வைரம்
பொருள்
(பெ)
- வைரம் என்பது படிக நிலையில் உள்ள கரிமக்கல்.
- கடினத்தன்மை, உறுதி
- வீரம்
- அறுபது
- மூர்த்திகன்
- வயிரகடவுள்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
மொழிபெயர்ப்புகள்
- இந்தி - हीरक
விளக்கம்
தொகு
- பட்டை தீட்டிய வைரம் ஒளியை அழகோங்க சிதறச் செய்வதால் நகையணிகள், ஆபரணங்களில் பயன்படுத்தப்படுகின்றது,
- வைரம் நவரத்தினங்களுள் ஒன்றாகும்,
- இயற்கையில் காணப்படும் யாவற்றினும் மிகவயிரம் (வயிரம்=உறுதி) நிறைந்த பொருள் இதுவாகும். ஒரு பொருளின் உறுதியை அளக்கும் அளவீட்டு முறையாகிய மோவின் உறுதி எண் முறையில் வைரத்தின் உறுதி எண் 10 ஆகும்.
- இவ்வுறுதியின் அடிப்படியிலேயே வைரத்திற்கு தமிழ்ப் பெயரும் அமைந்துள்ளது. வயிரம் என்பதில் இருந்து வைரம் என்னும் சொல் உண்டானது.
பயன்பாடு
- இரண்டரை மைல் நடப்பது ஒன்றும் மலை மறிக்கும் காரியம் இல்லை. மலையாடுகள் போல் கால்களில் வைரம் இருந்தது. (எழுத்தறிவித்தவர், நாஞ்சில் நாடன்)
- வைரமுடைய நெஞ்சு வேணும் (பாரதியார்)