விசிஷ்டாத்துவைதம்
தமிழ்
தொகு- புறமொழிச்சொல்--சமசுகிருதம்--विशिष्टाद्वैत--விஶிஷ்டா1த்3வைத1--மூலச்சொல்
பொருள்
தொகு- விசிஷ்டாத்துவைதம், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
விளக்கம்
தொகு- திருமால்தான் முழுமுதற் கடவுள் எனும் ஸ்ரீவைஷ்ணவ (வைணவம்) சமயத்தின் இறைநிலைக் கோட்பாடு விசிஷ்டாத்துவைதம் ஆகும்...இது தமிழகத்தில் ஸ்ரீபெரும்பூதூரில் தோன்றிய இராமனுசரால் மிகப்பெரிய அளவில் பரப்புரை செய்யப்பட்டுப் பரவிக் கிளைத்தது..பரமாத்மா எனும் இறைசக்தி ஒன்றுதான்...அதுவே சித்து, அசித்து என வேறுவேறாகக் காணப்படுகிறது.. இருந்தபோதிலும் கடலும், அலையும் வேறுபட்டுக்காணப்படினும், அலை கடலின் ஓர் அங்கமாகவே உள்ளதுபோல அனைத்தும் பரமாத்மா/ ஈசுவரன் என்னும் ஒரே இறைசக்திதான் என்று விசிஷ்டாத்துவைதம் தெரிவிக்கிறது...அந்த பரமாத்மா மஹாவிஷ்ணுதான் என்று கூறும், இந்தச் சமயத்தவருக்கு முதல் குரு/ஆச்சாரியரும், மஹாவிஷ்ணு என்னும் திருமாலேயாகும்..பின்னரே படிப்படியாக மனிதகுலத்தவர் குரு/ஆச்சாரியர்களாக ஆனார்கள்..
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +