வீங்கிருள்
வீங்கிருள் (பெ)
பொருள்
- அடர்ந்த இருள்; மிகுந்த இருட்டு; காரிருள்; கும்மிருட்டு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- extreme darkness
விளக்கம்
வீங்கு என்றால் பெருத்த, பருமையான, விரிவடைந்த என்று பொருள், ஆனால் இங்கு மிகவும் அடர்ந்த என்று பொருள். வெளிச்சம் அறவே இல்லாத மிகுந்த இருள்.
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- பூங்கொடி மடவாள் உமையொரு பாகம் புரிதரு சடைமுடி யடிகள்
- வீங்கிருள் நட்டம் ஆடுமெம் விகிர்தர் விருப்பொடும் உறைவிடம்
- (சம்பந்தர் தேவாரம், திருஓமமாம்புலியூர் )
- வெய்யசெஞ் சோதி மண்டலம் பொலிய
- வீங்கிருள் நடுநல்யா மத்தோர்
- பையசெம் பாந்தள் பருமணி யுமிழ்ந்து
- (ஒன்பதாம் சைவத் திருமுறை, திருவிடைமருதூர்)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---வீங்கிருள்--- DDSA பதிப்பு + வின்சுலோ +