ஓட்டம்
ஓட்டம் (பெ)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- Running; speeding; galloping - ஓடுதல்
- speed, swiftness - வேகம்
- current, flow - நீர் ஓடுதல்
- brilliance, as in a gem - இரத்தினங்களின் நீரோட்டம்
- defeat, rout, retreat - தோல்வி
- income, means, resources - வருவாய்
- rising higher in price - விலைமதிப்பு ஏறுகை
- purifying by melting, as gold - உருக்கிச் சுத்தஞ்செய்கை
- quickness of mind - மனம் செல்லுதல், ஈடுபாடு
விளக்கம்
பயன்பாடு
- கிரிக்கெட்டில் இந்திய அணி எத்தனை ஓட்டம் எடுத்தது? - How many runs did India score in cricket?
- தோல்வி அடைந்த நாய் ஓட்டம் எடுத்தது - The dog that lost ran away
- வாசிப்பதில் ஏன் இவ்வளவு ஓட்டம்? - Why such speed when reading?
- அவருக்கு முன்போற் செலவு செய்ய இப்போது ஓட்டமில்லை - He does not have the income to spend as before
- பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் இந்த நகைக்கு ஓட்டமில்லை - This jewel is not worth over Rs. 10000.
- அவனுக்குப் படிப்பில் ஓட்டமில்லை. - His mind is not in studies
- பூங்குழலி காட்டு வழியில் ஓட்டம் பிடித்து ஓடினாள் (பொன்னியின் செல்வன், கல்கி)
(இலக்கணப் பயன்பாடு)
- ஓடு - ஓட்டம்
- ஓட்டப்பாதை
- வெள்ளோட்டம், நீரோட்டம், காற்றோட்டம், மின்னோட்டம், வயிற்றோட்டம்
- தடையோட்டம், தொடரோட்டம்
ஆதாரங்கள் ---ஓட்டம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +