இஃதொரு பேச்சு வழக்கு...அடிக்கடி நிகழாத/நடக்காத விடயங்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது...ஆடி என்பதான மாதம் அல்லது ஆடிப்பெருக்கு என்பதான பண்டிகை ஓர் ஆண்டுக்கொரு முறைதான் வரும்...அதைப்போலவே அமாவாசை எனும் திதியையுடைய நாள் மாதத்திற்கு ஒரு முறைதான் வந்துப் போகும்...இந்தச் சம்பவங்களைப் போலவே, அடிக்கடி நடக்காத, எப்போதாவது ஒரு முறை நடக்கும் விடயங்களைப், பற்றிப் பேசும்போது ஆடிக்கொருதரம் அமாவாசைக்கொருதரம் என்கிற சொற்றொடரைப் பயன்படுத்துவர்...
என் தம்பி இந்த ஊரில்தான் குடியிருக்கிறான்...நான் அவனைப் பார்த்து வெகு நாளாயிற்று...அவன் அடிக்கடி எங்களைப், பார்க்க வருவதில்லை!...எப்போதாவதுதான், ஆடிக்கொருதரம் அமாவாசைக்கொருதரம் வந்து கொஞ்ச நேரம் கழித்துவிட்டுப்போவான்!...அவ்வளவுதான்!!!