உழை
பொருள்
உழை ( வினைச்சொல் )
- உடலாலும் உள்ளத்தாலும் ஒன்றில் அல்லது ஒரு செயலில் ஈடுபடுத்துவது, முயற்சி செய்வது
- உதவு
- பணம், பொருள் முதலியன ஈட்டு, சம்பாதி
- (தன் உடலால்) வருத்தி ஒன்றைச் செய்
பொருள்
உழை ( பெயர்ச்சொல் )
- இடம், பக்கம், அண்மை
- மான், கலைமான் (ஆண்மான்)
- உப்புமண், உவர்மண்
- யாழின் ஒரு நரம்பு
- ஏழிசைச் சுரங்களில் நான்காவதாக வரும் சுரம் உழை.
- பூவிதழ்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
விளக்கம்
- உழை என்பது ஏழிசைச் சுரங்களில் நான்காவதாக வரும் சுரம் உழை.
ஏழிசைச் சுரங்கள் ஆவன முறையே குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம்; இவை முறையே ச.ரி,க, ம, ப, த, நி என்றும் வழங்கும்.
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
{ஆதாரம்} ---> DDSA பதிப்பு வின்சுலோ,