ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கிழடு(பெ)

  1. முதுமை
  2. முதியது; (இளக்காரமாக) முதியவர்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. old age, senility
  2. old thing, said of an animal, of a tree, and contemptuously of a person
விளக்கம்
பயன்பாடு
  • வற்றி ஒடுங்கிய கிழடுகள்தான் அதிகமும். சில பெண்களும்கூட இருந்தார்கள். சிதைந்த உடல்கள். நசுங்கிய உருகிய ஒட்டிய உலர்ந்த முகங்கள். பலர் நினைவில்லாமலோ தூங்கிக்கொண்டோ இருக்க, விழித்திருந்த சிலர் உரக்க கூச்சலிட்டுக்கொண்டும், முனகிக்கொண்டும், கைகால்களை ஆட்டிக்கொண்டும் இருந்தார்கள். (நூறுநாற்காலிகள், ஜெயமோகன்)
  • "தாடி மீசை நரைத்த கிழடுகள் எல்லாம் கூடிப் பேசி என்ன புரட்டி விடுவார்கள்?". "கிழடுகளைப் பற்றி உனக்கு இவ்வளவு நல்ல அபிப்பிராயம் இருக்கும் பட்சத்தில் நான் என்ன சொல்லி என்ன பயன்? நானும் ஒரு கிழவன் தானே? அவர்கள் எல்லாரையும் விடத் தொண்டு கிழவன் நான்..!" (பொன்னியின் செல்வன், கல்கி)

(இலக்கியப் பயன்பாடு)

  • ஒரு கிழட்டந்தணன் (உபதேசகா. சிவபுண்ணிய. 217).

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---கிழடு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :கிழம் - கிழவன் - கிழவி - மூதாட்டி - முதியவர்

"https://ta.wiktionary.org/w/index.php?title=கிழடு&oldid=1048969" இலிருந்து மீள்விக்கப்பட்டது