பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
பொருள்

உத்தமன்(பெ)

  1. நற்குணம் உடையவன்
  2. மேலானவன்; உயர்ந்தவன்; பெருமதிப்புப் பெற்றவன்
  3. உடல் லட்சணமுடையவன்; ஆணழகன்
  4. (இலக்கணம்)தன்மையிடம்
  5. கடவுள்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. person of integrity, good man
  2. superior person, man of sterling worth
  3. man possessing beauty and symmetry of body
  4. (gram.)first person
  5. The Supreme Being, God who is possessed of all moral attributes
பயன்பாடு

ஒளிஞ்சி மறைஞ்சி ஆட்டம் போட்டு
உத்தமன் போல பேசு
நல்ல கணக்கை மாத்து
கள்ளக் கணக்கை ஏத்து

சிரிப்பு வருது சிரிப்பு வருது
சிரிக்கச் சிரிக்கச் சிரிப்பு வருது

(இலக்கியப் பயன்பாடு)

  • ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி (திருப்பாவை)
  • உடம்பில் உத்தமன் கோயில் கொண்டான் என்று உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே (திருமந்திரம்)
  • உத்தம னித்த னடியார் மனமே நினைத்துருகி (திருவாச. 5, 3)



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

 :குணம் - குணவான் - குணவந்தன் - சற்குணன் - பண்பாளன்


"https://ta.wiktionary.org/w/index.php?title=உத்தமன்&oldid=1241864" இலிருந்து மீள்விக்கப்பட்டது