அனுபவசாலி
அனுபவசாலி (பெ)
- அனுபவம் மிக்கவர்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- very experienced person
விளக்கம்
பயன்பாடு
- அணியில் உள்ள வீரர்கள் பலர் நாட்டுக்காக பல ஆண்டுகள் விளையாடிய நல்ல அனுபவசாலிகள்.
- அறுபத்தியாறு வயதான வில்லிஸ் கடற்பயணத்தில் அனுபவசாலி மட்டுமல்ல; மிகவும் நம்பகமான அதிகாரியும் கூட. (சரித்திரப் பதிவுகள், வந்தியத்தேவன் )
- நான் ஏதோ பெரிய அனுபவசாலி. வயசானவன், கெட்டிக்காரன் என்று அவனுக்கு ஒரு தப்பான அபிப்பிராயம். (ஞானக்கிறுக்கனிடம் சிக்கினேன்!, அப்புசாமி.காம்)
- இளைஞர்கள் எல்லாம் தெரிந்தமாதிரி, கொடுக்கப்பட்ட வேலையை ஏனோதானோவென்றும், தாறுமாறாகவும் வேகமாக செய்து முடிக்கிறார்கள். இளைஞர்கள் செய்து முடித்த அரைகுறையான (அதாவது வெந்ததும் வேகாததுமான நிலையிலுள்ள) வேலை மறுபடியும் அனுபவசாலிகளிடம் ஒப்படைக்கப்படுகிறது. இன்றைய இளையதலைமுறைகள் அனுபவசாலிகளுக்கு ஒரு தலைவலியாகத்தான் இருக்கிறார்கள். (தலைமுறை, சந்தியா கிரிதர்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---அனுபவசாலி--- DDSA பதிப்பு + வின்சுலோ +