திருமாலின் பத்தினியாகிய திருமகள் மக்களுக்கு நல்கும் வரங்களின் தன்மைக்கேற்றவாறு, எட்டு தோற்றங்களில் காட்சியளிக்கிறாள்...ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக, அவளருள் வேண்டி பூசிக்கும் பக்தர்கள் மனதை ஒருமுகப்படுத்தி கண்களைமூடிப் பிரார்த்திக்க, இத்தகைய தனித்தனித் தோற்றங்கள் அவசியமாகின்றன...இவ்வகையில் வாழ்வில் மேற்கொண்டுச் செய்யும் எல்லா நற்காரியங்களிலும் பெரும் வெற்றிதனையீட்டுவதற்கு, பூசனைக்குரிய திருமகளின் உருவத்தோற்றம் விஜயலட்சுமி ஆகும்...சமஸ்கிருதத்தில் விஜய-विजय எனில் வெற்றி எனப் பொருள்...இந்துப் பெண்களின் பெயரை வெற்றி என்றுப் பொருள் தருகிறது என்றெண்ணி விஜயா என்று எழுதுவார்கள்...சமஸ்கிருதத்தில் விஜயா-विजया என்னும் சொல், உயிர் வாங்கும் எமனுடைய பத்தினியின் ஒரு பெயராகும்