ஆளரவம்
பொருள்
ஆளரவம்(பெ)
- மனித சஞ்சாரத்தால் உண்டாகும் சந்தடி
- ஆளரவஞ் சற்றே யடங்கியபின்(பத்ம. தென்றல்விடு. 122).
ஆங்கிலம் (பெ)
விளக்கம்
பயன்பாடு
- வீட்டின் முன்னால் கையில் ஒரு அலுமினியக் கிண்ணத்தோடும் இடுப்பில் பிள்ளையோடும் நெடுநேரம் நின்றாள் விசாலம். வாசலில் இருந்து சத்தமாகக் கூப்பிட்டால்தான் அடுக்களையில் இருப்பவருக்குக் கேட்கும். பசித்திருக்கும் குழந்தைக்குச் சோறு கேட்க வந்திருப்பவள் சத்தமாகக் கேட்பாளா என்ன? யாராவது தலை தட்டுப்படும் வரை நிற்பாள். ஆளரவம் குறைந்த நடுப்பகல் வேளைகளில் யாரும் அவ்வளவு எளிதில் தட்டுப்படுவதில்லை. (தவசி, நாஞ்சில்நாடன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---ஆளரவம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +