கங்குல்
கங்குல் (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- அமாவாசைக் கங்குல். அதோடு வட கிழக்கில் மேகங்கள் குமுறுகின்றன. இரவு இந்த ஏழையின் குடிசையில் தங்கிவிட்டுக் காலையில் போகலாமே! (பொன்னியின் செல்வன், கல்கி)
(இலக்கியப் பயன்பாடு)
- கங்குல் பகலெங்கண் மற்றொன்றுங் காணற்க! - திருவெம்பாவை. விளக்கம்: இரவும் பகலும் எங்கள் கண்கள் நின்னைத் தவிர வேறொன்றையும் காணாதொழிக.(திருவெம்பாவை - பாடல் - 19, தினமணி, 09 சன 2012)
- கங்கு லும் பகலுங் கண்டுயி லறியாள் (திவ். திருவாய். 7, 2, 1)
- போயிற்றுக் கங்குல் புகுந்தது புலரி (திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு), தொண்டரடிப் பொடியாழ்வார்)
- கங்குல் வெள்ளம் கடலினும் பெரிதே! (குறுந்தொகை)
- இயங்கிடை யறுத்த கங்குல் (சீவக. 1360)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கங்குல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +