ஆகோள்
பொருள்
ஆகோள்(பெ)
- சங்க காலத்தில் போரிற் பகைவர் பசுக்களைக் கவர்ந்துகொள்ளுகை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- seizing the foe's cattle, as a declaration of war
விளக்கம்
பயன்பாடு
- தமிழகத்தில் புலிமான்கோம்பை என்ற சிற்றூரில் கிடைக்கப் பெற்ற மூன்று நடுகற்களுள் ஒன்றில் "கல் பேடு தீயன் அந்தவன் கூடல் ஊர் ஆ கோள்" என்ற எழுத்துப் பொறிப்புள்ளது. இதற்கு, “கூடல் ஊரில் நடைபெற்ற ஆகோள் பூசலில் உயிர்நீத்த பேடு தீயன் அந்தவன் என்பவனுக்கு எடுப்பித்த கல் எனப் பொருள் கொள்வதால் இது வெட்சிப் பூசலில் (போரில்) ஈடுபட்ட வீரனுக்கு எடுக்கப் பெற்றதாகும். (சங்க கால நடுகற்கள் கண்டுபிடிப்பு, ராஜன், கீற்று)
(இலக்கியப் பயன்பாடு)
- ஊர்கொலை ஆகோள் (தொல். பொ. 58)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---ஆகோள்--- DDSA பதிப்பு + வின்சுலோ +