கும்மிருட்டு
கும்மிருட்டு (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- அடர்ந்த இருள்; காரிருள்
- வீங்கிருள் (உயர் வழக்கு, இலக்கிய வழக்கு)
- மையிருட்டு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- அன்று அமாவாசை இரவு. கும்மிருட்டு.
- வெளிச்சம் கிஞ்சித்தும் இல்லாத கும்மிருட்டில் நின்று கொண்டு, கைக்கு தட்டுப்பட்டதைத் தொட்டுத் தடவி, இது-இன்னது-என்று முயற்சித்து சொன்னது, ([1])
- இருட்டு என்றால் பயங்கர இருட்டு. உற்றுப்பார்த்தால் உள்ளங்கை கூடத் தெரியாத கும்மிருட்டு ([2])
- வண்டிக்குள் ஒரே மௌனம்; வண்டிக்கு வெளியே கும்மிருட்டு (கைலாசமய்யர் காபரா, கல்கி)
- மரங்கள் அடர்ந்து நெருங்கிய காட்டுப் பாதை. இருள் பரவ ஆரம்பித்தது என்றால் - வெகுவாக அர்த்த புஷ்டியுடைய வார்த்தைகள் அல்ல - கிழவி கூறிய மாதிரி 'தன் கை தெரியாத கும்மிருட்டு (சங்குத் தேவனின் தர்மம், புதுமைப்பித்தன்)
- கையிலிருந்த சாவியை வைத்துக் கதவைத் திறந்து, உள்ளே சென்றான். உள்ளே கும்மிருட்டு. "நீயா லாரன்ஸ்?" என்றது ஒரு பெண் குரல். கீத், பதிலளிக்காது மின்சார விளக்கு உத்தேசமாக இருக்கும் இடத்தில் கையை வைத்துத் தடவினான். (முதலும் முடிவும், ஜான் கால்ஸ்வொர்த்தி மொழிபெயர்ப்பு, புதுமைப்பித்தன்)
- கும்மிருட்டு. காலால் தடவித் துழாவி நடக்கிறேன் (பேய், எஸ். ஷங்கரநாராயணன்)
- இருபுறமும் முட்செடிகள், தெருவிளக்குகள் ஏதுமற்ற கும்மிருட்டு (சேரி மக்களை விரட்டியடிக்கும் மாநகரங்கள், இசையரசு)
(இலக்கியப் பயன்பாடு)
- மூனா ஆருணாசலமே!
- முச்சந்தி கும்மிருட்டில்
- பேனா குடை பிடித்து
- பேயாட்டம் போடுகிறாய் ((இலக்கிய விவாதங்களும் எல்லைமீறல்களும், ஜெயமோகன்))
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கும்மிருட்டு--- DDSA பதிப்பு + வின்சுலோ +