அகவிலைப் படி
பொருள்
அகவிலைப் படி, .
- விலைவாசி ஏற்றத்தைக் கணக்கில் கொண்டு அடிப்படை ஊதியத்துக்கு மேல் தரப்படும் கூடுதல் தொகை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- அகவிலை படி என்பதை ஆங்கிலத்தில் dearness allowance என்று சொல்லுவார்கள். அரசு நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு அவர்களுடைய சம்பளம் என்பது - அடிப்படை படி, அகவிலை படி மற்றும் வீட்டு வாடகை படி - இவைகள் அடங்கியதாகும். அடிப்படை படி மாறாமல் இருக்கும். அந்த ஊழியர் வருடாந்திர சம்பள உயர்வு பெறும்போது மட்டுமே இந்த அடிப்படை படி உயரும்; அகவிலை படி என்பது CPI (Consumer Price Index) போன்றவற்றை அடிப்படையாக கொண்டு ஆறுமாதங்களுக்கு ஒரு முறை மாறுதலுக்கு உள்ளானது. அடிப்படை படியை நிலையாக வைத்து அகவிலைப்படியின் சதவீதபடி சம்பளம் உயரும் அல்லது குறையும்.
இந்த வார்த்தை பிரயோகத்தை பார்க்கலாம்: அரசின் பதிவு பத்திர அலுவலகத்தில் வேலை பார்க்கும் திரு ராமனுக்கு இந்த மாதம் அகவிலைப்படி 4 சதவீதம் உயர்ந்ததால், அவருக்கு அந்த மாத சம்பளம் ரூபாய் 50000லிருந்து 52000 ஆக உயர்ந்தது.
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
படி, பஞ்சப்படி, பயணப்படி, தினப்படி, ஊதியம், அடிப்படை ஊதியம், சம்பளம், ஊதிய உயர்வு
( மொழிகள் ) |
சான்றுகள் ---அகவிலைப் படி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற