முக்கிய வேறுபாடு யாதெனின், வலப்பக்கம் அமையும் தொகு என்பதே ஆகும். இதனால் ஒரு மொழிக்குள் மாற்றங்களை ஏற்படுத்த, அம்மொழிக்குரிய தொகு மட்டும் பயன்படுத்தினால் போதும்.

3) thou சொல்லின் அமைப்பியல் மாற்றங்களையும் கருத்தில் கொள்ளுங்கள். இதில் வலப்பக்கம் தொகு அமையாது.


4) மற்ற வடிவங்கள்: (அரி), (சிதை), (இசுரோ), (ஐம்பெருங் காப்பியங்கள்), (பரிமாணம்), (நரை), (மத்தகம்), (அணிகலன்), (அதிர்வெண்) --த*உழவன் 00:46, 21 ஜூலை 2010 (UTC)

  • பெரும்பாலன சொற்கள் ஒரு பக்கத்துக்குள்தான் அமையும். மேலே உள்ள தொகு என்னும் தத்தலே/பிரிவே (tab) போதும். இது பற்றி முன்னமே உரையாடியுள்ளோம். உள்ளே உள்தலைப்புகள் வந்தால், தானே தொகு என்னும் தத்தல்/பிரிவு தோன்றும்.
  1. இலத்தீனிய எழுத்துக்களில்லாச் சொற்களில் மட்டும், மேலுள்ள ஒரே தொகு அமைந்தால் சிறப்பென்றே நானும் எண்ணுகிறேன். --த*உழவன் 05:41, 1 ஆகஸ்ட் 2010 (UTC)
  • அரி, dove, மத்தகம் போன்ற பக்கங்கள் பொருத்தமாக இல்லை. இப்படியான அட்டவணைகள் ஒருசிறிதும் பார்க்க எடுப்பாக இல்லாதது மட்டுமல்லாமல் மிகவும் குழப்பமாகவும் உள்ளது. மேலும் ஒரு பயனர் சொற்பொருள்களைச் சேர்க்க வேண்டும் என்றாலோ, திருத்த வேண்டும் என்று நினைத்தாலோ அட்டவணைக்கான விக்கி நிரலில் சிக்கி குழப்பம் ஏற்படுத்த மிகுந்த வாய்ப்ப்பு உள்ளது. அதாவது திருத்துவதும் சேர்ப்பதும் சிக்கலானது, குழப்பமானது. தொக்குக் கடினமானது. பார்க்கவும் எடுப்பில்லாதது.
  1. தற்போதைய அட்டவணை வடிவம் குழப்பத்தையே தரும். இப்போதைய அட்டவணையில் பல வரிகள் ஒரே அமைப்பில் இருக்கிறது. ஒருவரிக்கு ஒரு அட்டவணை. என்று வார்ப்புருக்களை உருவாக்க வேண்டும். அதனை ஒன்றன் மீது ஒன்றாக வைத்தால் அக்குழப்பம் வராது. இதுபற்றி சுந்தரிடம் கேட்டிருந்தேன். அவர் செய்யவேண்டிய மாற்றங்களை எடுத்துரைத்தார். css-ல் padding மாற்றம் செய்யக்கூறினார். அதனை என்னால் களைய முடியவில்லை. திரும்பவும் கேட்க உள்ளேன்.
அட்டவணையைப் பயன்படுத்துவதால் அடுத்தடுத்து தேவையானவைகளை அமைக்கலாம். மற்றொன்று வலப்பக்கமுள்ளscrollஆழியின் பயன்பாடு இல்லாமலே படிக்க இயலும். (எ. கா.) அரிஒருபக்கத்திற்கு ஒரு சொல் பற்றிய அனைத்தினையும், அந்த பக்கம் தோன்றியவுடன், வலப்பக்கமுள்ளscrollஆழியின் பயன்பாடு இல்லாமலே படிக்க முடிந்தால் நன்றாக இருக்குமே என்றே எண்ணுகிறேன்.--த*உழவன் 05:41, 1 ஆகஸ்ட் 2010 (UTC)
  • கூடிய மட்டிலும் (எல்லா இடத்திலும் இயலாது என்பதனை அறிவேன்) சொற்களுக்கு பொருளை சொற்றொடர்களால் விளக்கி எழுத வேண்டும். வெறும் மாற்றுச்சொல் தருவது உண்மையில் சரியான முறை அல்ல. ஒவ்வொரு சொல்லுக்கும் சிறுசிறு பொருள் நிறம் மாறும். ஆகவே அவை சரியான முறை அல்ல. ஆங்கிலச் சொல்லாகவோ, பிறமொழிச் சொல்லாகவோ இருப்பினும், அவற்றின் பொருளைத் தமிழில் சிறுவிளக்கமாகத் தரவேண்டும் (மொழிபெயர்ப்பாக வெறும் தமிழ்ச்சொல்லைத் தருவது சரியான முறையில்லை. ஆனால் சிலபல நேரங்களில் இவற்றைச் செய்யும் நிலையில் இருக்க நேரிடலாம்).
  1. ஒவ்வொரு பொருளையும் பரிமாணம் என்பதிலுள்ள படி, வாக்கியத்தில் அமைத்தால் அதன் பொருள் நன்றாக புரிய வாய்ப்பு அதிகம். விளக்கத்தைத் தெளிவாக எழுத, அனைவராலும் இயலாதெனக் கருதுகிறேன். --த*உழவன் 05:41, 1 ஆகஸ்ட் 2010 (UTC)
  • காடு, thou kichwa போன்றவை சில எடுத்துக்காட்டுகள். அதாவது எளிமையாக எடுப்பாக, பயனுடையதாக இருக்க வேண்டும். கூடியமட்டிலும் உள்ளமைப்புகள் பிரித்துச் சேர்க்ககூடிய தனிப்ப்பிரிவுகள் உடையனவாக(மாடுலர், modular) இருப்பது நல்லது. இதனால்தான் {{பொருள்} {{விளக்கம்}} போன்ற அமைப்புகள் தகுந்தனவாக முன்னர் தேர்ந்தோம். வார்ப்புருக்கள் எளிமையானதாக இருக்க வேண்டும்.
  1. {:{விளக்கம்}} வார்ப்புருவின் நிறமாற்றம் பற்றி(வார்ப்புரு_பேச்சு:விளக்கம்) உங்களின் கருத்தறிய ஆவல்.{:{பொருள்}} {:{விளக்கம்}} போன்ற அடிக்கடி பயன்படும் வார்ப்புருக்களுக்கு உள்ளிணைப்புகள் இல்லாமல் இருத்தல் நலமென்று எண்ணுகிறேன். தேடிவந்த பொருளைப் படிப்பதில் சிரமம் இருப்பதாக இரவியும் உரைத்திருந்தார்.
அனைத்து பக்கத்திலும் மேலேவரும்படி புதுப்பயனர் உதவி | புதிய சொற்களைச் சேர்க்கவும் | Tamil font help | ஆலமரத்தடி இருப்பது போல, தொகுத்தல் குறியீடுகள் என்பதனை அமைத்து, அதில் அனைத்து சொற்களுக்குமான வார்ப்புருக்கள், சுருக்கக் குறியீடுகற்,.. பற்றி குறித்தால் நலமெனக் கருதுகிறேன்.--த*உழவன் 05:41, 1 ஆகஸ்ட் 2010 (UTC)
  • abandonment போன்ற சொற்களைப் பாருங்கள். ஒரு பயனாளர், முதல் 4-5 வரிகளை ஒவ்வொன்றாகப் படித்துப்பார்த்துத் தாண்டி வந்து அவை எதுவும் பொருள் இல்லை என்று அறிந்து கடைசியாக பொருளை அறியுமாறு அமைந்துள்ளது. இதனாலேயே காடு, thou kichwa போன்ற வடிவமைப்புகளை முன்னீடு செய்து முறைபப்டி கருத்துக்கணிப்பு செய்து ஏற்கப்பட்டது. --செல்வா 04:25, 29 ஜூலை 2010 (UTC)

தமிழ் - தமிழ் - பிற மொழிகள் அகராதி வடிவமைப்புப் பரிந்துரை - நற்கீரன்

தொகு
 
தமிழ் விக்சனரி பக்க வடிவமைப்பு:
சொல் (பெயர்ச்சொல்)
பொருள்
சொல் (சொல் வகை 2)
பொருள்
உச்சரிப்பு
சொற்பிறப்பியல்
பயன்பாடு/எடுத்துக்காட்டுக்கள்
இலக்கியத்தில்
இந்திய வழக்கு
இலங்கை வழக்கு
உருபனியல்/தொடர்புடைய சொற்கள்
மொழி பெயர்ப்புகள்
சிங்களம்
சொல் (பெயர்ச்சொல்)
பொருள்
உச்சரிப்பு
...

--Natkeeran 02:53, 28 ஜூலை 2010 (UTC)

  • நக்கீரன், தாங்கள் பரிந்துரைக்கும் வடிவமைப்பில் சிங்களத்தை "மொழி பெயர்ப்புகள்" கீழ் தந்துள்ளீர்கள். அதற்கு முன் "ஆங்கிலம்" இருத்தல் நலம் என நினைக்கிறேன். தமிழ் பேசும் பெரும்பான்மையோர் ஆங்கிலப் பெயர்ப்பை அறிய விரும்புவர்.
  • "பயன்பாடு" என்பதன்கீழ் "இந்திய வழக்கு", "இலங்கை வழக்கு" என்று குறித்துள்ளீர்கள். அது தேவையா? பல வட்டார வழக்குகளுக்கும் அப்பாற்பட்ட விதத்தில்தானே விக்கி செயல்படுகிறது. ஏதாவது ஒரு சொல்லுக்கு அல்லது சொற்றொடருக்கு ஈழத் தமிழ் வழமை குறிப்பது நலம்/தேவை எனப்படின் அப்போது அவ்வாறு குறிப்பிட்டால் பொருத்தமாய் இராதா என்று எண்ணுகிறேன். எடுத்துக்காட்டாக, "ஆம்" என்னும் சொல்லுக்கு ஈழ வழக்கு "ஓம்" என்றால் தேவைப்படும் இடத்தில் குறித்தால் போதாதா? வடிவமைப்பு வேண்டுமா?
  • விக்கியில் ஒரு பிளவை உருவாக்க வேண்டாமே என்பதுதான் எனது பார்வை. மாற்றுக் கருத்து இருந்தால் தெரிவியுங்கள். எது நல்லது எனத் தோன்றுகிறதோ அதை ஏற்க முன்வருகிறேன். நன்றி!--பவுல்-Paul 03:43, 28 ஜூலை 2010 (UTC)
மொழி பெயர்ப்புகளுக்குக் கீழ் அகர வரிசையில் இருக்கும் பிற மொழிகளை இடலாம். பெரும்பாலும் ஆங்கிலமாக அமையலாம். ஆனால் பல சொற்களுக்கு சிங்கள, மலாய், பிரெஞ்சு, நேர்வீயியன், மலையாளம், தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளின் மொழி பெயர்ப்புகள் சேர்ப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன.
வட்டார வழக்குகள் தமிழுக்கு ஒரு பலமே. அகராதியில் வட்டார வழக்குகளைக் குறிப்பது சிறப்பே. கிரியாவின் தற்கால அகராதியில் இவ்வாறு தரப்பட்டுள்ளதைக் காணலாம். --Natkeeran 23:28, 28 ஜூலை 2010 (UTC)

 படத்தில் காட்டியபடி கிரியாவின் தற்கால அகராதி ஃபயர்பாக்சில் தெரிகிறது. எக்ஸ்புளோரரில் தெரிவது போல நன்கு தெரிய என்ன பண்ணனும்?--த*உழவன் 01:20, 1 ஆகஸ்ட் 2010 (UTC)

வா, வாரும், வாங்கோ, வாருங்கோ, வாருங்கள்

தொகு

இப்படி பல எழுத்துக்கூட்டல்களும் வரும் சொற்களைப் எப்படிக் கையாள்வது.  ??--Natkeeran 23:47, 28 ஜூலை 2010 (UTC)

  • சொல்லின் வெவ்வேறு பேச்சுவடிவங்களையும் தரலாம். அவற்றுள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பொதுப் பேச்சுவடிவம் ஒன்று இருந்தால் அதை முன் தரலாம். காட்டாக, வாங்கோ என்பதை விட வாங்க என்பது பெரும்பாலோரால் பயன்படுத்தப்படுவது.
  • மேலும் அப்படிப்பட்ட பேச்சுத் தமிழ்ச் சொற்களை ஒருவர் இட்டால், அதற்கான எழுத்துச்சொல்லை தந்து பொருள்தருவதும் பயனுடையது. அப்படிப்பட்ட சொற்களுக்காகத் தனிப்பகுப்பு உருவாக்கலாம்.
இவை அனைத்தும் வா என்னும் தலைச்சொல்லின் உள்லே இருத்தல் நல்லது. வா, வரு, வர ஆகிய வடிவங்களையும், இறந்தகால வடிவமாகிய வந்தேன், வந்தாய், வந்தான், வந்தாள், வந்தது, வந்தோம், வந்தீர், வந்தார் முதலான வடிவங்களையும் உள்ளே குறிககலாம். இவற்றைத் தானியங்கி வழியாகவும் உருவாக இயலும் (பேரா. தெய்வசுந்தரம் செய்திருக்கின்றார்). --செல்வா 02:54, 29 ஜூலை 2010 (UTC)

எளிய சொற்களில், புரியும் வார்த்தைகளிலும்

தொகு

வேறு மொழிச் சொற்களுக்குப் பொருள் இடும்போது, பயன்பாட்டில் உள்ள சொற்களை நிச்சயம் குறிப்பிடவேண்டும். காட்டாக, உச்சரிப்பு என்பது தமிழில் பிறக்காத சொல்லாக இருந்தாலும், பெரும்பாலோர் பயன்படுத்தும் சொல்லாக உள்ளது. பலுக்கல் என்ற சொல்லைக் அதற்கடுத்துக் குறிப்பிடலாம். ஆனால், பலுக்கல் என்று மட்டுமே குறிப்பிட்டால், பெரும்பாலான வருனர்களுக்குப் புரியாது. (விக்சனரிக்கு வந்தபின் தான் பலுக்கல், உசாத்துணை என்ற பதங்கள் எனக்கு அறிமுகமாயின). தமிழார்வம் உள்ளவர்கள்த் தொடர்ந்து வருவர்; அப்படிப்பட்ட சொற்களின் பொருள் என்ன என்று நாடுவர். ஆனால், நிறைய வருனர்களுக்கு இவை மிரட்டும் சொற்களாக மாறிவிட வாய்ப்புண்டு. ஆதலால், வருனர்களுக்குப் புரியும் தமிழ்ச் சொற்களிலும் பொருள் இருக்கவேண்டும். பழ.கந்தசாமி 00:04, 29 ஜூலை 2010 (UTC)

நீங்கள் சொல்வதை நான் நன்கு அறிவேன். பெரும்பாலானவர்களுக்கு புரியாது என்றால் ஒலிப்பு என்று இடலாம். ஆங்கிலத்தில் etymology என்னும் சொல்லும்கூட மிகவும் மிரட்டலான சொல்தான். பொதுவாக ஓர் ஆங்கிலேயனிடம் கேட்டுப்பாருங்கள். நமக்கு etymon, etyma என்றாலும் தெரிந்திருக்கும், ஆனால் ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்ட பொதுமக்களுக்கு etymology என்பது புரியாது. (In the United States, according to Business magazine, an estimated 15 million functionally illiterate adults held jobs at the beginning of the 21st century. The American Council of Life Insurers reported that 75% of the Fortune 500 companies provide some level of remedial training for their workers. All over the U.S.A. 30 million (14% of adults) are unable to perform simple and everyday literacy activities.[1](இதனை இங்கிருந்து பெற்றேன்). ஆங்கிலத்தில் ஒரு புதிய சொல்லை எப்படி பொறுப்புடன் கற்று உள்வாங்குக்கிறோமோ, அதே மனப்பாங்கு தமிழ்ச்சொற்களைக் கற்கும்பொழுதும் இருக்க வேண்டும் என்பது என் கருத்து. சொல்வளத்தைக் குறைத்துக்கொண்டே போய், புதிதாக சொற்கள் எதுவும் கற்கமாட்டோம், புதிய கருத்துகள், சொற்கள் எல்லாம் எங்களுக்குத் தெரிந்த, நாளும் குறுகிக்கொண்டு வரும், மிகச்சிறு சொற்களாலேயே உருவாக்கப்பட வேண்டும் என்று சிலர் நினைப்பது வளர்ச்சிக்கு வழி வகுக்காது. ஆங்கிலத்தில் ஒரு சொல்லைக் கற்கும் உளப்பாங்கு ஏன் தமிழ்ச்சொல்லைக் கற்கும்பொழுது மட்டும் இருப்பதில்லை?!

--செல்வா 21:59, 29 ஜூலை 2010 (UTC)

பொருள், விளக்கம், ஒத்தசொல்

தொகு

பொருள் என்பது சொல்லின் பொருட் சுருக்கம். விளக்கம் மேலதிக விபரங்கள். இவற்றோடு ஒத்தசொற்கள் என்ற ஒரு பகுதியும் தேவையா, அல்லது அது பொருள் என்ன பகுதிக்குள் அடங்குமா? --Natkeeran 00:40, 29 ஜூலை 2010 (UTC)

  • ஒத்த சொற்கள், சொல்வளம், குழப்பும் சொற்கள் முதலியன சொற்களுக்கிடையேயான உறவையும், பொருள் நயப் பாகுபாட்டை உணரவும் உதவும். பெரும்பாலான தமிழ் அகரமுதலிகள் அவற்றைத் தருவதில்லை, நாம் இதில் முன்னோடியாக விளங்கலாம். பழ.கந்தசாமி 00:48, 29 ஜூலை 2010 (UTC)

Webster's New Collegiate Dictionary மாதிரி

தொகு
  • Vocabulary Entry - அகராதிச் சொல்
  • Pronunciation - உச்சரிப்பு
  • Parts of Speech - சொல் வகை
  • Inflectional Forms - உட்பிணைப்பு வடிவங்கள்/உருபனியல்
  • Etymology - சொற்பிறப்பியல்
  • Definition - வரைவிலக்கணம்/பொருள்
  • Synonymy - ஒத்தசொல்
  • Run on Entries - ..such entries are usually derivative adjectives, adverbs, and nouns
  • Self-explanatory Combinations - "These self-explanatory lists are rather illustrative than exhaustive. The list, at cross shows the vrious ways of combining but by no means all existing combinations. The lists serve also as guides in the use of prefixes and combining forms, most of which, like hyper- and multi- are free for use in forming new compunds as need."
  • Compounds and Phrases
  • Illustrations - படங்கள்

--Natkeeran 00:50, 29 ஜூலை 2010 (UTC)

  • இப்படி முற்றிலும் புதிதாக செய்வதை விட ஏற்கனவே இது பற்றி கலந்துரையாடி அடைந்த முடிவுகளில் சிறுமாற்றங்கள் செய்தால் போதும் என்பது என் கருத்து.
  • தமிழ்ச்சொல்லுக்கு ஓர் எடுத்துக்காட்டு காடு. ஆங்கிலச் சொல்லுக்கு thou.
  • சொற்பிறப்பியல் கொடுப்பதில் பல இடர்கள் உள்ளன. துறையறிஞர்கள் சான்றுகோள்கள் இல்லாமல் தருவது சரியாக அமையாது. இவை பிற அகராதிகளில் இருக்கலாம், ஆனால் அவை தக்க துறையறிஞர்கள் தொகுத்தவை. இவற்றை நாம் சான்றுகோளாக நாம் தரமுடியுமா எனத் தெரியவில்லை
  • கால் என்னும் சொல்லுக்கு 36 சொற்பொருள்கள் உள்ளன. இவை அனைத்துக்கும் 20-30 மொழிகளில் மொழிபெயர்ப்புகள் தரலாம், ஆனால் அவை தொங்குநிரல் (dropdown menu) வழி கீழே தருவது முறையாக இருக்கக்கூடும். மொழி பெயர்ப்புகள் பற்றி என் கருத்துகள் திராவிட மொழிகள் (மலையாளம், கனண்டம் தெலுங்கு), இந்தி, மராட்டி, குசராத்தி, வங்காளி ஆகிய 7 மொழிகளிலும் ஆங்கிலம், எசுப்பானியம், பிரான்சியம், இடாய்ச்சு மொழி, சிங்களம், சீனம், நிப்பானியம், கொரியம் முதலியனவற்றுக்கு முதன்மை தந்து பொருள் சேர்க்கலாம். (இதுவே மிகக் கடினம், ஆனால் உண்மையிலேயே பயனுடையதாக இருக்கும்). இவை அனைத்தும் தமிழ்ச்சொற்களுக்கு மட்டுமே. மற்றமொழிச் சொற்களுக்குத் தமிழில் பொருள் இருந்தால் போதும்.
  • சொல்லிக்கணம் (சொல்லின் வகை, அது பற்றிய இலக்கணக் குறிப்பு), சுருக்கமாக முதலில் இருக்கவேண்டும், ஆனால் சொற்பொருள் முதன்மை பெற வேண்டும். இதே போல பிறமொழிச் சொற்களுக்கு சொல்லொலிப்பும் மிக முக்கியம் ஆனால் இதுவும் சுருக்கமாக ஒரு வரியில் அடங்க வேண்டும். அல்லது பட்டைகட்டிய தனிப் பிரிவில் முதலில் இருக்க வேண்டும்.
  • கூடிய மட்டிலும் எல்லாச் சொற்களுக்கும் படங்கள்சேர்க்க முயலவேண்டும். ஆனால் இவை மிக்வும் பொருத்தமாகவும் துல்லியமானதாகவும் இருக்க வேண்டும்.
  • சொல் வளம் என்பதைவிட ஏறத்தாழ ஒத்த பொருள் தரும் சொற்கள் சேர்க்க வேண்டும். எ.கா: காடு, அடவி, வனம் முதலான.
  • ஒரு சொல்லின் எவ்வெவ் வடிவங்கள் தலைச்சொல்லாகப் பதிவு செய்ய வேண்டும் என்பதும் கருத வேண்டிய ஒன்று.

--செல்வா 02:44, 29 ஜூலை 2010 (UTC)

சொற்பிறப்பியல் பகுதி

தற்போதைய வடிவம் முழுமை பெற்றதாக இல்லை. எ.கா உச்சரிப்பு, சொற்பிறப்பியல், உட்பிணைப்பு வடிவங்கள்/உருபனியல் ஆகியவை பெரும்பாலான அகராதிகளில் இடம்பெறுபவை. பிற மொழிகளில் சொற்களை மட்டும் தருவது போதாது. ஆங்கில விக்கியின் முன்மாதிரியை இங்கு கவனத்தில் கொள்வது நன்று. --Natkeeran 03:07, 29 ஜூலை 2010 (UTC)
நீங்கள் கூறும் அனைத்தும் உள்ளன. ஆனால் எல்லா சொற்களுக்கும் இல்லை. சொற்பிறப்பியல் எல்லாச் சொற்களுக்கும் கிடைப்பது அரிது ஆனால் பகக் உள்ளமைப்பில் இட வசதிகள் உள்ளன (அவை தனிவார்ப்புருக்களாக உள்ளன). வேற்றுமொழிச் சொற்கள் அனைத்துக்கும் ஒலிப்பு தர வேண்டுவது மிக முக்கியமானது. kichwa என்னும் கிசுவாகிலிச் சொல்லைப் பாருங்கள். ಮೂಗು (முகு) என்னும் கன்னடச் சொல்லைப் பாருங்கள். சொற்பிறப்பிய ஒன்று மட்டும் அத்தனை எளிதானதல்ல. venir என்னும் சொல்லில், ஒரு மாதிரிக்காக எசுப்பானியத்தில் வினை வடிவங்களையும் இட்டுப்பார்த்தோம். இதில் சொற்பிறப்பியலும் உள்ளது. --செல்வா 04:40, 29 ஜூலை 2010 (UTC)

ஆங்கிலச் சொற்கள் மற்றும் அதன் தமிழ் சொற்களுக்கான வேர்ச்சொல் அறியும் படி , தலைப்பிலோ , உள் தலைப்பிலோ சொற்களின் இடையில் சிறு கோடிட்டுக் காட்டுதல் நன்று . தமிழ் அகராதி வேர்ச்சொல் அகராதியாகவும் இருப்பது அவசியம் என்பது என் கூற்று . --Inbamkumar86 03:18, 29 ஜூலை 2010 (UTC)

சொற்பிறப்பியல் பகுதி இந்த தகவலைக் கொண்டிருக்கும். --Natkeeran 03:21, 29 ஜூலை 2010 (UTC)

தமிழில் பெரிய அளவில் வெளியாகிவரும் (மிகப்பல தொகுதிகள் வெளி வந்துவிட்டன) சொற்பிறப்பியல் அகராதி இதற்குப் பெருந்துணை புரியும். ஆனால் காப்புரிமம் முதலியன பற்றியும் அறிதல் வேண்டும். தமிழக அரசின் திட்டத்துள் என்பதால், எடுத்து வழங்கும் உரிமம் பெற இயலும்.--செல்வா 13:11, 29 ஜூலை 2010 (UTC)

எண்மிய வடிவில் தேவையற்ற சுருக்கங்கள் ஆங்

தொகு

ஒரு அச்சு அகராதிக்கு அளவு ஒரு பெரும் சிக்கல். அதன் காரணமாக அவர்கள் பல சுருக்கங்களைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் விக்சனரிக்கு அந்த எல்லை இல்லை. ஆங்கவே ஆங், சிங் போன்ற தேவையற்ற சுருக்கங்களைத் தவிர்கலாம். பெ என்பதை பெயர்ச்சொல் என்றே இடலாம். மேலும் விளக்கத்தை இணைப்பு ஊடாகச் சென்று பெறலாம். --Natkeeran 01:00, 29 ஜூலை 2010 (UTC)

இதனை நான் முற்றிலுமாய் ஒப்புகிறேன்.--செல்வா 02:07, 29 ஜூலை 2010 (UTC)

ஒரு பரிந்துரை

தொகு

பெருமளவில் சொற்களை உள்ளீடு செய்ய அணியமாகின்ற இவ்வேளையில் விக்சனரிக்கு ஓர் அடிப்படையான கட்டமைப்பு கட்டாயம் தேவையாகிறது. மேலே நற்கீரன் வெப்ஸ்டர் அகராதி அமைப்பைக் காட்டினார். நான் "க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி - விரிவாக்கித் திருத்திய புதிய பதிப்பு" (2008) பார்த்தேன். வெப்ஸ்டர் ஆங்கிலம்-ஆங்கிலம் என்று மட்டுமே உள்ளது. க்ரியாவோ தமிழ்-தமிழ்-ஆங்கிலம் என்றுளது. விக்சனரி ஏறக்குறைய க்ரியா பாணியில் அமைகிறது. எனவே க்ரியா நமக்கு ஒரு முன்னோடியாகலாம்.

க்ரியா தருகின்ற விரிவான விளக்கத்தை இங்கே பதிவு செய்ய நான் விரும்பவில்லை. விக்சனரி நடைமுறையில், எளிதாகக் கடைப்பிடிக்கக் கூடுமான சில முறைகளையே குறிப்பிட விழைகின்றேன்:
  • க்ரியா அகராதி "பதிவுக்கான சொல்"லைத் தலைச்சொல் என்கிறது. இது தனிச்சொல்லாகவோ கூட்டுச்சொல்லாகவோ இருக்கலாம்

(எடுத்துக்காட்டுகள்: இடம், இணையதளம், உருள், எடு, ஒற்றுமை, சரணாலயம், தம்பட்டமடி, போல், மொழி, வெற்றிலைபாக்கு வை).

தலைச்சொல்
  • தலைச்சொல் ஐந்து வகையான இலக்கண வடிவம் பெறக் கூடும். அவை: வினை, பெயர், வினையடை, பெயரடை, இடைச்சொல் (ஆங்கிலத்தில் முறையே: verb, noun, adverb, adjective, particle).
  • வினைச்சொல் (verb) வினைத்திரிபு அடைவதற்கு முன் உள்ள வடிவத்தில் தரப்பட்டிருக்கும் (எடுத்துக்காட்டுகள்: வா (வி.), போ (வி.), வாழ் (வி.), நில் (வி.)).
  • பெயர்ச்சொல் (noun) எழுவாய் (nominative) வடிவத்திலும் வேற்றுமை உருபு ஏற்பதற்கு முன் உள்ள வடிவத்திலும் தரப்பட்டிருக்கும் (எடுத்துக்காட்டுகள்: அன்பு (பெ.), இவன் (பி.பெ.), கண்கூடு (பெ.), நட்பு (பெ.), வரவுசெலவு (பெ.)).
  • பெயரடை (adjective) பெயரைத் தழுவி வரும். பெயரடைகள் பல்வேறு வடிவங்களில் வரும் (எடுத்துக்காட்டுகள்: அடர்ந்த (பெ.அ.), நல்ல (பெ.அ.), நிறைய (பெ.அ.), மத்திய (பெ.அ.), மிதக்கும் (பெ.அ.), வெளிர் (பெ.அ.)).
  • வினையடை (adverb) வினையைத் தழுவி வரும். வினையடைகள் பல்வேறு வடிவங்களில் வரும் (எடுத்துக்காட்டுகள்: ஆழ்ந்து (வி.அ.), இறுக (வி.அ.), இன்று (வி.அ.), எடுத்தவுடன் (வி.அ.), கட்டோடு (வி.அ.), கிஞ்சித்தும் (வி.அ.), சீரும்சிறப்புமாக (வி.அ.)).
  • சில பெயர்ச்சொற்கள் "-ஆக" ஏற்று வினையடையாகவும் "-ஆன" ஏற்றுப் பெயரடையாகவும் வரும். இவை பின்வருமாறு தரப்பட்டிருக்கும்: ஆசை (பெ.) (-ஆக, -ஆன); ஆடம்பரம் (பெ.) (-ஆக, -ஆன); சீர் (-ஆக, -ஆன); பணிவு (-ஆக, -ஆன).
ஒத்த வடிவத் தலைச்சொற்கள்
  • க்ரியா அடி என்னும் ஒரு தலைச்சொல்லுக்கு ஏழு வேறுபட்ட பொருள்கள் தருகிறது. அவை முறையே அடி1, அடி2...என்று தொடர்கின்றன.
  • தன்வினை, பிறவினை வேறுபாட்டையும் க்ரியா காட்டுகிறது. எடுத்துக்காட்டு: உடை (break)(உடைய, உடைந்து) என்பது ஒருபொருள். உடை(break) (உடைக்க, உடைத்து) என்பது மறுபொருள்.
ஒலிக்குறிப்பு

க்ரியா காட்டும் ஒலி வேறுபாடுகளை வேண்டுமானால் நாம் விட்டுவிடலாம். கதை (kathai), கதை (gathai), பலம் (palam), பலம் (balam).

இலக்கணத் தகவல்
  • மேலே குறிப்பிட்ட வினை, பெயர், வினையடை, பெயரடை, இடைச்சொல் ஆகிய ஐந்தும் தவிர, துணைவினை (து.வி.), வினைமுற்று(வி.மு.) ஆகியவை தரப்படுகின்றன. எடுத்துக்காட்டுகள்: கொள் (து.வி.), போடு (து.வி.), வை (து.வி.). பெற்றுக்கொள், சமைத்துப்போடு, தெரிந்துவை...

வினைமுற்றுக்கு எடுத்துக்காட்டுகள்: ஆயிற்று, இருக்கட்டும், உண்டு, வேண்டும் (வி.மு.). இவை தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய மூவிடங்களுக்கும் பொருந்தும்.

வழக்குக் குறிப்பு
  • க்ரியா அருகிவரும் வழக்கு, பெருகிவரும் வழக்கு, பேச்சு வழக்கு, உயர் வழக்கு, தகுதியற்ற வழக்கு என்று வேறுபடுத்துகிறது. எடுத்துக்காட்டுகள், முறையே: எஜமான், கைபேசி, தலையிறக்கம், எழுந்தருள், பொறுக்கி.
இடம், சமூகம், மதம் தொடர்பான வழக்குக் குறிப்புகள்
  • இதில் க்ரியா இலங்கை வழக்கு, சமூக வழக்கு, மத வழக்கு, துறைபற்றிய வழக்கு போன்றவற்றைத் தருகிறது.

எடுத்துக்காட்டுகள், முறையே: இலையான் (ஈ), உபநயனம், இஃப்தார், உறுதிபூசுதல், ஒருவித்திலைத் தாவரம்.

பொருள்விளக்கம்
ஆங்கிலப் பொருள்
எடுத்துக்காட்டு சொற்றொடர்கள்
படங்கள்
    • எந்த அளவுக்கு நாம் விக்சனரியில் க்ரியா பாணியைப் பின்பற்றலாம் என்பது பற்றி சிந்திக்க வேண்டும். விக்சனரியின் தலையாய குறிக்கோள் தகவல் பகிர்வு என்றால், அது அறிவுப்பூர்வமாக அமைய வேண்டும், எளிமையாக இருக்க வேண்டும், தமிழ் மொழியின் தனித்தன்மையை மதித்து, தற்காலப் பாணியில் விளங்க வேண்டும். உரையாடல் தொடரட்டும்!--பவுல்-Paul 03:46, 29 ஜூலை 2010 (UTC)

அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடி

தொகு

இதை விக்சனரியில் தமிழுக்குப் பயன்படுத்தலாமா? அல்லது தமிழ் உச்சரிப்பை எப்படி விளக்குவது?? ஒலிக்கோப்புச் சேர்ப்பது ஒரு முறை. --Natkeeran 03:09, 29 ஜூலை 2010 (UTC)

ல, ள, ழ / ர, ற / ந, ண, ன - வேறுபாடுகள்

தொகு

தமிழில் இந்தவேறுபாடுகளும் அதன் விளக்கமும் கொண்ட பகுதி சேர்க்கப் பட வேண்டும் . --Inbamkumar86 06:09, 29 ஜூலை 2010 (UTC)

 ஓரளவு இதில் (பகுப்பு:வேற்றெழுத்து வேறுபாடுகள்) முயற்சித்து உள்ளேன். முத்துகுறள் தளத்திலும், tamildict தளத்திலும் தேடு என்பதற்கு தெடு என்று அமைத்திருந்திருந்தனர். அதுபற்றி அவர்களுக்கு தெரியப்படுத்தியவுடன் மாற்றினர். முத்து நமது பங்களிப்பாளராகவும் மாறி விட்டார் என்பதே மகிழ்ச்சி.

பலருக்கு இதனை உருவாக்கினால் பயனளிக்கும் என்று எண்ணியதன் விளைவே, அப்பகுப்பு. {{சொல்வளம்}} என்ற வார்ப்புருவில் அதனைச் சேர்க்கலாம். இது பற்றிய நூல்களை பொள்ளாச்சி.நசன் தொகுத்து வைத்துள்ளார். நமது விக்சனரி குழுமத்தில் கூட ஒரு நூலை இணைத்துள்ளார். உங்களுக்கு தேடுவதில் சிரமமாக இருந்தால், உங்களின் மின்னஞ்சலைத் தெரியப்படுத்துங்கள்--த*உழவன் 06:30, 30 ஜூலை 2010 (UTC)

உள்ளிணைப்புகள்

தொகு

ஒரு பக்கத்தில் உள்ள உள்ளிணைப்புகள் அளவில் குறைந்தும் தேவைப்படும் இடங்களிலும் மட்டும் இருக்க வேண்டும். துணைத்தலைப்புகள் (சொற் பிறப்பு, இலக்கியப் பயன்பாடு), எல்லா பக்கத்திலும் வரும் குறிப்புச் சொற்கள் (பெயர்ச்சொல், ஒருமை, பன்மை, மொழிப் பெயர்கள்) போன்றவற்றுக்கு உள்ளிணைப்பு தேவை இல்லை. ஒரு எடுத்துக்காட்டுக்கு, dove பக்கத்தில் கொச கொச என்று உள்ளிணைப்புகள் இருப்பதால், கவனத்தைச் சிதற வைக்கிறது. சொல்லின் பொருள் குறித்த விளக்கங்களைத் தேடிப் பார்த்தே படிக்க வேண்டி இருக்கிறது. ஒரே பக்கத்தில் திரும்பத் திரும்ப ஒரே சொல்லுக்கு இணைப்பு தருவதைத் தவிர்க்க வேண்டும். dove பக்கத்தில் பொருள், பெயர்ச்சொல், விளக்கம், பயன்பாடு போன்ற சொற்கள் திரும்பத் திரும்ப இணைக்கப்பட்டுள்ளன. சுருக்கமாகச் சொல்வதானால், ஒரு சொல்லைப் பற்றி விளக்கும் போது அதில் உள்ள சொற்களுக்கு உள்ளிணைப்பு தரலாம். மற்ற தலைப்புகள், குறிப்புகளை வெறும் உரையாகவே தரலாம்--ரவி 06:54, 29 ஜூலை 2010 (UTC)

வெற்றுத் துணைத் தலைப்புகள்

தொகு

ஒரு பக்கத்தை உருவாக்குவதற்கான அடிப்படை வார்ப்புரு மிகவும் எளிமையானதாக அனைத்துத் தகவல்களும் உள்ளிடக்கூடியதாகவும் இருக்க வேண்டும். சொற்பிறப்பியல், இலக்கியப் பயன்பாடு போன்ற பல விசயங்களையும் எல்லா சொற்களிலும் உடனடியாகச் சேர்க்க முடியாது. சில பக்கங்களுக்கு இவை தேவைப்படாமலும் இருக்கலாம். எனவே, வெற்றுத் துணைத்தலைப்புகளாக இவற்றை இடுவது தேவையின்றி பக்கத்தின் அளவைக் கூட்டுவதுடன் பக்கம் நிறைவுறா தன்மையைச் சுட்டி நிற்கிறது. இது போன்ற கூடுதல் தகவல்கள் யாவும் ஒவ்வொரு பக்கமாகச் சேர்க்கப்பட வேண்டும்.--ரவி 06:58, 29 ஜூலை 2010 (UTC)

கொடிகளின் படங்கள்

தொகு

மொழிகளுக்குரிய நாட்டுக் கொடிகளின் படங்கள் இடுவது பற்றிய கருத்துப் பகிர்வைக் கண்டேன். சரியான நேரத்தில் இதில் கலந்து கொள்ள இயலாததற்கு வருந்துகிறேன். இந்தக் கொடிப் படங்கள் தேவையில்லை என்றே கருதுகிறேன்.

  • இணையத்தில் உள்ள பல புகழ்பெற்ற அகரமுதலிகளிலும் கூட இது போன்ற கொடிப் படங்களைக் கண்டதில்லை. நாம் இடும் படங்கள் குறிப்பிட்ட சொல்லை விளக்கப் பயன்படுத்துவதாக இருக்குமாறு அமைவது நன்று. ஒரே மாதிரியான படங்கள் திரும்பத் திரும்ப எல்லா பக்கங்களிலும் வர வேண்டாம்.
  • தமிழ், ஆங்கிலம் சொற்களுக்குத் தான் தமிழ் விக்சனரி பெருமளவு பயன்படும். ஏற்கனவே, இது இன்ன மொழி தான் என்று அறிந்துள்ளவர்களுக்குப் படம் இடுவது தேவை அற்றது.
  • பக்கத்தின் முதலிலேயே இந்தப் படங்கள் வருவதால் பெருமளவு கவனத்தைச் சிதற வைக்கிறது. நாட்டுக் கொடியை எல்லாம் பார்த்து விட்டு மொழிப் பெயரைப் படிப்பதற்கு முன் நேரடியாகவே மொழிப் பெயரைப் படித்து விட்டுப் போய் விடுவேன். தெரிந்த மொழிகளுக்குக் கொடி தேவையில்லை. தெரியாத மொழிகளுக்கு அவற்றின் நாட்டுக் கொடியும் தெரியாது.எனவே, கொடியை இட்டும் பயனில்லை.
  • ஆங்கிலம் போன்றவை உலக மொழியாகி வருகின்றன. இவற்றுக்கு ஒரு சில நாட்டுக் கொடிகளை மட்டும் இடுவது அரசியல் நோக்கில் சரி அல்ல.
  • தெலுங்கு, கன்னடம், குசராத்தி என்று பல மொழிகளுக்கும் திரும்பத் திரும்ப இந்தியக் கொடியை இட்டு இந்திய மொழி என்று அடையாளப்படுத்துவது தேவை அற்றது. ஒரு மொழி பேசா நாடுகளில் கொடியை வைத்து மொழியை இனங்காண்பது இயலாது.--ரவி 07:07, 29 ஜூலை 2010 (UTC)

கொடிகள் இடுகிறோமோ இல்லையோ, மொழிக்கென ஒரு பட்டை இருந்தால், கீழே நேரடியாக சொல்லுக்கான பொருள், இலக்கணக் குறிப்பு போன்றவற்றுக்குச் செல்லலாம். அதுவே குறிக்கோள். Hebrew என்று ஒரு தலைச்சொல்லை இட்டுவிட்டு, அடுத்து மிகவும் கொட்டையான எழுத்தில் ஆங்கிலம் என்று கீழே எழுதினால் சரியாக இராது (அது Hebrew என்று எந்த மொழியில் உள்ளதோ அந்த மொழியை குறிக்கும், அதன் பொருளல்ல என்பது இடக்கானது). ஒரு படத்துடன் மொழிப்பெயரை ஒரு பட்டையில் இட்டு மேலே இட்டால், சொல்லுக்கான பொருள்கூறும் பகுதியில் இருந்து அது தனித்து நிற்கும் என்பது கருத்து. ஒரு மொழியைக் குறிக்க (வெறும் எழுத்தாக மட்டும் இல்லாமல்) கொடியைத் தவிர வேறு இருந்தால் நல்லதே. அலங்காரமாக எழுத்தை இடலாம், ஆனால் உரோமன் எழுத்துகளில் பல மொழிகள் உள்ளன. மேலே இரவி கூறுகிறார், பக்கத்தின் முதலிலேயே இந்தப் படங்கள் வருவதால் பெருமளவு கவனத்தைச் சிதற வைக்கிறது. என் கருத்து, அப்படி வருவதால் நேரடியாக சொற்பொருளுக்கு இட்டுச்செல்கின்றது (மொழியைப் பற்றிய அறிவிப்பு, தனியாக மேலே உள்ளது; சொற்பொருளுடன் குழப்பாமல்) என்பது என் உணர்வு. கொடிதான் இருக்க வேண்டும் என்பதே இல்லை, வெறும் எழுத்தாக இல்லாமல் மொழியைச் சுட்டும் ஒரு படம் இருந்தால் நல்லது. அடுத்து, தமிழ், ஆங்கிலம் சொற்களுக்குத் தான் தமிழ் விக்சனரி பெருமளவு பயன்படும். ஏற்கனவே, இது இன்ன மொழி தான் என்று அறிந்துள்ளவர்களுக்குப் படம் இடுவது தேவை அற்றது. என்கிறீர்கள். அப்படியில்லை, பல மொழிகளின் தேவைகளும் உள்ளன. உரோமன் எழுத்தில் எழுதுவதெல்லாம் ஆங்கிலம் அல்ல. ஆகவே மொழியை உணர்த்த வேண்டியுள்ளது. இதனாலேயே கொட்டையான எழுத்தில் ஆங்கிலம் என்று எழுதி முன்னர் அறிவித்துக்கொண்டிருந்தோம். அரசியல் சின்னம் இல்லை என்று முன்னரே உரையாடியுள்ளோம். --செல்வா 13:34, 29 ஜூலை 2010 (UTC)

மொழிப்பட்டையில் உலகில் அம்மொழியைப் பேசும் பகுதிகளைக் காட்டும் படத்தையும் சேர்த்த மொழிப்பட்டை. அப்படத்தைச் சொடுக்கினால்,தெளிவாகப் பார்க்கலாம் எவ்வெவ் பகுதிகளில் அம்மொழி பேசப்படுகின்றது என்று. ஆங்கிலத்துக்கும், எசுப்பானியத்துக்கும் கீழே இட்டுக் காட்டியுள்ளேன்.


--செல்வா 00:23, 30 ஜூலை 2010 (UTC)

  • செல்வா, இடைமுயற்சியாகக் கொடிகளையும் வரைபடத்தையும் எடுத்துவிட்டு, ஒரு தலைச்சொல் இடுகைசெய்து, எசுப்பானியம் (ஆங்கிலம்) என்று மொழிப்பெயர் குறிப்பிட்டு (information:ஆங்கிலம்-பிரான்சியம், எடுத்துக்காட்டாக) மொழிப்பட்டை உருவாக்கிக் காட்டினால் உதவியாயிருக்கும். அத்தோடு, வேறு பல மொழிப்பட்டைகளை இணைப்பாகக் கொண்டுவர முடிந்தால், அதையும் படிமமாகக் காட்டினால், என்னைப் போன்றோர் கருத்துத் தெரிவிப்பது எளிதாகும். நன்றி!--பவுல்-Paul 00:42, 30 ஜூலை 2010 (UTC)
placebo என்னும் பக்கத்தைப் பாருங்கள். இதில் சொற்பிறப்பியல் இரு மொழிக்கும் பொது. ஆகவே அதனை இறுதியில் இட்டுவிட்டு அதற்கு ஒவ்வொரு மொழியிலும் தொடுப்பு தரலாம். (ஆங்கில விக்கியில், சொற்பிறப்பியலை முதலில் தருகின்றனர்). இவ்வடிவதை மெருகூட்டலாம். ஆனால் ஏதேனும் கொடி போன்ற சிறுபடம் இருந்தால் எடுப்பாக இருக்கும் என்பது என் கருத்து. --செல்வா 01:36, 30 ஜூலை 2010 (UTC)
  • செல்வா, placebo பக்கம் பார்த்தேன். கொடி இல்லாமலும் வார்ப்புரு அழகாக உள்ளது. நீலக்கோடு மெருகூட்டுகிறது. இரு மொழிகளையும் எளிதில் வேறுபடுத்தும் வகை உள்ளது. சில ஐயங்கள்:

1) ப்லசீபொ என்னும் ஒலிப்பை எவ்வாறு உறுதிப்படுத்துவது? புறாவில் உள்ளதுபோல் ஆங்கில விக்கிக்கு இணைப்பு கொண்டுசெல்லுமா? புறா ஒலிப்பு கேட்க முயன்றேன். ஆனால், ஒலி மென்பொருள் தரவிறக்கம் செய்யக் கேட்டு செய்தி வந்தது. நிறுத்திவிட்டேன்!

2) எசுப்பானிய விளக்கத்தில் ஒலிப்பு ப்லசீ7பொ3 ; (பன்மை: ப்லசீ7பொsup>3ச்7 என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதில் வருகின்ற 7, 3 போன்ற எண்குறிகளுக்கு விளக்கம் எங்கே காண்பது? விக்சனரி பயனர்களுக்கு விளக்கம் காணும் முறையை எளிதாக்க வேண்டாமா?

3) எசுப்பானிய இடுகையில் உசாத்துணை மற்றும் சொற்பிறப்பியல் கொட்டை எழுத்தில் உள்ளன. அவை இறுதியில் மாற்றப்படும் என நினைக்கிறேன்.

4) வலையத்தில் placebo தேடிப்பார்த்து, ஒலிப்பு கண்டுபிடித்தேன் ப்லசீபொ. இந்த ஒலிப்பினைத் தமிழில் பெயர்த்தெழுத சில வழிமுறைகள் வேண்டுமே! குறிப்பாக, superscript எப்படிப் போடுவது? விக்சனரியில் சொற்களை இடுவோர் இவ்வழிமுறைகளை எங்கே பார்க்கலாம்?

செல்வா, இக்கேள்விகளுக்கெல்லாம் நீங்கள் மட்டுமே பதில் தர வேண்டும் என நான் கேட்கவில்லை. ஆனால், என் உள்ளத்தில் எழுந்த ஐயப்பாடுகளை வெளிப்படுத்தினேன். அவ்வளவே! :)--பவுல்-Paul 04:53, 30 ஜூலை 2010 (UTC)

என் மறுமொழிகளை உங்கள் வரிசையெண் படியே தருகின்றேன். 1) + 2) ஒலிப்பைக் குறிக்க நாம் அனைத்துலக ஒலியெழுத்து வரிசையைப் பயன்படுத்த வேண்டும். இதற்கு முற்றிலும் ஈடான எளிய தமிழ்முறையும் வேண்டும். தமிழ் அட்டவணையை விருபினால் விளக்கத்துடன் அளிக்கின்றேன். ஏன் தமிழ் அட்டவண வேண்டும் என்றும் கூறுகின்றேன். ஒலிப்பைக் காண அவ்வொலிப்பு எழுத்துத் தொடரை சொடுக்கினாலே அதன் விளக்கம் கிடைக்குமாறு அமைக்கப்பெறும் (இப்பொழுது இடைமுயற்சி என்பதால் செய்யவில்லை).

3) ஆம், அது தற்காலிகமாக உள்ளது. மொழிப்பட்டையைக் காண மட்டுமே அவ்விடுகை

4) ப<sup>3</sup> என்று இட்டால் ப3 என்று தென்படும். sup என்பதற்கு மாறாக sub என்று இட்டால் கீழ்ப்பக்கமாக ஒட்டிக்கொண்டிருக்கும் (தென்கிழக்கே ஒட்டிக்கொண்டிருக்கும்). வெவ்வேறு ஒலிகளைத் தமிழில் குறிக்கும் முறைக்கான தொடுப்பை இங்கு சற்று நேரம் கழித்து இடுகிறேன்.

--செல்வா 14:19, 30 ஜூலை 2010 (UTC)

பவுல், உங்கள் முதல் கேள்விக்கு விரிவான மறுமொழி தருதல் வேண்டும். சுருக்கமாக இப்போதைக்கு இவற்றைக் கூற விரும்புகிறேன்: ஒலிப்பை உணர்த்த இரு வழிகள் இருப்பது நல்லது. ஒன்று நேரடியான ஒலிகோப்பை இணைத்தல். இரண்டாவது, முறைசார்ந்த எழுத்தால் எழுதிக் காட்டுதல். அச்சுஅகராதிகள் இந்த இரண்டாம் முறையைப் பின்பற்றுகிறார்கள். இதனை நாம் தமிழ் எழுத்துகள் கொண்டும் எழுத வேண்டும் என்பது என் கருத்து (IPA என்னும் அனைத்துலக ஒலியெழுத்துக் குறியீடுகளுடன் இருப்பதோடு சேர்த்து). Schwa என்னும் குற்றொலிகள் முதல் அனைத்து ஒலிகளையும் எளிதாக ஒரு முறைசார்ந்த குறியீட்டு முறையில் குறித்துத் தேர்ந்துகொள்ளலாம். இதனைப் பற்றிப் பின்னர் எழுதுகிறேன். இப்போதைக்கு ka = க1 அதே போல ga = க3. pa = ப1 அதே போல ba = ப3. காற்றொலி சகரம் Sa = ச7. Jump = ச3ம்ப்1. Shape = சே5ப்1. மேலொட்டுக் குறிகள் புரியாவிட்டாலும் சட்டென்று ஏறக்குறைய அச்சொல்லுக்கான ஒலிப்பை ஒருவாறு புரிந்துகொள்ள இயலும். Brezhnev (Брежнев) என்பதை ப்3ரச்8ன்யேவ் என்று எழுதிக்காட்டலாம். --செல்வா 14:58, 30 ஜூலை 2010 (UTC)

ரவியின் கருத்துடன் ஒத்துப் போகிறேன். கொடிகள் கவனத்தைச் சிதற வைக்கிறது. அத்தோடு அரசியல் சிக்கல்களும் உள்ளன. ஆங்கில மொழிக்கு இந்தியக் கொடி இடமால் விடுதல் எந்த ஏரணத்தில்? --Natkeeran 17:57, 31 ஜூலை 2010 (UTC)
பலரும் கொடி வேண்டாம் எனில் அதனை நான் ஏற்கின்றேன். ஆனால் இதில் அரசியல் இல்லை. இந்தியக் கொடியை ஆங்கிலமொழிக்கும் இடலாம். கொடி இடுவதன் கருத்து, பேசக்கூடியவர்கள் இரூக்கும் எல்லா நாடுகளையும் காட்டுவதல்ல. புதிதாக நான் இணைத்துள்ள வடிவத்தில் எல்லா நாடுகளும் உலகப்படத்தில் காட்டப்பட்டுள்ளது. உங்களில் பலரும் கவனத்தைச் சிதற வைப்பதாக எண்ணினால் வேண்டாம். ஆனால் சிறிது நிறம் இருந்தால் நன்றாக இருக்குமே என்று எண்ணினேன். அது எனக்கு எடுப்பாகவும் பட்டது. படங்கள் உள்ள பக்கங்களையும், படங்கள் இல்லாத பக்கங்களையும் பாருங்கள். படங்கள் உள்ள பக்கங்கள் எடுப்பாக இருக்கும். நீங்கள் அரசியல் முதலான காரணங்களைக் கொண்டு வந்து பார்ப்பதும், எல்லா இடங்களும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் (இது உலகப்ப்படம் இணைப்பது மூலம் தீரும் எனினும்) இது வேண்டாம் என்னும் கருத்துக்கே அடிகோலுகின்றது. எப்படி நாம் எல்லோருமாகச் சேர்ந்து முடிவெடுத்தாலும் சரியே. என் கருத்து கொடிகள் இருந்தால் நன்றாக எடுப்பாக இருக்கும் என்பதே (ஆங்கிலத்துக்கு இந்தியாவின் கொடியையும்

சேர்க்கலாம், எதிர்ப்பில்லை). --செல்வா 20:00, 31 ஜூலை 2010 (UTC)

படங்களின் எண்ணிக்கை

தொகு

ஒரு பக்கத்தில் ஒன்று அல்லது இரண்டு படங்கள் கொடுத்தால் போதும் என்று நினைக்கிறேன். விக்கிப்பீடியாவோ விக்சனரியோ படக் காட்சியகம் இல்லை என்பதை நினைவில்கொள்ளலாம். செல்பேசி, குறைந்த வேக இணைப்புகளில் இருந்து விக்கியை அணுகுவோருக்கும் இது உதவும். தேவைப்பட்டால், விக்கிமீடியா காமன்சில் உள்ள பொருத்தமான பகுப்புக்கு இணைப்பு தரலாம்--ரவி 07:08, 29 ஜூலை 2010 (UTC)

விக்சனரியின் அடிப்படைக் கட்டமைப்பு எப்படி இருக்க வேண்டும்? - ஒரு பரிந்துரை

தொகு
  • இங்கு நடைபெறும் உரையாடலில் ஏற்கெனவே தெரிவித்த கருத்தை மீண்டும் விரித்துக் கூறுகிறேன். தற்போது புதிய சொற்களைச் சேர்க்கவும் என்னும் இணைப்பை அமுக்கி, ஒரு பெயர்ச்சொல்லை இட்டு அமுக்கியதும் கிடைக்கும் வார்ப்புரு:

தமிழ் விக்சனரி பக்க வடிவமைப்பு பெயர்ச்சொல்

பொருள்
விளக்கம்
பயன்பாடு
( மொழிகள் )

ஆதாரங்கள் ---தமிழ் விக்சனரி பக்க வடிவமைப்பு--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு

en:தமிழ் விக்சனரி பக்க வடிவமைப்பு தமிழ் விக்சனரி பக்க வடிவமைப்பு (பெ)

பொருள்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---தமிழ் விக்சனரி பக்க வடிவமைப்பு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

  • இந்த வார்ப்புருவில் விக்சனரி சொற்களுக்குப் பொருளும், விளக்கமும், மொழிபெயர்ப்பும், சொற்பயன்பாடும், உசாத்துணையும் கொடுப்பதற்கான அடிப்படை அமைப்பு ஏற்கெனவே உள்ளது. இம்முறையைத் தொடர்வது நன்று என்பது என் கருத்து.
  • அதை வேண்டுமானால் இன்னும் சிறிது மெருகூட்டலாம். இங்கே கொடி, மற்றும் ஆங்கிலம் தவிர வேறு மொழிகளிலும் பெயர்த்தல் என்னும் பரிந்துரை வருகிறது. இது குறித்து நீண்ட உரையாடல் ஏற்கெனவே நிகழ்ந்தது. இதோ என் கருத்து: கொடி இடுவது பயனர்களுக்கு எவ்வித்தில் பயனளிக்கும்? படங்கள் இடுவது ஒரு சொல்லைப் புரிந்துகொள்வதற்கு எவ்வாறு துணையாகும்?
  • தற்போது வழக்கில் உள்ள அச்சு அகராதிகளில் கொடி இடும் முறை இல்லை. ஆனால், பிற மொழி வலையக விக்சனரிகளில் ஆங்காங்கே உளதென்று செல்வா ஒருமுறை சுட்டிக்காட்டினார். கொடி பற்றியும் என் கருத்தைத் தெரிவித்தேன். பயனர்களுக்குப் பயனாகும் என்றால், மின்னிணைப்பு ஊடக முறையில் எழில் கூட்டும் என்றால் கொடி வரவேற்கத்தக்கதே. எனினும் எந்த நாட்டுக் கொடியை இடுவது/விடுவது என்னும் இடர் தொடர்கிறது.
  • மொழிபெயர்ப்பு குறித்து: ஆங்கிலத்திற்குச் சிறப்பிடம் தர வேண்டும். ஆனால், விக்கியின் பண்பே அதன் உலகளாவிய தன்மை என்பதால் வேறு மொழிகளில் தமிழ்ச் சொற்களைப் பெயர்ப்பதற்கான வாய்ப்புக் கொடுப்பதும், பிற மொழிகளிலிருந்து நேரடி தமிழ் பெயர்ப்பு பெறுவதற்கு வழிவகுப்பதும் சாலச் சிறந்தது.
  • இதையெல்லாம் உள்ளடக்கி வார்ப்புரு உண்டாக்கினால் வெற்றிடம் ஏற்படாதா என்றொரு கேள்வி எழுப்பப்பட்டது. வெற்றிடம் இருக்கும் என்பது உண்மையே. ஆனால் விக்கியின் பண்பே பலரின் பங்களிப்பால் செழுமையடைவது என்பதால் அவ்வெற்றிடங்கள் படிப்படியாக, பயனர் பங்களிப்போடு நிரப்பப்படும் வாய்ப்பு உள்ளது. எனவே நிறைவு பெறாமல் கிடக்கும் இடுகைகள் பற்றி நாம் இப்போது கவலைப்பட வேண்டாம் என்று நினைக்கிறேன்.
  • சென்னைத் தமிழ் அகராதிக்கும், வின்சுலோ அகராதிக்கும், ஆங்கில வலை அகராதிகளுக்கும் தருகின்ற இணைப்புகள் தொடரலாம் என்பது என் கருத்து. சில சொற்களுக்கு அவ்விணைப்புகள் வெற்றிடம் காட்டலாம். ஆயினும் அகராதி இணைப்புகள் பயனுள்ளவையே.
  • இங்கே உரையாடலை நிறுத்துகிறேன். :)--பவுல்-Paul 11:39, 29 ஜூலை 2010 (UTC)

எப்பொழுதும்போல், நீங்கள் மிக அழகாகத் தொகுத்திருக்கின்றீர்கள். என் கருத்துகளைப் பகிர்கிறேன்:

  1. மொழிக்கான ஒரு பட்டை இடுவது நன்றாக இருக்கும் என்பதைவிடத் தேவையாக உள்ளது என்பது என் கருத்து. ஏன் என்பதை மேலே Wiktionary பேச்சு:தமிழ் விக்சனரி பக்க வடிவமைப்பு#கொடிகளின்_படங்கள் என்னும் பகுதியில் எழுதியிருக்கின்றேன். கருத்திடுங்கள்.
  2. பிற மொழிகளிலிருந்து நேரடி தமிழ் பெயர்ப்பு பெறுவதற்கு வழிவகுப்பதும் சாலச் சிறந்தது. விக்சனரி, பல மொழிகளில் ஆய்வு செய்வோருக்குப் பயனுடையதாக இருக்க வாய்ப்பிருக்கின்றது. இந்தி, அரபி, எசுப்பானியம், மலாய், சீனம், சிங்களம் முதலான மொழிகள் முக்கியம் (பலருக்கு). தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இருப்பதால் உறவும் தொடர்பும் நன்கறிய உதவும், உண்மையான பயன்பாடும் இருக்கும். ஆங்கிலத்தின் முக்கியத்தைப் பற்றி யாவரும் அறிவர். விக்சனரியின் மிகுசிறப்புத் தன்மையே பன்மொழிகளில் பல்லாயிரக்கணக்கான சொற்களுக்கு பொருள் உண்டு என்பதாக இருப்பதே (இருக்கப்போவதே). அடி உயிரூட்டமான கருத்தை குறைத்து மதிப்பிடாதிருக்க வேண்டும். பொருட்துல்லியம், நேர்த்தியான வடிவமைப்பு, நல்ல எடுத்துக்காட்டுகள், நம்பி ஊன்றக்கூடிய குறிப்புகள் கொண்டிருப்பது முக்கியம்.

--செல்வா 14:24, 29 ஜூலை 2010 (UTC)

  • மேலே செல்வா, ரவி, நற்கீரன், பழ. கந்தசாமி, த*உழவன் ஆகியோர் தெரிவித்த கருத்துகளை ஊன்றி ஆய்ந்தேன். வேறுபாடுகளுக்கு நடுவிலும் ஒத்த கருத்து படிப்படியாக உருவாவதுபோல் தெரிகிறது:

1) தமிழ், ஆங்கிலம், அல்லது பிற மொழிச் சொல் விக்சனரியில் இடம்பெறும். வார்ப்புரு அமைப்பில் வருவன:

  • தலைச்சொல் (அடைப்புக் குறிக்குள் பெயர்ச்சொல் [பெ.], வினைச்சொல் [வி.], பெயரடை [பெ.அ.], வினையடை [வி.அ.], இடைச்சொல் [இ.])
  • சொற்பொருள்
  • சொல் விளக்கம்
  • எடுத்துக்காட்டு
  • இலக்கியப் பயன்பாடு
  • இலக்கணக் குறிப்பு
  • மொழிபெயர்ப்பு(கள்)
  • உசாத்துணை
  • சொல்வளம்


2) மேலே கூறிய வரிசை முறை (தமிழ் இடுகை) நல்லது என நினைக்கிறேன். தலைச்சொல்லைக் கண்டதும், அது பெயரா வினையா, பெயரடையா வினையடையா, இடைச்சொல்லா என்பதைக் கண்டுகொள்ளலாம். அதன் பொருள் என்னவென்பதே அடுத்த கேள்வி. அச்சொல்லின் விளக்கமும் அது பயன்படுத்தப்படும் விதமும் அறிந்ததும், பிற மொழிகளில் அச்சொல் எவ்வாறுள்ளது என்னும் கேள்விக்கு விடை கிடைக்கும். தொடர்ந்து, உசாத்துணையும், தொடர்புடைய சொற்களும் தரப்படும்.


3) தமிழ்ச் சொற்களுக்கு மொழிபெயர்ப்பை முதலில் தருவதா, பொருள் விளக்கத்தையும் பிற தகவல்களையும் தந்த பிறகு மொழிபெயர்ப்பு தருவதா என்னும் கேள்வி எழுந்தது. "சொல்-பொருள்-பயன்பாடு-இலக்கணம்-மொழிபெயர்ப்பு-உசாத்துணை-சொல்வளம்" என்னும் வரிசை முறை பொருத்தமாயிருக்கும் என்பது என் கருத்து. அதுவே ஒத்த கருத்தாகவும் எனக்குப் படுகிறது.


4) மொழிபெயர்ப்பு வரிசையில் ஆங்கிலம் முதலிடம் பெறலாம் என்பது என் கருத்து. தொடர்ந்து இந்திய/ஆசிய மொழிகள், பிற ஐரோப்பிய/ஆப்பிரிக்க மொழிகள். எல்லாச் சொற்களுக்கும் எல்லா மொழிகளிலும் பெயர்ப்பு இராதே என்றால், வார்ப்புரு உண்டாக்கும்போது ஆங்கிலத்தை மட்டும் குறித்துவிட்டு, "பிற மொழிகள்" என்னும் ஒரே வரியை இட்டால் எப்படி? "பிற மொழிகள்" ஓர் இணைப்பாக இருக்கவேண்டும். அதைச் சொடுக்கியதும் மற்றொரு வார்ப்புரு தோன்றும். அங்கே மொழிவரிசை இருக்கும். அங்கே இடுகைசெய்வோர் மொழிபெயர்ப்புகளை இட்டு, சொல் பக்கம் வந்து மேலேற்றுவர். கணினி நுட்ப அறிவு ஓரளவே உள்ள எனக்கு இங்கே உங்கள் உதவி தேவை :-)


5) அடுத்த கேள்வி: கொடியா, பட்டையா? கொடிதான் இட வேண்டும் என்று வலியுறுத்தவில்லை என்று செல்வா கூறியுள்ளதைக் கவனித்தேன். அதே நேரத்தில் "மொழிப்பட்டை" இடுவது நல்லது என்னும் கருத்து ஏற்புடையதே. குறிப்பாக, Hebrew பற்றி அவர் தரும் தகவலைக் கருத்தில் கொள்ள வேண்டும். மேலும், information, nation, place போன்ற எண்ணிறந்த சொற்கள் ஆங்கிலத்திலும் பிரான்சியத்திலும் உண்டு. அவற்றை ஒரே இடத்தில் "ஆங்" "பிரா" என்று அடையாளம் காட்டும் வழி இருக்க வேண்டும். அதைச் செய்வது எப்படி? (வேறு மொழி இணைகளும் பல உண்டு). தற்போது இருக்கும் பட்டையை அப்படியே விட்டுவிட்டு, கொடியை மட்டும் நீக்கினால் எப்படி? வேறு பட்டைகள் இணைக்க வேண்டுமா?


6) நம் இடுகைகள் பார்வைக்கு அழகாக இருக்க வேண்டும் என்னும் கருத்தும் எழுந்தது. அதிலும் கவனம் செலுத்துவது நல்லது.

  • உரையாடலை இங்கே நிறுத்துகிறேன். உங்கள் கருத்து அறிய விழைகிறேன். --பவுல்-Paul 18:22, 29 ஜூலை 2010 (UTC)

நானும் "சொல்-பொருள்-பயன்பாடு-இலக்கணம்-மொழிபெயர்ப்பு-உசாத்துணை-சொல்வளம்" என்னும் வரிசையே சரியென்று நினைக்கின்றேன். விளக்கம் என்றும் ஒரு பகுதி இருந்தால் நல்லது, அதில் சொல்லைப்பற்றிய சிறப்பான செய்திகள் இருந்தால் சேர்க்கலாம். சொற்பொருளிலேயே இலங்கை வழக்கு, நெல்லை வழக்கு என்று சிற்ப்பாக இருப்பின் அவற்றைக் குறிப்பிட்டுச் சேர்க்கவும் வார்ப்புருக்கள் இருக்க வேண்டும். நீங்கள் தமிழ்ச்சொற்களுக்கான இடுகை என்று சொல்லிய போதும், தமிழ்ச்சொற்களுக்கும் சொற்பிறப்பியல் இருப்பது நல்லது (கிடைப்பது கடினம்). தமிழ்ச்சொற்களுக்கு சொற்பிறப்பியல் இருப்பது போலவே தமிழில் வழங்கும் கடன் சொற்களுக்கும் சொற்பிறப்பியல் தருவது பயனுடையதாக இருக்கும். சொல்-பொருள்-பயன்பாடு போன்ற உள்ளொழுங்கு வரிசைக்கு (குறிப்பாக மொழிபெயர்ப்பு எங்கு வருதல் நல்லது என்பதற்கு) பிறமொழி விக்கிகளையும்கூடப் பார்க்கலாம் (எ.கா. ஆங்கிலம், இடாய்ச்சு). த.இ.ப (இப்பொழுது பெயர் மாறிவிட்டிருக்கின்றது, இரண்டாம் முறையாக!) சொற்கள் கலைச்சொற்களாக இருக்கும் ஆகையால் ஆங்கிலச்சொற்களுக்கான வடிவம் பற்றியும் பேச வேண்டும். இதில் ஒலிப்பு (பலுக்கல்) மிக முக்கியம். தமிழல்லா பிறமொழிச்சொற்கள் அனைத்துக்கும் பலுக்கல் (ஒலிப்பு) தருவது மிக முகன்மையானவற்றுள் ஒன்று. --செல்வா 21:08, 29 ஜூலை 2010 (UTC)

  • செல்வா, விளக்கம் என்னும் பகுதி கட்டாயம் வேண்டும். சேர்க்க மறந்துவிட்டேன். அப்பகுதியில், நீங்கள் சொல்வதுபோல, சொல்லின் வேரடி விளக்கப்படலாம். குறிப்பாக, கலைச்சொற்கள் பல இலத்தீன், கிரேக்க வேர்கள் கொண்டவை. எனவே, வேரடி தருவது பயனுள்ள செயலே. சொற்களுக்கு ஒலிப்பு தருவதை நான் முன்னர் குறிப்பிடவில்லை. ஆங்கிலத்துக்கும் பிற மொழிகளுக்கும் ஒலிப்பு தருவது மிக்க நன்று. --பவுல்-Paul 23:14, 29 ஜூலை 2010 (UTC)

விக்சனரியைப் புரிந்து கொள்ளல் - சில குழப்பங்கள்

தொகு

விக்சனரியின் சிறப்பு ஒரு சொல்லுக்கு பல மொழி விளக்கம் தருதலே ஆகும். இதில் ஒரு குளப்பம் உள்ளது. அம்மா என்ற தமிழ்ச் சொல்லுக்கு mom என்ற விளக்கம் மொழிபெயர்ப்புகள் பகுதியில், ஆங்கிலத்துக்கு கீழே வரும். அதே வேளை mom என்பதற்கு தமிழ் விக்சனரியிலேயே ஒரு பக்கம் இருக்கலாம். mom என்பதற்கு ஆங்கில விக்சனரியிலும் ஒரு பக்கம் இருக்கும். இங்கு அம்மா என்ற பக்கத்தில் mom என்ற சொல்லை பற்றி விரித்துக் கூறுவது தேவையா?

அடுத்தது அம்மா என்ற சொல்லுக்கு mom என்ற இடையிணைப்புப் பொருந்துமா? --Natkeeran 18:01, 31 ஜூலை 2010 (UTC)

தமிழ் விக்கி அகராதியின் குறிக்கோள் எம்மொழிச் சொல்லாக இருப்பினும் அதற்கான பொருள் விளக்கம் முதலியன தமிழில் தருதல் ஆகும். தமிழ்ச்சொற்களுக்கும் அப்படியே ஆனால் தமிழ்ச்சொற்களுக்கு பிற எல்லாமொழிகளின் மொழிபெயர்ப்புச்சொற்களும் தருதல். ஒரு சொல்லின் விரிவான பொருள் தமிழ்ச்சொல்லில் இருக்கும் அல்லது தமிழில் இருக்கும். ஆங்கிலச்சொல்லுக்கு தமிழில் பொருள் தந்தால் போதும், பிரான்சிய மொழியில் தர வேண்டாம் (அதனை பிரான்சிய மொழி அகராதி செய்யும்). எடுத்துக்காட்ட்டாக அம்மா என்னும் சொல்லுக்கு mom, mother, mutter (இடாய்ச்சு) முதலான மொழிகளில் மொழிபெயர்ப்புகள் இருக்கும், தமிழில் விளக்கமும் இருக்கும். அடுத்து mom என்பதற்கும் ஒரு பக்கம் இருக்கும். அங்கு அம்மா, அன்னை என்னும் தமிழ்ச்சொற்களுக்கு மட்டுமான தொடுப்புகள் மட்டுமே இருக்கும் அல்லது தமிழில் அச்சொல்லுக்கான பொருள் மட்டுமே இருக்கும். பிறமொழிபெயர்ப்புகள் அங்கு இராது (அவை தமிழ்ச்சொல்லுக்கான பக்கத்தில் இருக்கும்).--செல்வா 20:11, 31 ஜூலை 2010 (UTC)
இந்தப் பக்கத்தைப் பார்க்க. இதில் ஆங்கிலத்தில் பிற மொழி சொற்கள் பற்றிய மேலதிக விபரங்கள் தரப்பட்டுள்ளன. வெறும் மொழி பெயர்ப்பு மட்டும் அல்ல. --Natkeeran 21:20, 31 ஜூலை 2010 (UTC)
ஆங்கிலச்சொல்லுக்கு ஈடான பிறமொழிச்சொற்களைத் தந்துள்ளார்கள். நாமும் தமிழ்ச்சொல்லுக்குப் பல மொழிகளில் இருந்து தருகிறோம். அங்கே ஆங்கிலச் சொல்லாக்கிய test என்பதற்கு ஆங்கீலத்தில் பொருள் சொல்லியிருக்கின்றார்கள். அப்பொருள்கள் சிலவற்றுக்கோ பல்வற்றுக்கோ பிறமொழி மொழி பெயர்ப்புகள் தந்துள்ளார்கள். அதே உரோமன் எழுத்தில் உள்ள பிறமொழிச் சொற்களுக்கு தொடுப்புகள் கொடுத்துள்ளார்கள். அத் தொடுப்புகளுக்குச் சென்று பார்த்தால், ஆங்கே ஆங்கிலத்தில் அவ்வவ் மொழிச் சொல்லின் பொருளை விளக்கி உள்ளார்கள் (அல்லது ஈடான ஆங்கிலச் சொல் தந்துள்ளார்கள்). நான் மேலே கூறிய அதனையேதான் செய்ய்திருக்கின்றார்கள். அல்லவா?

பக்க வடிவங்கள் - சுருங்கிய வடிவம், நீண்ட வடிவம் - அகராதி வழக்கங்கள்

தொகு
  • ஒருவர் புதிதாக சொல்லை சேர்க்கையில், மேலதிக விளக்கங்கள் இல்லாத நிலையில் ஒரு சுங்கிய வடிவத்தை பயன்படுத்தலாம். அதே வேளை, மேலதிக தகவல்களை சேர்க்கும் பொருட்டு ஒரு நீண்ட வடிவமும் இருக்க வேண்டும். சுருங்கிய வடிவமும் நீண்ட வடிவத்தின் ஒரு உள் கண்மாக இருக்க வேண்டும்.
  • உச்சரிப்பு, சொற்பிறப்பியல் போன்றவை பல அகராதிகளில் இருக்கும் அடிப்படைக் கூறுகள் ஆகும். அவற்றை இங்கு அதே மாதிரி சேர்ப்பதே பயனர்கள் இடையே அச்சு அகராதிக்கும், விக்சனரிக்கும் இடையே ஒரு பரிச்சியத்தை உருவாக்கும்.
  • மொழிபெயர்ப்புகளுக்கு கீழே சொல்வளம் என்ற பகுதி வருவது சரியா, அல்லது அதற்கு மேலே வர வேண்டுமா என்பது கேள்வியாகிறது. எந்த எந்த கூறுகளை எந்த எந்த வரிசையில் இடுகிறோம் என்பதும் முக்கியம்.

--Natkeeran 18:05, 31 ஜூலை 2010 (UTC)

பக்கக் கூறுங்களின் வரிசை/ஒழுங்கு

தொகு

தற்போதைய வடிவில் மொழி பெயர்ப்புகள் இரண்டாவதாக வருகிறது. ஆங்கில விக்கி மாதிரி அந்தச் சொல்லுக்கு முழு விளக்கமும் தருவது என்றால் அதற்குள்ளேயே உச்சரிப்பு, விளக்கம், பயன்பாடு என்று உள் கூறுகள் வரும். இது குளப்பாமாக உள்ளது. --Natkeeran 18:16, 31 ஜூலை 2010 (UTC)

தற்போதைய சொல்வளம் வடிவம் - சில சிக்கல்கள்

தொகு
  • ஆகக் கூடியது மூன்று சொர்களே!
  • மற்ற எல்லாவற்றுக்கு நாம் பட்டியல் போடும் வடிவில் இது இல்லை. புதுப் பயனர்களுக்கு குழப்பமாக இருக்கும்.

--Natkeeran 18:19, 31 ஜூலை 2010 (UTC)

எனக்கும் இது போன்ற பல குழப்பங்கள் எற்ப்பட்டன. ஆகையினால் இது போன்ற மாற்றம் அவசியம் --Inbamkumar86 18:47, 31 ஜூலை 2010 (UTC)

எடுத்துக்காட்டு 1,2,3 ஐ விட . சொல் 1,2,3 என்று குறிப்பிடலாம் .

--Inbamkumar86 16:53, 3 ஆகஸ்ட் 2010 (UTC)

எளிமையும், சீர்மையும்

தொகு

பட்டியல்களே எளிமையாக மேலதிக தகவல்களை சேர்க்க உரிய வடிவம். ஆதாரங்கள், மற்றும் சொல்வளம் ஆகியவற்றில் பயன்படுத்தப்பட்டிருக்கும் முறை சிக்கலானது. எளிதில் புரிந்து கொள்ளக் கூடியதில்லை. ஒன்றுக்கு மேற்பட்ட ஆதாரங்களைச் சேர்க்க முடியாது. மூன்ற்றுக்கு மேற்பட்ட சொற்களைச் சேர்க்க முடியாது. அப்படி முடிந்தாலும், அவை தேவையற்றை சிக்கல் (complexity). தயவு செய்து பரிசீலிக்கவும். --Natkeeran 06:40, 2 ஆகஸ்ட் 2010 (UTC)

  • சொல்வளம், ஆதாரம் இவற்றை அவற்றுக்கான தலைப்புகள் இட்டுப் பட்டியலாக்க்குவது சிறந்ததே. பழ.கந்தசாமி 17:03, 3 ஆகஸ்ட் 2010 (UTC)

தானியங்கிப் பணியைத் தொடங்கும் முன் பயனர்கள் எடுக்க வேண்டிய முடிவுகள்

தொகு

முன்னாள் தமிழ் இணையப் பல்கலைக்கழக்ம் (த.இ.ப) என்று அழைக்கப்பட்ட நிறுவனம் கொடையாகத் தந்த கலைச்சொற்களைத் தானியங்கி மூலம் விக்சனரியில் ஏற்றவிருக்கும் இந்நேரத்தில் அனைத்து விக்சனரியரிகளும் வந்து கருத்துத் தெரிவிப்பது நல்லது. பவுல். கந்தசாமி, நற்கீரன், தகவல் உழவன் நான் ஆகிய ஐவர் மட்டுமே பல்வேறு கருத்துகளை சில காலமாக கருதி வந்துள்ளோம். சில முக்கியமான முடிவுகளை தனியொருவராக முடிவெடுக்காமல் பலரும் கூடிக் கருதி ஒப்புதல் (மறுப்புகள்) தந்து உதவினால் நன்றாக இருக்கும். இது பற்றிய செய்திகளும் பல இடங்களில் சிதறி இருக்கின்றன!!

  1. விக்சனரி பேச்சு:த. இ. ப. சொற்கள் பதிவேற்றத் திட்டம் என்னும் பக்கத்தைப் பார்க்கவும். அதில்,
விக்சனரி பேச்சு:த. இ. ப. சொற்கள் பதிவேற்றத் திட்டம்#மாதிரிப் பக்க வடிவங்கள் என்னும் சிறுபகுதியையாவது பாருங்கள்.
  • பயனர்களிடையே ஒப்புதல் இல்லை எனில், ஒரு கருத்துக் கணிப்பை நடத்த வேண்டியிருக்கும். மேலே உள்ள பக்க வடிவங்களும் அதனோடு படத்தைப் பற்றிய ஒரு முதன்மையான குறிப்பும் பயனர்கள் கருத வேண்டும். ஒரு பக்கத்துக்கு ஒரு படம் அல்லது மிஞ்சிப்போனால் இரண்டு படம் இருப்பதே எடுப்பாகவும் பயனுடையதாகவும் இருக்கும். அப்படி ஏற்றப்படும் படங்களும் பொதுமையானதாக இருக்க வேண்டும். அதாவது அரிதானவற்றைக் காட்டுதல் வேண்டாத சாய்வு தரும். எடுத்துக்காட்டாக மான் என்னும் பக்கத்திலே வெள்ளை மான் படம் இட்டிருப்பது சரியான முறையல்ல (என் கணிப்பில்). பழுப்பு நிறத்தில் உள்ள மான் ஒன்றின் படத்தைத் தந்துவிட்டு, அரிதாக வெள்ளை மானும் உண்டு என்று கூறுதல் நம் கடமை. அதாவது படங்களைக் கருத்துச் சாய்வு பெற்றுவிடாமல் இருக்குமாறு தருதல் வேண்டும்.

நம் முன் இருப்பதாக இருக்கும் பணிகள்:

  • பக்க வடிவம் தேர்தல் (மேலே குறிப்பிட்ட பக்கங்களைப் பார்க்கவும்: Ganesh models, dado, பேச்சு:dado, dado2, dado3, dado4, thou, பேச்சு:thou.
  • ஆங்கிலச் சொற்களுக்கு ஈடான தமிழ்ச்சொற்களுக்கும் தானியங்கியாய் பக்கம் உருவாக்கி அதே ஆங்கிலச்சொல்லை பொருளாக இடலாமா?
  • படங்கள் 1-2 உக்கு மிகாமல் இருக்க வேண்டுமா அல்லது பல இருக்கலாமா
  • கலைச்சொற்கள் சார்ந்த துறையைக் குறித்தல் வேண்டும் அல்லவா?
  • சொற்கள் பெயர்ச்சொல்லா, வினைச்சொல்லா, உரிச்சொல்லா என்னும் குறிப்புகள்
  • பகுப்புகள் இடுவது
  • சான்றுகோள் தருவது (இவை இல்லாவிடிலும், உள் வகுப்பு இருப்பது நல்லதா?)

உங்கள் கருத்துகளைப் பதிவு செய்யுங்கள். என் கருத்துகளைப் பல இடங்களில் பதிவு செய்துள்ளேன். பவுல், கந்தசாமி அவர்களும் பதிவு செய்துள்ளார்கள். --செல்வா 01:54, 20 ஆகஸ்ட் 2010 (UTC)

கணினி கலைச்சொல் களஞ்சியமாக தமிழ் விக்சனரி

தொகு

தமிழ் விக்சனரியை கணினி கலைச்சொல் களஞ்சியமாகவும் பயன்படுத்த முடிந்தால் பயனுள்ளதாக இருக்கும்.

புதிது புதிதாக வெளிவந்துகொண்டிருக்கும் மென்பொருட்களை தமிழ்ப்படுத்த நினைப்பவர்கள் விக்சனரியை தேடினால், அங்குள்ள பரிந்துரைகள் சில சமயம் குழப்பமாக இருக்கிறது. அதாவது இது கணினி மென்பொருட்களுக்கு பயன்படுத்த உகந்த கலைச்சொல்லா என்ற தெளிவு கிடைப்பதில்லை. கணினியில் பயன்படுத்த உகந்த சொற்களை தனியே வகைப்படுத்த முடியுமா?

உதாரணத்திற்கு: http://ta.wiktionary.org/wiki/view எடுத்துக்கொள்வோம். இங்கு பெயர்ச் சொல்லுக்கு கீழ் 3 பரிந்துரைகள் உள்ளன:

  1. பார்வை
  2. நோக்கு
  3. கருத்து

இவற்றில் 'பார்வை' (கருவிப்பட்டைகளில்) என்பது கணினி மென்பொருள் தமிழாக்கத்திற்கு பொருத்தமாக இருக்கும். இதை மென்பொருள் மொழிபெயர்பாளருக்கு ஏதோ ஒரு வழியில் தெரிவிக்க முடிந்தால் பயனுள்ளதாக இருக்கும்.

இது பற்றி மற்ற நண்பர்கள் கருத்தறிய விரும்புகிறேன். --முகுந்த் 01:32, 6 சனவரி 2011 (UTC)Reply

  • முகுந்து, கணினியின் பயன்பாட்டுக்கான பொருள்களை தனியாக உள்ளே தர இயலும். அது போலவே பிற துறைக்கான பொருள்களையும் (கால்நடை, இயற்பியல்..) தர முடியும். இவற்றைத் தனியான பகுப்பில் சேர்ப்பதின் வழியாக தானாகவே தனிப் பகுதியாக தொகுக்கப்பெறும். இங்கே view என்பதற்குத் தோற்றம் (கணினியியல்) என்றும் சேர்க்கலாம். 1000 சொற்கள் எனினும் முனைந்து கலந்துரையாடி செய்தால் 3-4 மாதங்களுக்குள் செய்ய முடியும். --செல்வா 01:41, 6 சனவரி 2011 (UTC)Reply
  • view என்பதில் செய்துள்ள மாற்றம் போதுமானதா? அதனையே பிற சொற்களிலும் பின்பற்றவா?சாய்வு எழுத்துக்களை தவிர்க்கவிரும்புகிறேன். சிறிய எழுத்தேத் தெளிவாகத் தெரிகிறது. --த*உழவன் 01:09, 8 சனவரி 2011 (UTC)Reply


 ( விக்சனரி ஆலமரத்தடி:கணினி கலைச்சொல் களஞ்சியமாக தமிழ் விக்சனரி என்ற இத்தலைப்பிலுள்ளவைகளை, 10 (20.2.2012 )நாட்களுக்குப்பிறகு, இங்கு மாற்றப்பட்டது.)


Return to the project page "தமிழ் விக்சனரி பக்க வடிவமைப்பு".