உன்மத்தம்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
உன்மத்தம்(பெ)
- வெறி, பைத்தியம்
- மயக்கம்
- காமன் கணைகளுள் பைத்தியமுண்டாக்குவது
- காமன் கணைகளில் ஒன்றின் செயல்
- ஊமத்தை, ஊமத்தம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- madness, infatuation, frenzy, delirium, insanity, delusion
- stupor, induced by drugs, mantras, incantations etc
- the arrow of Kama whose dart makes one mad on account of love
- action of one of the five arrows of Kama
- a narcotic and deleterious plant, thorn-apple
விளக்கம்
பயன்பாடு
- உன்மத்தம் முற்றிய ஒரு பௌர்ணமியில்/ தன் பிச்சைப் பாத்திரத்தை/ நீர்த்தொட்டியில் அமிழ்த்தெடுக்கிறாள்/ ஒரு பைத்தியம்/ (காயசண்டிகை, இளங்கோ கிருஷ்ணன், கீற்று )
- யாருக்கும் விட்டுத் தரமாட்டேன் என்ற உன்மத்தம் அவளிடம். அவனுக்குப் புரிந்தது (ஈஸ்வர வடிவு, இந்திரா பாலசுப்ரமணியன், கீற்று )
- மகாபலிபுரத்தின் யானை சிற்பங்களை கண்டிருக்கிறீர்கள் தானே. அவை கல்லை மீறி ஒடி விடத் துடிப்பவை. அந்த யானைகள் உன்மத்தம் கொண்டிருக்கின்றன (யானை பார்த்தல், எஸ், ராமகிருஷ்ணன் )
- உன்மத்தன் - a mad man, a lunatic
(இலக்கியப் பயன்பாடு)
- கன்னத்தில் முத்தமிட்டால், உள்ளந்தான் கள்வெறி கொள்ளுதடி!
- உன்னைத் தழுவிடலோ, கண்ணம்மா உன்மத்தம் ஆகுதடி! (கண்ணன் பாட்டு, பாரதியார் )
- ஓதும் சடையாட உன்மத்த முற்றாட (திருமந்திரம், திருமூலர் )
- உன்மத்தமேற்கொண் டுழிதருமே (திருவாச. 5, 7)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +