ஒழுங்கை
ஒழுங்கை (பெ)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- ஒழுங்கைகளுக்குப் பெயர்போனது கொக்குவில். அவற்றின்தான் எத்தனை ரகம்? வண்டிப் பாதை, மணல் பாதை, ..முக்கித் தெரு, மூலைத் தெரு, குறுணி ஒழுங்கை., ஒற்றையடிப் பாதை, ஒன்றரையடிப் பாதை இப்படியாக இன்னும் பலப்பல. இப்படிப்பட்ட ஒழுங்கைகளோ புழுதிக்குப் பெயர்போனவை. பிறந்தநாள் தொடங்கி மேற்கூறிய ஒழுங்கைளோடு பழகியவர்களையே சிற்சில சமயங்களில் இவை ஏய்த்துவிடுவதும் உண்டு. பழையபடி புறப்பட்ட இடத்துக்கே கொண்டு போய்ச் சேர்க்கும் அசாத்தியத் திறமை படைத்தவை. இந்த ஒழுங்கைகளில் சைக்கிள் சவாரி செய்வதற்கு அபூர்வப் பழக்கம் வேண்டும். (கோடை மழை, அ.முத்துலிங்கம் சிறுகதை)
- முன்னொரு காலத்தில் யாழ்ப்பாணப் பட்டினத்துக்கு ஒரு புதுப்படம் வந்தால் அதைக் கிராமங்களில் விளம்பரப் படுத்துவதற்கு மாட்டு வண்டில்களைப் பயன்படுத்துவார்கள். வண்டிலின் இரண்டு பக்கங்களிலும் தொங்கும் விளம்பரத் தட்டிகளில் எம்.கே.டி பாகவதரோ, டி.ஆர் ராஜகுமாரியோ, எம்.எஸ். சுப்புலட்சிமியோ, பி.யு.சின்னப்பாவோ காட்சியளிப்பது வழக்கம். மேளம் அடித்தபடி வண்டில் கிராமத்து ஒழுங்கைகளில் ஓடும். அப்படி ஓடும்போது விளம்பரத்துண்டுகளை அள்ளி வீசுவார்கள். (22 வயது, அ.முத்துலிங்கம்)
- ஒழுங்கைகளில் (மழையின்) வெள்ளம் வடிந்து கொண்டிருந்தது. வாத்தியார் எங்கள் வீட்டுப் படலையில் என்னைக் கொண்டுவந்து இறக்கி விடும்போது மணி பத்துக்கு மேலாகிவிட்டது. (பேச்சுப்போட்டி, அ.முத்துலிங்கம்)
- ஒற்றை மாட்டு வண்டியில் ஓர் ஒடுக்கமான ஒழுங்கையில் பயணம் செய்வதுபோலத்தான் இந்த நாவல். ஒரு திருப்பமோ திடுக்கிடலோ ஆச்சரியமோ இல்லாமல் நேராகச் சொல்லப்பட்ட கதை. (மூன்றாம் சிலுவை, அ.முத்துலிங்கம், உயிர்மை)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---ஒழுங்கை--- DDSA பதிப்பு + வின்சுலோ +