கிருகப்பிரவேசம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கிருகப்பிரவேசம்(பெ)
- புதுவீட்டிற் குடிபுகும் போது செய்யும் சடங்கு; புதுமனைப் புகுவிழா
- மணப்பெண்ணைக் கணவன் வீட்டிற்கு முதன் முறை அழைத்துக்கொள்ளும்போது செய்யும் சடங்கு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- ceremony performed when occupying a newly built house
- ceremony performed when a bride is first taken to her husband's house
விளக்கம்
- புறமொழிச்சொல்...வடமொழி...க்3ருஹ் + ப்1ரவேஸம் =கிருகம் + பிரவேசம் =கிருகப்பிரவேசம்...சிலர் இந்தச்சொற்களை கிரகப்பிரவேசம் என்பர்...இது தவறு...கிரகம்(வடமொழி-க்3ரஹ்-) என்றால் கோள் (planet) என்றுப் பொருள்...ஏற்கனவே நாம் பூகிரகம் எனும் இந்த உலகில் பிரவேசம் செய்துவிட்டதால் இந்தப் புது கிரகப்பிரவேசம் என்னும் சொல்லில் வரும் கிரகம் விண்ணிலுள்ள பிறிதொரு கிரகத்தைக் குறிக்கிறது...எவரும் இந்த பூவுலகை விட்டு வேறு உலகில் வீடுகட்டிக்கொண்டு வாழக் குடிபோவதில்லையே!?
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கிருகப்பிரவேசம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
கிருகம் - பிரவேசம் - கிருகபதி - கிருகதேவதை - கிருகத்தன் - புதுமனைப் புகுவிழா